கோதுமை கதிர்கள் நிரம்பிய வயல்வெளிகளுக்கு அடியில் சவபெட்டியினுள் இதுகாலம்உறங்கிகொண்டிருந்த ரஸ்கோல்நிகோவ் சவப்பெட்டியை விட்டு வெளியேவந்து சற்று தொலைவிலிருந்த பீட்டர்ஸ்பெர்க் நகரினை நோக்கி நடக்க ஆரம்பித்தான். பாதை நகரை நோக்கி விரிந்துக்கொண்டிருந்தது.சூரியன் என்றுமில்லாத அதிசியமாய் மேற்கு திசையில் உதித்துக்கொண்டிருந்தது. ஆர்வமும், பதட்டமும் ஒன்றுசேர்ந்து அவனின் கால்கள் நடுங்கின. பீட்டர்ஸ்பெர்க் நகரை அடைந்தவனுக்கு நகரம் அடையாளம் தெரியவில்லை அனைத்தும் மாற்றம்கண்டிருந்தது, தான்தோன்றியாய் வீதிகளில் எதையோ தொலைத்துவிட்டு தேடுபவனைப் போல் தேடிக்கொண்டிருந்தான். அந்த வீதியின் ஓரத்தில் இருந்த மர இருக்கையில் அமர்ந்தவன் கண்களை மூடி பழைய நினைவுகளில் பயணிக்க ஆரம்பித்தான். சில மணிநேரம் கழித்து கண்விழித்த ரஸ்கோல்நிகோவ் தான் தேட வேண்டிய மனிதர்களை மனதில் வரிசைப்படுத்திக்கொண்டான். சோனியா, தன் தங்கை துனியா, நண்பன் ரஸ்மிகின், தன் முன்னால் காதலி நடால்யா, தான் கொலைசெய்த அல்யோனா இவானோவ்னா, மர்மெலாதோவ்.... முடிவு வந்தவனாய் வீதியில் இறங்கினான், அவன் எண்ணம் முழுவதும் தான் கொலைசெய்த அல்யோன...