Skip to main content

Posts

Showing posts from 2014

உரையாடல்கள்

   நான் இதுவரை யார் யாருடன் முயங்கினேன் என்பதை யாரிடமும் சொன்னது இல்லை ஆனால் உன்னிடம் சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இருக்கவில்லை. உன்னுடன் இந்த உலகை பற்றி, வாழ்க்கையை பற்றி, காமம் பற்றி, சுய இன்பம் பற்றி, கொக்கையின் பற்றி பேசமுடிகிறது. அதை பங்கிட்டுக்கவும் முடிகிறது, ஏனெனில் உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை.. நாம் நண்பர்களோ, காதலர்களோ அல்லது வேறு எதுவும் இல்லை. நீ சொல்வதைப் போல் நான் ஹூக்காவாகவும், நான் சொல்வதைப் போல் நீ கடலாகவும் இருக்கிறோம். ஆம்! நீ சொல்வது சரி தான். நான் இதுவரை எத்தனையோ மனிதர்களை கடந்து வந்துள்ளேன் ஆனால் யாரிடமும் ஈர மண்னின் வாசனையை நுகர்ந்தது இல்லை, நீயோ புது மழை நாளின் முடிவில் ஊறிப்போன மண்னைப் போல் வாசம் தருகிறாய். உன்னுடனான காமமும் அப்படியானதாக தான் இருக்கிறது. ஏரு உழுத வயலில் வெடித்து கிடக்கும் விளை மண்னை அள்ளி தின்பதான அதனுடன் கூடுவதான உணர்வை தான் நான் பெருகிறேன். ************************************************************************* நாம் எங்கே போகிறோம்? எங்கே போகிறோம் என்று தெரிந்தால் தான் வருவாயா? என் உதடுகள் உன் முதுகில் அழுத்தமாய் பதிந்தன. சில...

அபிரதிகள்!

ஊழிக்காலம் சாம்பல் நிறத்திலான மரணத்தின் சொற்கள் கடவுளர்களின் ஆசியுடன் அந்த நகரத்தின் வீதிகளில் வியாபித்திருந்ததை அவர்கள் பார்த்துக் கொண்டே ஓடினார்கள். நீண்டு கிளை பரப்பியிருந்த கருமையின் விரல்கள், வீழ்ந்துகிடந்த உடல்களின் எரிந்துபோன ஆன்மாக்களை சேகரித்துக் கொண்டிருந்தன. சிவப்பேறிய தன் தங்கக் கரங்களால் அரசர் பறக்கவிட்டுக் கொண்டிருந்த வெள்ளைப் புறாக்கள் அந்த தீவு தேசத்தின் வான்வீதிகளினூடே பயணித்து வடக்கின் மூலையில் நிலை கொண்டிருந்த எரிந்துபோன ஆன்மாக்களின் நாசியில் எச்சமிட்டுப் பறந்ததை மேலை தேசத்து அரியணைகள் கம்பளம் விரித்து ஆரவாரம் செய்த அதே நொடியில்தான், இரும்பு பறவையின் கடைசி அமிலமுட்டை மிச்சமிருந்த ஒரே ஒரு சிறுமியின் கன்னத்தில் முத்தி வெடித்ததில் சிதறிய அவளின் இடதுகால் பெருவிரல் அரசரின் தங்கக் கைகளில் போய் விழுந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. அரசர், சமாதானத்தின் சின்னமாய் அழுகிப்போன அவள் இடதுகால் பெருவிரலினைத் தன் கிரீடத்தில் பதித்து வைத்திருப்பதை அந்தக் கிழவியின் கதை மீண்டும் எனக்கு நினைவுபடுத்திச் சென்றது……. குட்டிதேவதை குட்டிதேவதையை தரிசித்தல் என்பது வார்த்தைகளால் மிகைப் படுத்தப்பட்ட கன...

ஒரு பிரதிக்கு தலைப்பிடுவது என்னளவில் நிச்சயம் கடினமானது தான்!

குடிப்போமா என்றாய் – ஒருநொடி திடுக்கிட்டுப் பார்த்தவன் சரி என்றேன் – அதுதான் மிகச் சரியாக நம் முதல் உரையாடல் – அலைகள் நம் இருவரின் கால்களையும் ஒருசேர நனைத்துக்கொண்டிருந்தன – நாம் வீதியை நோக்கி நடக்க ஆரம்பித்தோம் – இரவு அனேகமாய் 9 மணியை நெருங்கியிருந்தது – ஒரு நொடி நின்றவன், எங்கு குடிப்பது என்றேன் – என்னைப் பார்த்து மௌனமாய் புன்னகைத்தபின் மீண்டும் நடக்க ஆரம்பித்தாய் – நான் உன்னைத் தொடர்ந்து நடக்கலானேன் – என்னையும் உன்னையும் தாங்கியப்படி, உன் ஊதாநிற ஸ்கூட்டர் நகரத்தின் வீதிகளில் ஊர்ந்து கொண்டிருந்தது – நகரத்தின் இரைச்சலுக்கு மத்தியில் ஆழ்ந்த நிசப்பதம் நிலவியது, நம்மிடையே – உன் வாசனைத் திரவியத்தின் நறுமணம் அடிமனதில் ஊடுருவிக்கொண்டிருந்தது, மழைச்சாரலைப்போல்– நான் உன்னைத் தீண்டாமலமரத் தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே இருந்தேன் –நீயும் விடாமல் பிரேக் போட்டுக் கொண்டே வந்தாய் – மதுக்கூடம் வரை நம்மில் அந்த விளையாட்டு தொடரவே செய்தது – ஒருசில முறைகளைத் தவிர அனேகம் நீயே வெற்றி பெற்றாய் – ஒன்று இரண்டு தடவை விளையாட்டின் ஆர்வத்தில் எதிர்பாராமல் பிரேக் பிடித்து வண்டியுடன் கீழேவிழப்போகவும் செய்தோம் –அது...

