Skip to main content

Posts

Showing posts from April, 2012

தோழியின் கதை

இது சௌமியா என்னிடம் சொன்னா அவள் தோழியின் கதை. அதை நான் அப்படியே அவள் சொன்னதைப் போலவே எந்த மாற்றமுமின்றி எழுத முற்படுகிறேன், இந்த கதையை நான் கேட்டபோது என் தோழியின் கதையும் இப்படியானதாகவே இருப்பது உரைத்தது, என் தோழியின் கதையை யோசிக்கும் போது நான் கதையில் மிக முக்கிய பாத்திரத்தை வகிக்கிறேன் என்பதை உணர்கிறேன்.நான் சௌமியாவினுடைய தோழியின் கதையை தான் எழுதப்போகிறேனா இல்லை எழுதப்போவது என் தோழியின் கதையா ? இல்லை இது என் வாக்குமூலமா?. மேலும் இப்பிரதி கதையல்ல உலகத்தின் எங்கோ ஓர் இடுக்கில் இப்படியான சம்பவம் நடந்தது, நடந்துக்கொண்டே இருக்கிறது சொல்லப்போனால் இது உங்களின் கதையாகவும் இருக்கலாம், இப்பிரதியை படிப்பதும் படிக்காமல் கழிவென ஒதுக்கி தள்ளுவதும் உங்கள் விருப்பம். படித்துமுடித்தவுடன் இதேப்போலான ஓர் கதையை அல்லது சம்பவத்தை நீங்கள் ஏற்கனவே அறிந்ததைப்போலவும் தோன்றலாம் அதுனாலே என்னை என் பிரதியுடன் சேர்த்து நிராகரிக்கலாம், எப்படியாயினும் நான் சொல்லப்போகும் சௌமியாவின் தோழி கதையும், என் தோழியின் கதையும், என் வாக்குமூலதையும் சௌமியாவின் தோழியே பின்வருமாறு சொன்னார் இதயம் இத்துனை வேகமாய் துடிக்கும் என்பதை இப...

எதிர்குரல்: தமிழ் சினிமா சூப் பாடல்களை முன்வைத்து

படைப்புகளுக்கான இலக்கணங்களும், ஒழுக்கங்களும் உலகெங்கும் உடைத்தெறியப்பட்டு படைபாளிகளுகானா படைப்புவெளி எல்லைகளை கடந்து நிற்கும் இன்றையகாலகட்டத்தில் எதை வேண்டுமெனிலும் யார் வேண்டுமென்றாலும் ஓர் படைப்பாய் உருகொடுக்கலாம். அது ஓவியமோ, இலக்கியமோ, இசையோ, நடனமோ, நாடகமோ இல்லை சமகாலத்தின் மிகப்பெரிய ஆதிக்கம் நிறைந்த கலையான சினிமாவாகவும் இருக்கலாம். ஆனால் எந்த படைப்பையினும் அப்படைபுக்கும், படைப்பாளிக்கும் சமுகம் சார்ந்த அக்கறையும், பொறுப்பும் அவசியம். அதிலும் வெகுசனத்தை எளிதில் சென்று சேரும் சினிமாவுக்கு பொறுப்பு மிகஅதிகம்,மக்களின் மனதிற்குள் எளிதில் சென்றுசேரும் திறன் மற்றகலைகளை காட்டிலும் சினிமாவுக்கு அதிகம், ஆனால் நிஜம் எதிர்திசையில் பயணித்துக்கொண்டிருகிறது, நம் சூழலில் தமிழ் சினிமா படைப்பாளிகள் எத்துனை சமுக அக்கறையோடு படமெடுக்கிறார்கள் என்பது பெரும் கேள்வியே. கலையாய் பார்க்கப்படவேண்டிய, வளர்க்கப்படவேண்டிய ஓர் அமைப்பு அமெரிக்கமைய தாக்குதல்களால் உருவான காலம்தொட்டே மலிவு வியாபாரமாய் மட்டுமே செயல்பட்டு வருகிறது, நம் சமுகத்தின் பெரும் அவலமாகவும் நிற்கிறது. அதிசயமாய் எங்காவது ஒன்று இரண்டு நல்லப்படங்...

