Skip to main content

Posts

Showing posts from September, 2011

என் மரணவிழா கவிதை

என் மரணவிழாவில் இசைக்கப்படும் கவிதை இப்படியனதாய் இருக்கலாம்... இதோ இங்கு சயனித்து கிடக்கும் இச்சவம்,வரண்டுப்போன ஓர் மாலைநேரத்தில் யாருக்கும் அறிவிக்காமல் தன் உயிரினை வெளியேற்றியது... தடைகளின்றி பொழுதுகடந்து உறங்கிக்கொண்டிருக்கிறது...தன் அடிமை வாழ்வுக்கு ஓய்வுத்தந்து சுதந்திரமாய் கிடக்கிறது. இச்சவம் அடிமையாகவே ஜனித்தது, அடிமையாகவே வாழ்ந்தது அடிமையாகவே மரணித்தது சுதந்திரமடைந்தது... இதுகாலம் தன்குறியை உயர்த்திப்பிடித்து தகுதியேயின்றி பெண்ணியம் பேசி அலைந்துக்கொண்டிருந்தது... மார்க்ஸை, லெனினை புத்தகங்களில் தாங்கியவாறு ஏட்டுசுரைக்காய் புரட்சி பேசித்திரிந்தது... கவிதைகளை எழுத முயற்சித்து இறுதிவரை தோற்றுக்கொண்டேயிருந்தது.. கதைகளில் தோல்விக்கண்டதும் இச்சவம்தான். தனக்கான இருப்பை பதிவுசெய்ய "இசங்களை" பேசித்திரிந்தது பின்நவீன அரிச்சுவடியறியாமல் பின்நவீனம் பேசியது ஆரம்பநிலையிலேயே முடிவுபெற்ற இச்சவத்தின் பிரதிகள் இறுதிவரை முடிவின்றியே முற்றுப்பெற்றன. ஊற்றவே முடியாத மதுவையும் நாவால் நக்கி பருகியது இச்சவம் பித்தோவன் இசைக்காத இசையை இசைத்தாய் எண்ணிக்கொண்டது, நெருடாவை தாண்டிய காதல் கவிதை பட...