சிவப்பு உருண்டை

*  “எனக்கு முத்தமிடப் பிடிப்பதில்லை, முத்தங்களில் தோல்கள் மட்டும் தான் முயங்கிக் கொள்கின்றன” என்று சொல்லியபடி அவன் உதடுகளில் முத்தமிட ஆரம்பித்தான். * *   சூரியக் கதிர்கள் வர விரும்பாத அந்த அனாதை நிலத்தை, இருள், மக்கிப்போன எலும்பு குவியல்களின் வடிவத்தில் போர்த்தியிருந்தது. முற்றிலும் சூனியமான அந்த மண் முழுவதும் சாவின் வாசனை, அசைவற்று உறைந்துபோன காற்றுடன் கலந்து கிடந்தது. அங்கு தான் அவன் வாழ்ந்து வந்தான். அவன் ஒருவன் மட்டுமே எல்லாமுமாய் இருந்தான். அவனே மனிதன். அவனே மிருகம், கடவுள், தாவரம், பறவை, பிணி, காதல், காமம், உணவு எல்லாமுமே.. * * *    அவனும் அவனைப் போன்றே தனியாளாய் வேறொரு தேசத்தில் வாழ்ந்தான். அவனும், அவனே மனிதன், அவனே மிருகம், கடவுள், தாவரம், பறவை, பிணி, காதல், காமம், உணவு இப்படி எல்லாமே.. ஆனால் சில யுகங்களுக்கு முன்பு அவனின் தேசத்தில் எல்லோருமே இருந்தனர். அவனுக்கு அம்மா இருந்தாள், அப்பன் இருந்தான், காதலி, மிருகங்கள், நோவுக்காரர்கள், அறிவாளிகள், திருடர்கள், கடவுளர்கள், வேசிகள், அங்கவீனர்கள், எல்லோரும் இருந்தனர், அவனுக்கு மொழியும் இருந்தது . பல்லாயிரம் பகல்களுக்...

துரோகியின் கதையில் இரண்டு அத்தியாயங்கள்

                                                                                          01     துரோகியாக வாழ்வது என்பது மிகவும் இலகுவான ஒன்றாகவே இருக்கிறது. தினசரி நிகழ்வுகளில் பெரிய வித்தியாசங்கள் ஏதுமில்லை, எப்போதும் போல்தான் சுழல்கிறது என் உலகம். ஆனால் ரட்சிப்பவர்கள் இல்லாமல், தியாகிகள் இல்லாமல், புனிதர்கள் இல்லாமல் வாழ்வது மிகவும் அற்புதமாக இருக்கிறது என்றே சொல்வேன். சொல்லப்போனால் ஒரு துரோகியின் வாழ்வில் ஒரு மணித்துளியிலும் துரோகம் நிரம்பியிருக்கவில்லை . . மனிதத்தாலும், காதலாலும், அன்பாலும், முத்தங்களாலும், மதுவாலும் நிரம்பிக் கிடக்கிறது என் உலகம். நான் துரோகத்தின் அடையாளத்துடன் வாழவே பெரிதும் விரும்புகிறேன். கல்வாரி மலைகளில் துரோகத்தின் சிலுவையை சுமந்தபடி அலைந்து கொண்டிருந்த அவன், தான் அறிந்த துரோகி ஒருவனைப் பற்றி கேள்விக்கான பதிலொன்றை அப்படிதான் சொ...
                கசக்கி வீசியெறியப்பட்ட, ஒரு கிழிந்துப்போன இரவின் சிதறல்களில் அழைந்துக் கொண்டிருக்கும் வார்த்தைகளை ஒன்று திரட்டி இப்பிரதி உருவம் கொள்கிறது…..அதிரூபன் உலகை காக்க புறப்பட்ட ஏழாவது நாளில் ஆரம்பித்த அந்த கதை 2007 ஆம் வருடம் மார்ச் திங்கள் ஆறாவது நாளில், சூரியன் அஸ்தமித்து 4 மணி நேரங்கள் கடந்த ஒரு இரவில் தொடைகளின் இடுக்குகளில் வழிந்துக்கொண்டிருக்கும் அவளின் குருதியில் நிலைக்கொண்டது. ஓநாயின் முனங்களுடன் யாரென்றே தெரியாதா அவளின் ஆன்மாவை புசித்த களைப்பின் எச்சங்கள் உதிரும் முன்னே, அடியாழத்தில் மிச்சம் கிடக்கும் அவளின் சுயத்தை, குறிகளைச் சுற்றி நீண்டு கிடக்கும் தன் நகங்களை கொண்டு கீற ஆரம்பித்தான் அவன். வழியும் கண்ணீரின் ஓசை புலப்படாது அழுதுக்கொண்டிருந்தாள் அவள். பிள்ளை பருவத்தில் பன மரத்தடியில் பனங்காய் சுட்டுக்கொண்டிருந்த போது அடி வயிற்றில் எழுந்த பெரும் வலியாலும், கால்களின் இடுக்கில் ஏற்பட்ட பிசுபிசுப்பிலும் பயந்துப் போய் அம்மாவிடம் ஓடிய போது ‘குத்த வைத்து’ அம்மா சொன்ன வார்த்தைகள் அவள் காதுகளில் இப்போதும் ’ஓ’வென்று பாய்ந்துக் கொன்டிருந்த...

