பார்வையாளரை அதீத உணர்ச்சிவப்படலுக்கு உள்ளாக்கி அழ வைப்பது என்பது இலகுவான வேலை. ஒரு குறிப்பிட்ட வார்த்தையையோ காட்சியையோ அமைத்து அதைச் சாத்தியப்படுத்திவிட முடியும், இதற்கு மெனக்கெடல் என்று தனியாக எதுவும் தேவையில்லை; மனிதம், அன்பு, காதல்,தாய்மை போன்ற நைந்து போன க்ளிஷே வார்த்தைகளே போதுமானவை. இறுதியில் மனம் கனத்து உச்சிமுகர்ந்து கண்ணீருடன் அப்படைப்பை கொண்டாடுவார் பார்வையாளர். அது எக்காலத்துக்குமான காவியம் என்றும்கொண்டாடப்படலாம். அது எக்காலத்துக்குமான காவியமாக மாறுமா? இந்த கேள்விக்குகாலம் தான் பதில் சொல்ல முடியும் அல்லது இதுவரையிலான செவ்வியல் ஆக்கங்கள் கண்ணீரை மட்டும் மூலதனமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை அல்ல என்றும் பதில் சொல்லலாம். பார்வையாளரை கண்ணீர் மல்கக் கதற விடுவதுதான் கலையின் நோக்கமா? இல்லையென்றால் சமூகத்தில் கலைக்கான வேலை என்ன? இந்தகேள்விக்கான பதில்கள் வேறுவேறு காலங்களில் பல்வேறு வடிவங்களில் பலபல மனிதர்களால் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன, மேலும் கலை என்றால் என்னஎனும்கேள்விக்கு பதில் காணும் கோட்பாட்டுக் கட்டுரை இது இல்லை என்பதால்... தமிழ் உலக சினிமாவை சமைத்தல்: த...