Facebook, Twitter கைதுகளால் பயந்துப்போன ஒரு கோழை இதை கதை என்றும், அதை தான் எழுதவில்லை என்றும் சொல்லித்திரிகிறான்
நான் இந்த கதையை மிகப் பெரிய வளர்ச்சி பாதையில் சென்றுக்கொண்டிருக்கும் ஒரு தேசத்திலிருந்து எழுதிக்கொண்டிருகிறேன், அதாவது 2020ல் அகிலத்தின் பெரிய வல்லரசாய் மிளிரப்போகும் ஒரு தேசம் (மெதுவாக சொல்லவும் பெரிய அண்ணன்கள் காதுகளில் விழுந்துவிடப் போகிறது). நான் அந்த தேசத்தின் அதி தீவிர 'குடி'மகன். நாங்கள் அறுபது ஆண்டுகளுக்கு முன் பரங்கியர்களின் அடிமைகளாக இருந்தோம், இப்போது விடுதலை அடைந்து விட்டோமா என்று நீங்கள் கேட்டால் நான் அதே கேள்வியை உங்களிடமும் கேட்க வேண்டியிருக்கும். நீங்கள் விடுதலை அடைந்து விட்டீர்களா? நீங்கள் எப்படி சனநாயகத்தின் பெயரில், கம்யூனிசத்தின் பெயரில், விடுதலையின் பெயரில், சர்வாதிகாரத்தின் பெயரில், இனமானத்தின் பெயரில் அடிமைகளாக இருகிரீர்களோ அதே போல் தான் நாங்களும் தேசியத்தின் பெயரில், இனத்தின் பெயரில், சனநாயகத்தின் பெயரில், மனுவின் பெயரில் அடிமைகளாக இருக்கிறோம், நாம் எல்லோரும் அடிமைகளாகவே இருக்கிறோம். கவிதை எனும் பெயரில் இளவேனில் என்பவன் என்னிடம் சொன்ன இரண்டு வரிகள் நினைவுக்கு வருகின்றன.
இச்சவம் அடிமையாகவே ஜனித்தது, அடிமையாகவே வாழ்ந்தது
அடிமையாகவே மரணித்தது சுதந்திரமடைந்தது....
என்னால் எங்கள் தேசத்தின் பெருமைகளை பின்வருமாறு சொல்ல முடியும்.
1) எங்கள் தேசத்தில் என்பது கோடி மக்கள் அலைபேசியை பயன்படுத்துகிறார்கள், சிம் கார்டுகள் இலவசமாக கிடைக்கும். அரிசி கிலோ நாற்பது இ பணம்.
2) ஊழல்கள் எல்லாம் லட்சம் கோடிகளில் தான் நடக்கும், எதிர்த்து கேள்வி எழுப்பினால் 'சனநாயகம்' தீவிரமாய் செயல்படும்.
3) தேசத்தின் பெருமைகளை பேசி பல கொலைகளை செய்வோம். முடிந்தால் எங்கள் தேசத்தின் வடக்கிலும், வடகிழக்கிலும் ஒரு பயணம் சென்று பாருங்கள் உங்களுக்கு புரியும்.
4) பெரிய அண்ணன்களின் உண்மை விசுவாசிகள் நாங்கள், அவர்களின் பளபளக்கும் சப்பாத்துக்கள் அதற்கான சாட்சிகள்.
5) சோறு, கல்வி, பொது சுகாதாரம் போன்ற ஆடம்பர பொருட்கள் காசு இருந்தால் மட்டுமே கிடக்கும். மடிகணினி, கிரைண்டர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இலவசமாய் கிடைக்கும்.
