ஒரு வாட்சப் உரையாடல் : முன் கதை : நீயும் நானும் கடைசியாக சந்தித்த அந்த நீண்ட இரவின் நீட்சியாக இப்பயணம் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றது . அந்த இரவில் தான் உன் இசையின் மூச்சு காற்றில் நான் கரைந்துக் கொண்டிருந்தேன் , உன் பாடல்களில் படிந்து கிடந்த விடுதலையின் வேட்கை இன்று வரை எனக்கு இனம்தெரியாத அச்சத்தையே கொடுத்து கொண்டிருக்கின்றது . குருட்டு பூனையாய் பதுங்கி கிடக்கும் ஆன்மாவினை உயிர்பித்து அதனுள் விடுதலையின் மோகத்தை தூண்டிவிட எத்தனிக்கும் உனது வரிகளை விட்டு தூரம் ஓடிவிட எத்தனை முயன்றும் முடியாமல் பெருமூச்சுடன் உன் இசையினையே சுற்றி சுற்றி வருகின்றேன் . அன்றைய இரவில் வெயில் தகிக்கும் பாலையின் மூர்கமாய் வழிந்து சிதறிய என் காமம் , நரம்புகள் வழியே கீழிறங்கி வீதியில் அலைந்துக் கொண்டிருந்ததை இப்போதும் நினைவுபடுத்திக்கொள்ள முடிகின்றது ..... நீ ஏதும் அறியாதவள் போல் மொட்டைமாடி சுவரில் சாய்ந்துக் கொண்டு கிட்டார் வாசித்துக் கொண்டிருந்தாய் . நம்மை சுற்றிலும் இருளையும் உன் இசையையும் தவிர வேறெதுவுமிருக்கவில்லை . கருமையான உன் உதடுகளின் ஓரத்தில் புகைந்துக் கொண்டிருந்த சிகரெட்டின் மழை...