Skip to main content

Posts

Showing posts from October, 2012

ஒரு தலித், ஒரு அதிகாரி, ஒரு மரணம் – க.பஞ்சாங்கம் வெளியிடு: காவ்யா. விலை: இந்திய ரூபாய் 85

குறிப்பு: நிச்சயம் இது நூல் விமர்சனமில்லை, எந்த ஒரு படைப்பையும் விமர்சிக்கும் அளவு பெரிய இலக்கிய ஆளுமை நானில்லை. நான் படித்த ஒரு புத்தகத்தை அடுத்தவரும் படிக்கவேண்டும் எனும் நோக்கில் அறிமுகம் செய்கிறேன் அதுமட்டுமே இந்த கட்டுரையின் நோக்கம். இது ஒரு உதவாக்கரை கட்டுரையாக, இலக்கிய ஆளுமையும், விமர்சனதன்மையும் இல்லாத ஒன்றாகவும் இருக்கலாம் ஆனால் நான் வாழும் சமுகத்தில் நடக்கும் மனித அவலம் குறித்து பேசிய பல பிரதிகளில் ஒரு பிரதியை இக்கட்டுரை பேசுகிறது என்பதை மட்டும் என்னால் நிச்சயம் சொல்ல முடியும். நன்றி. “சௌந்தர் படித்து பட்டம் வாங்கி வட்டார போக்குவரத்துக்கு அலுவலகத்தில் பணியாற்றுகிறார். சௌந்தரின் அப்பாவான கேசவன் பச்சைதுண்டு கவுண்டனின் நிலத்தில் பண்ணையாளாய் பத்து வருடங்கள் சேவகம் புரிந்தார். சௌந்தரும் பச்சைதுண்டு கவுண்டனின் மகனான பாஸ்கர்கவுண்டனும் சம வயதினர், ஒரே பள்ளியில் தான் படித்தனர். பாஸ்கர் பனிரெண்டாம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை அப்பனின் விவசாயத்தையும், வட்டி தொழிலையும் பார்த்துக்கொள்கிறான். சௌந்தர் கடன் வாங்க, வட்டி கட்ட என்று அடிக்கடி பாஸ்கர் வீட்டுக்கு வருவான். இதுவரை ஒரு நாள் கூட பா...