6) சாதிகள் இல்லையடி பாப்பா (படிக்கும் உங்களுக்கே சிரிப்பு வரும்)
இப்படி ஒரு பெரிய பட்டியலே கொடுக்கமுடியும். படித்து விட்டு நீங்கள் ஆச்சரியப்பட்டு விடுவீர்கள். இதுப்போலான பெருமைகள் நிறைந்த அந்த தேசத்தின் பெயரை நீங்கள் அறிய ஆசை படுகின்றீர்கள் என்பது எனக்கு நன்கு விளங்குகிறது. நீங்கள் வேறு ஒரு தேசத்தை யூகம் செய்துக்கொள்ள கூட வாய்ப்பு இருக்கிறது, அந்த தேசம் பற்றி எனக்கும் தெரியும் ஆனால் என் தேசம் அதுவல்ல, என் தேசத்தின் பெயர் 'இ' தேசம். எங்களின் உலகளாவிய அடையாளம் 'சனநாயகம்'. சனநாயகம் என்றால் என்ன தெரியுமா? "அதிகார வர்க்கத்தால், அதிகார வர்கத்துக்காக, அதிகாரமாய் கட்டமைக்கப்படுவது". இப்படி எல்லா பெருமைகளையும் தன்னகத்தே கொண்ட மிக தொன்மையானதாய் சொல்லப்படும் இந்த தேசத்தில் தான் பிறந்து வளர்ந்தேன், வாழவும் செய்கிறேன். ஆம், இன்னொன்றை சொல்ல மறந்து விட்டேன். நாங்கள் வேற்றுமையில் ஒற்றுமையால் மிளிர்பவர்கள், இதற்கான விளக்கத்தை தான் நானும் தேடி அலைந்துக்கொண்டிருக்கிறேன். எனவே உங்களுக்கு என்னால் அதற்கான விளக்கத்தை இப்போது சொல்ல முடியாது.
தேவனின் அணைத்து ஆசிகளையும் கூடிய விரைவில் பெறவிருக்கும் எங்கள் தேசத்துக்கு ஒரு பெரும் ஆபத்து காத்திருக்கிறது, அது ஒருவேளை எங்கள் நாட்டை தேவனின் பார்வையை விட்டு மறைய வைத்துவிடக்கூடும். அந்த ஆபத்தை களைந்தே ஆகவேண்டும். அந்த ஆபத்து என்னவெனில் எங்கள் தேசத்தில் ஒரு நாற்பது, ஐம்பது கோடி பரதேசிகள் திங்க சோறு இல்லாமல், வாழ வழியில்லாமல் இருக்கிறார்கள், அவர்களால் எங்களின் வல்லரசு கனவு பறிபோய்விடுமோ எனும் பெரும் அச்சம் இருக்கிறது. மிகமுக்கியமாய் அவர்களால் எங்கள் பெரிய அண்ணன்களின் பன்னாட்டு நிறுவங்களுக்கும் ஒரு பயனுமில்லை. இப்படியான கடும் சூழலில் இதை சரி செய்வது எப்படி, என்ன செய்வது தெரியாமல் திக்கி திணறி வருகிறார் நாட்டின் ஒப்ப்ற்ற தலைவரான மிஸ்டர் 'ம'. மிஸ்டர் 'ம'வின் தலைவியான 'சோ'வும் என்ன செய்வது என்று புரியாமல் தவிக்க அவர்கள் இருவரும் ஒரு முடிவுக்கு வந்தவர்களாய் இப்படியான் அதித திட்டங்களுக்கு சிறப்பான யோசனைகளை வழங்க திறன் மிக்க, நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் முதுபெரும் அரசியல்வாதியுமான கிழடு சிங்கம் 'க 'வை தொடர்பு கொண்டார்கள். 'க' பின்வரும் பதிலை அவர்களுக்கு சொன்னார்.
