Facebook, Twitter கைதுகளால் பயந்துப்போன ஒரு கோழை இதை கதை என்றும், அதை தான் எழுதவில்லை என்றும் சொல்லித்திரிகிறான் நான் இந்த கதையை மிகப் பெரிய வளர்ச்சி பாதையில் சென்றுக்கொண்டிருக்கும் ஒரு தேசத்திலிருந்து எழுதிக்கொண்டிருகிறேன், அதாவது 2020ல் அகிலத்தின் பெரிய வல்லரசாய் மிளிரப்போகும் ஒரு தேசம் (மெதுவாக சொல்லவும் பெரிய அண்ணன்கள் காதுகளில் விழுந்துவிடப் போகிறது). நான் அந்த தேசத்தின் அதி தீவிர 'குடி'மகன். நாங்கள் அறுபது ஆண்டுகளுக்கு முன் பரங்கியர்களின் அடிமைகளாக இருந்தோம், இப்போது விடுதலை அடைந்து விட்டோமா என்று நீங்கள் கேட்டால் நான் அதே கேள்வியை உங்களிடமும் கேட்க வேண்டியிருக்கும். நீங்கள் விடுதலை அடைந்து விட்டீர்களா? நீங்கள் எப்படி சனநாயகத்தின் பெயரில், கம்யூனிசத்தின் பெயரில், விடுதலையின் பெயரில், சர்வாதிகாரத்தின் பெயரில், இனமானத்தின் பெயரில் அடிமைகளாக இருகிரீர்களோ அதே போல் தான் நாங்களும் தேசியத்தின் பெயரில், இனத்தின் பெயரில், சனநாயகத்தின் பெயரில், மனுவின் பெயரில் அடிமைகளாக இருக்கிறோம், நாம் எல்லோரும் அடிமைகளாகவே இருக்கிறோம். கவிதை எனும் பெயரில் இளவேனில் என்பவன் என்னிடம் சொன்ன இரண்டு வ...