அனொனிமா - முகம் மறைத்தவள்.

வரலாற்றின் அனைத்துப் பக்கங்களிலும் குருதிக் கறைகளாய் உறைந்து கிடக்கும் அத்தனை போர்களுக்கும் ஒருமித்த கருத்தியல்கள் சில இருக்கின்றன. போர் ஆண்களுக்கானது. வெற்றி, தோல்வி பேதமின்றி பாதிக்கப்படுபவர்கள் பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும். ஒவ்வொரு போரும் ஆயிரமாயிரம் அங்கவீனர்களை, அனாதைகளை, விதவைகளை, மனநிலை பாதித்தவர்களை, புலம்பெயர்ந்தோரை பரிசளிக்கும். வீரம், விடுதலை, இனமானம் இப்படி ஏதோ ஒரு காரணியை வைத்துப் போர்கள் ஆண்களால் நடத்தப்படுகின்றன. காலந்தோறும் எல்லா அரசுகளும், அதிகாரமையங்களும் போருக்குத் தயாராகவே காத்துக்கிடக்கின்றன. போர்களுக்கான தயார்நிலை, ஆளுமை, வெற்றி இவைகளைக் கொண்டே தேசங்களின் வளர்ச்சியும், பெருமையும், முக்கியத்துவமும் நிர்ணயம் செய்யப்படுகின்றன.போர் ஆண்களைக்காட்டிலும் அதிகாரங்களுக்கானது, அதிலிருக்கும் ஆண்களுக்கானது. போரின் எல்லாக் கட்டமைப்புகளிலும் பெண் முழுமையான பாதிப்புகளுக்கு ஆட்படுகிறாள். போரின் பெயரைச் சொல்லி இதுகாலம் வரை எத்துணைக் கோடி வன்புணர்வுகள் நடந்தேறியிருக்கும். காலமாற்றத்தில் போருக்கான சூழல்கள், தன்மைகள், ஆயுதங்கள், காரணிகள் மாற்றம் பெற்றாலும் போர் நிலைத்து நிற்...

பேய்க்கு பயந்து சாத்தானிடம் மாட்டிக்கொண்ட கதை.

நீங்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கும் சமூகமும்,தேசமும் மிகப்பெரியபொருளாதார வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது எனும் பின்பத்தை இந்திய தேசியம் கட்டமைத்துக் கொண்டிருக்கும் தருணத்தில்,பிச்சையெடுக்கும் குடிகளிடம் பிச்சையெடுத்து அப்படியான பின்பம் போலியானதுஎன்று உடைத்தெரிந்துள்ளார்.தமிழக ஆட்சியாளர். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பேய்க்கு பயந்து சாத்தானிடம் மாட்டிக்கொள்ளும் தமிழகம் வழக்கம்போல் இம்முறையும் கொள்ளை கூட்டதிடமிருந்து தமிழகத்தை பாதுகாக்க தமிழர்கள் சர்வாதிகாரியின் கைகளில்மாட்டிக்கொண்டிருக்கின்றனர். மூன்று தமிழர் உயிர்காக்க சட்டபேரவையில் தீர்மானமேற்றி சிறிது நம்பிக்கை தந்த புது ஆட்சியாளர்,சமசீர் கல்வியில் ஆரம்பித்தார் தனது பழைய செயல்பாடுகளை. பரமக்குடி படுகொலைகள்,சமசீர் கல்வி,கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவாய் எதுவும் செயல்படாமல் மௌனம் காப்பது,சட்டமன்ற தீர்மானத்தை முழுமையாய் முரண்கொண்டு மூன்று தமிழர்களுக்கு எதிராய்நீதிமன்றதில் பதில்தந்தது,அண்ணா நூலகத்தை இடமாற்ற முனைந்தது,இறுதியாய்அடிப்படை தேவைகளின் விலையேற்றம்.6.25காசுகள் உயர்த்தப்படிருக்கும்பால்விலை,உயரப்போகும் மின்சார கட்டணம்,உயர்ந்துப்போன பேருந்...