"கடமை, கண்ணியம், கட்டுப்பாடு" என் அண்ணனின் மந்திரம், செம்மொழி என் மூச்சு, அதனால் நான் என் பங்கிற்கு ஏற்கனவே ஒரே நாளில் ஒரு லட்சம் மனிதர்கள் சாவதை பார்த்து ரசித்துவிட்டேன். இன்னும் நாற்பது கோடி பேரை கொல்லும் அளவு நான் வளரவில்லை அது உங்கள் கோட்டா, வாழ்க செம்மொழி"
பெரும் குழப்பத்தில் இருந்த 'ம' சரி ஒரு குவார்ட்டர் அடித்தாலாவது தெளிவு பிறகும் எனும் யோசனையில் தன் மாளிகையின் தோட்டத்தில் அமர்ந்து குடிக்க ஆரம்பித்தார். மணி நள்ளிரவு 12யை கடந்திருந்தது, அப்போது அவரை தேடி குட்டையான, மிக சிறிய மீசை வைத்து, கோந்து போட்டு வாரிய முடியுடனும், ராணுவ உடையில் ஒரு வயதான கிழவர் வந்து அமர்ந்தார். அவருக்கு 100 அல்லது 110 வயதிருக்கும். தான் மரணித்து அறுபது வருடங்களை தாண்டிவிட்டது என்னும் அறிமுகத்துடன், கைகுலுக்க தன் கையை நீட்டீனார். பொதுவாகவே பயந்த சுபாவம் உடைய ‘ம்’ சற்று பயத்துடன் கைக்குலுக்கினார். தானும் மிஸ்டர் 'ம' வை போலான ஒரு ஆட்சியாளன் என்றும், ஒரு வல்லரசை கட்டி ஆண்டவன் என்றும், தன பெயர் 'அ ஹி' என்றும் இந்த அகிலமே மிரண்ட மாபெரும் யுத்ததின் நாயகன் என்றும் அவர் கொடுத்த அறிமுகம் அவர் யார் என்பதை மிஸ்டர் ‘ம’வுக்கு அடையாளப்படுத்தியது.
"உங்கள் பெரிய அண்ணன்களில் ஒருவன் தான் நான், நான் செய்யாத சாதனைகள் எதையும் கடந்த நுற்றாண்டில் வேறு யாரும் செய்ததே இல்லை. இப்போது தான் உங்கள் சின்ன தம்பி 'ம ரப' என் சாதனைகளை முறியடிக்கும் முயற்சியில் இருக்கிறார். இன்னொரு பக்கம் நான் அடித்து கொன்று மிச்சம் மீதி இருக்கும் யூதர்களோ அவர்கள் சுற்றுக்கு தயாராகி கொலைகளை செய்துக்கொண்டிருக்கிரார்கள். என்ன ஒரு அற்புதமான உலகம், இப்படி படுகொலைகளை செய்து எத்துனை ஆண்டுகள் ஆகிறது. மீண்டும் கொலைகள் செய்ய அறிக்கிறது மனம்"
"மிஸ்டர் 'ம' உங்களின் குழப்பத்தை நான் அறிவேன், அதன் பொருட்டே உங்களை கான வந்தேன். உங்கள் தேசம் வல்லரசாக என்னிடம் ஒரு அற்புத திட்டமிருக்கிறது. ஆனால் நீங்களோ சனநாயகவாதி நான் சொல்வதை ஏற்பீர்களா என்று தெரியாது. இருந்தும் சொல்கிறேன். ஏன் அந்த நாற்பது ஐம்பது கோடி பேரையும் ஒரே மூச்சில் கொன்றுவிடக் கூடாது ? என்றார். தூக்கி வாரிப்போட்டவராய் போதை தெளிந்து நின்ற மிஸ்டர் 'ம', நீங்கள் சொல்வது எனக்கு புரிகிறது எங்களுக்கு கொலைகள் புதிதல்ல ஆனால் ஒரே திட்டத்தில் நாற்பது கோடி பேர்? இந்த உலக சபைகள் ஏதாவது சொன்னால் என்ன செய்வது என்றார். இதற்கு முன் கிழிக்காத எதை அவர்கள் உங்கள் தேசத்தில் புதிதாய் கிழிக்க போகிறார்கள். துணிந்து முடிவு செய்யுங்கள் என்றார் 