Skip to main content

Posts

Showing posts from July, 2018

பேஃபோர்டு சேலத்தின் சரித்திரம்

1 thrice2k (Dylan Kuhn) 1943ஆம்வருடம் ஜூலை 16ஆம் தேதி இரண்டாவது ஆஸ்விச் முகாமான பிர்கெனோ முகாமில் குண்டுகள் வீனாகுவதை தவிர்பதற்காய் நாசி படைகள் கண்டுபிடித்த மிக சிறந்த உக்தியான விஷ வாய்வு கொட்டடிகளில் அடைத்து படுகொலை செய்யப்பட்ட 567 யூதர்களில் ஒரே மலையாள யூதனான பேஃபோர்டு சேலத்தின் கதையை, கேரளத்தின் மேற்கு கரை நகரான கொச்சியின் மட்டன்சேரியில் இருக்கும் யூத பட்டினத்தின் மிச்சமிருக்கும் ஒரே யூத தெருவான சின்னகாக் சந்தில் பல நூறு வருடங்களாய் யார் கண்களுக்கும் புலப்படாது வாழும், உடலிலிருக்கும் ரோமங்கள் அனைத்தும் உதிர்ந்து தோல் எலும்புகளோடு ஒட்டிப்போனவரும், கேரளத்து யூதர்களின் ஆதி மகன்களில் ஒருவருமாகிய யோசப் கோதர் என்னிடம் சொன்ன நாளிலிருந்து சரியாக ஏழு மாதங்கள் கழித்து இந்த கதையினை நான் எழுத ஆரம்பிக்கின்றேன். ஐரோப்பா முழுவதினையும் ஆக்கிரமித்திருந்த இரண்டாம் அகில யுத்தத்தின் நாட்களில் பேஃபோர்டு சேலம், ஸ்காட்லாந்து சென்றது வரலாற்று துயர் இல்லை என்றாலும் காதலின் பொருட்டு அவன் கல்வி கற்ற அபர்தீன் பல்கலைக்கழகமிருந்த அபர்தீன் நகரத்தை விட்டு தன் காதலி லீபா சாசுனுடன் அவளின் பெற்றோர்களை தேடி போ...