Skip to main content

Posts

Showing posts from April, 2015

-கிளி சோசியத்தில் இல்லாமல் போன கிளியின் படம்!

          நான் கிளி சோசியக்காரனாக மாறியது மிகவும் எதார்த்தமான ஒரு நிகழ்வு. ஆனால் அந்த சம்பவம் நடந்தன்று நிச்சயமாக தெரியாது நான் கிளி சோசியனாவேனென்று - அந்த கிளி சோசியக்காரன், கிளி எடுத்துப்போட்ட கமலஹாசன் சீட்டை பார்த்து ”கமலு படம் வந்திருக்கு.. உச்ச யோகம்…. மூணுல சனி, ஏழுல சுக்கிரன், ஒன்னுல குரு…நீ பெரிய நடிகனா வருவ தம்பி” என்று சொன்னான். xxxxxxx         அடிவானம் வெளுக்க தொடங்கிய ஒரு அதிகாலையில் தான் நான் திருப்பத்தூர் செல்லும் LRN பஸ்சில் ஏறினேன். அதிகாலை என்பதால் கூட்டம் பெரிதாக இல்லை, இருந்த 10-15 பேரும் தூக்கத்தில் இருப்பதை ஒவ்வொரு தலைகளும் ஒவ்வொரு திசையில் மடங்கி கிடந்ததிலே அறிய முடிந்தது. காலியாக இருந்த ஒரு இருக்கையின் சன்னலோரத்தில் அமர்ந்தேன். சிறிது நேரத்தில் பேருந்தும் வேகமெடுத்தது, மிக வேகமாக முகத்தை தழுவி கடந்துக்கொண்டிருந்த அதிகாலை குளிர் காற்றின் விசையை தாங்க முடியாமல் சன்னல் கண்ணாடிகளை இழுத்து மூடினேன். தலைக்கு மேலிருந்த ஒலி பெருக்கியில் “வந்தேண்டா பால்காரன், பசு மாட்ட பத்தி பாட போறேன்” என்று ரஜினியின் குரலாக SPB பாடிக்கொண்டிருந...