'அ ஹி '. இன்னும் சொல்லப்போனால் இந்த திட்டதை மக்களிடம் கொண்டு சேர்க்க மிக எளிய வழி ஒன்று இருக்கிறது. உங்கள் தேசத்தின் சினிமாக்காரர்களை அழைத்து பேசுங்கள். நாற்பது கோடி பேர் செத்தால் நாடு வல்லரசாகும் எனும் புனித தன்மையை கட்டமைக்க சொல்லுங்கள், அவர்களுக்கு இது தெரிந்தால் போதும் நீங்கள் சொல்லாமலே தேச புனிதத்தை கட்டமைப்பார்கள், குறிப்பாய் உ.நாயகனையும், பெரிய இயக்குனரான 'ம ர'வையும் இந்த திட்டத்தில் ஈடுப்பட செய்யுங்கள் அவர்கள் அற்புதமான படைப்பாளிகள், கூடவே இந்த கிரிகெட்காரர்களை துணைக்கு அழைத்துக்கொள்ளுங்கள் டிவியில் வந்து திட்டதை விளம்பரபடுத்த சொல்லுங்கள். நீங்கள் ஏற்கனவே க ம், கூ ம், தா ர் என்று பல அற்புத அணு திட்டங்களை கையாண்டாலும் அது எல்லாம் நீண்ட கால மரண திட்டங்கள். என் யோசனை உடனடி பயன் தருவது. கைமேல் பலன். திட்டத்தின் பெயர் " 'இ' தேச வல்லரசு திட்டம்" பெயரே எத்துனை பெருமையானதாய் இருக்கிறது.
மிஸ்டர் ‘ம’: திட்டம் மிக அற்புதமானதாய் இருக்கிறது, ஆனால் இந்த சனனாயக சட்டை தான் சிறிது பயத்தை ஏற்படுத்துகிறது. என்ன தான் இருந்தாலும் தலைவியுடன் பேசி விட்டு தான் முடிவு செய்ய வேண்டும்.
அகிம்சை அடையாளத்துக்கு பாதகம் வந்தால் என்ன செய்வது என் மிஸ்டர் ‘ம’ அச்சப்படுவது அ ஹிக்கு புரித்தது. அச்சம் வேண்டாம் மிஸ்டர் ‘ம’தேசத்தின் நலனில் செய்யப்படும் கொலைகள் எல்லாமே அகிம்சையின் அடையாளம் தான் என்று மனிதம் பேசினார் 'அ ஹி'. மேலும் என்னை போல் நேரடியாக செய்யாமல் அகிம்சை சாயம் பூசி கொல்லுங்கள் நீங்கள் ஏற்கனவே செய்துகொண்டிருக்கும் தேச சுத்திகரிப்பின் ஒரு பகுதி தான் இந்த திட்டம். இல்லையேல் இருக்கவே இருக்கிறது தீவிரவாதம் அதன் பெயரில் கொல்லுங்கள் யாரும் எந்த கேள்வியும் கேட்க மாட்டார்கள், அடுத்த தேர்தலிலும் சிறப்பான வெற்றியை குவிக்கலாம் என்று அறிவுரைகளை வழங்கினார் 'அ ஹி '. இதையெல்லாம் தோட்டத்தின் ஓரத்தில் சிலையாய் இருந்தவாறு கேட்டுக்கொண்டிருந்தார் 'இ' தேசத்தின் தந்தை. 'அ ஹி'யின் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது “சொல்லுங்கள் நமோ......... என்னது இந்த திட்டம் உங்களுக்கு பிடித்து விட்டதா........அற்புதம்...உங்களை பற்றி எனக்கு தெரியும் இதை செய்ய சரியான ஆள் நீங்கள் தான்......
'அ ஹி'யின் திட்டத்தால் பெரிதும் கவரப்பட்ட மிஸ்டர் 'ம', மேலும் நமோவின் அலைபேசி அலைப்பால் பயந்துபோய் திட்டத்தை உடனடியாக நிறுவும் பொருட்டு தன் தலைவி 'சோ'வுக்கு தொலைபேசி செய்தார்...

சிறந்த வரை எழுத
ReplyDeleteசிறந்த வரை எழுத
ReplyDelete