நாம் எதிர்பாரா நேரத்தில் நமக்கு வரும் ஒரு தொலைபேசி அழைப்பு அதுவும் நாம் ஆதர்சமாய் ஏற்றுக்கொண்ட ஒருவரிடமிருந்து அதிகாலை நம்மை தட்டி எழுப்பினால் நாம் எந்த மனநிலையில் நிற்ப்போம்.அப்படியொரு மனநிலையிலிருந்து, அப்படியொரு அழைப்பை சந்தித்தபின் இதை எழுதுகிறேன்.சிறிதும் தொடர்பே இல்லாத எண்ணிலிருந்து வந்தது அந்த அழைப்பு, அவரத்தான் என்று தெரியும் சிறிது பயம் கலந்த தயக்கத்துடனே வழக்கமாய் வரும் வணக்கம் இல்லாமல் ஹலோ என்றேன். அழைப்புஒலியின் வேகத்தில் மறுப்பக்கதிலிருந்து வார்த்தைகள் வந்தன. வணக்கம் தலைவா என்றேன். "எப்படி இருக்கீங்க, உங்கள நான் தொந்தரவு செய்யவில்லையே"என்றார் என்னது இடையூறா இந்த குரலின் அறிமுகத்துக்காய் ஓராண்டுக்காலம் காத்துக்கிடந்தேன் என்றேன் மனதுக்குள்உங்களுடன் சில தினங்களுக்கு முன்பே பேசவேண்டும் என்று நினைத்தேன், ஏன் தற்கொலை பற்றியெல்லாம் ஸ்டாடஸ் போட்டுரிங்கள் மனம் பக்கென்றது என்றார்.இல்லை தோழரே மனதில் தோன்றியது போட்டேன், இப்போது மனம் தெளிந்துவிட்டது என்றேன்.சந்தோசப்பட்டவர் தாடியெல்லாம் இல்லாமல் ஒருப்புகைபடம் போட்டுல்லிரே மிகவும் அழகாய் இருப்பதாய் சொன்னார் ...