இணையதளங்களின் அரசியல் - இளவேனில், லிவின் அனுஷ்யன்

              தொழில்நுட்ப வளர்ச்சியின் பெரும் கொடையான இணையம் மனிதனுக்கு கிட்டிய அதித சக்தி மட்டுமல்ல, இன்றைய மானிட இருப்பின் அச்சாணியாக இருக்கிறது. முதலாளிகளால் உருவாக்கப்பட்ட மிகப்பெரும் சுதந்திர வெளி என்பது தான் இணையத்தின் மாபெரும் நகை முரண்.இன்று சமூகத்தின் இயங்கியலில் மனிதனோடு பின்னிப் பிணைந்திருக்கும் அம்சங்களில் ஒன்று இணையம். அது சமூக வளைத்தளங்கள் , வணிகத் தளங்கள், மெய்நிகர் உலகம்(virtual world), தேடல் பொறிகள், வரைபடங்கள், வழிகாட்டிகள் என மனித செயல்பாடுகளின் அத்தனை வேகத்திலும் ஊடுருவியாகிவிட்டது. நினைவிலி மனம் இருக்கும் இடம் மனிதனின் மூளை என்பதின் இடத்தை பெயர்த்தெடுத்து இணையத்துக்குள் பொருத்தி வைத்துவிட்டதான காலத்தில் வாழ்கிறோம். இணையம் தரும் வசதிகளோடு சேர்ந்த உளவியல் சிக்கல்கள், சமூகத்தின் பொதுத்தன்னைமையில் அல்லது பழக்கவழக்கங்களில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள், நவீன மனதின் சிதைவுகள் பற்றி ஆராயப்பட வேண்டிய தேவை இதில் உள்ளது. சமூகவியலில் எண்ணியல் சமூகவியல்( Digital sociology). தனியொரு பிரிவாக மாறியுள்ளது.           தனி மனிதர்கள...

புன்னகைக்கும் புத்தன் - மாபெரும் சனநாயகத்தின் சர்வதேச அரசியல் கொள்கைகள்

        நாங்கள் குசால் நகரை அடைந்த அந்த தினத்தில் தான் இந்திய சனநாயகம் தனது 67வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருந்தது. கருனாடகத்தின் வீதிகள் எங்கும் மூவர்ண கொடிகள் பட்டொளி வீச காட்சியளித்தன.”பாரத் மாத்தா கி ஜே” குடகு மலைகளின் சிகரங்களில் எதிரொலித்து கொண்டிருந்தது. குசால் நகர் மைசூரிலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில், குடகு மலைகளின் அடிவரத்தில் இருக்கும் ஒரு மலை ஊர். அங்கிருந்து தான் தங்க கோவிலுக்கு போக வேண்டும், சிறு பிள்ளைகள் கூட ”கோல்டன் டெம்பல்” என்று கேட்டால் வழி சொல்கிறார்கள். ஆட்டோவில் 5-6 கிலோமீட்டர் பயணம்…பைலாகுப்பே எனும் கிராமத்தை அடைகிறோம். நாம்ட்ரோலிங் மடத்தின் (Namdroling Monastery) பிரமாண்ட நுலைவாயில் என்னையும், தோழியையும் புன்னகையுடன் வரவேற்றது. அதுதான்"கோல்டன்டெம்பல் " என்று சொல்லப்படும் புத்த கோவிலின் வாசல்.கோவிலாக மட்டும் இல்லாமல் பௌதத்தை போதிக்கும் கல்வி நிலையாமாகவும் இருக்கிறது என்பதை உள்ளே சென்றவுடனே உனர்ந்தோம்..ஒரு தத்துவதை எப்படி கற்பிக்க முடியும் எனும் என் கேள்விக்கு, மதத்தை கற்பிக்க முடியும் என்று பதில் சொன்னபடியே கைகளை பற்றினார் தோழி. ...