Skip to main content

Posts

Showing posts from November, 2011

மன்றாடல்..

அடுத்த தலைமுறை யோனிக்களும் , விந்துகளும் தீர்ந்துப்போக கிடக்கின்றன ஒருக்கையில்லாத எனது மகனும் , தலை பெருத்து பிறக்கப்போகும் என் மகளும் எதிர்க்காலமாய் நிற்கிறார்கள் .. நீ பறித்துக்கொண்ட கடல் சூழ்ந்த   எங்கள் நிலம் மலடுக்கொள்கிறது ஆடும் , மாடும் , நாயும் , நரியும் , காக்கையும் , குருவியும்   காலின்றி , உடல் சிறுத்து , புண்கள் புற்றுக்களாய் சீல்வழிய   பிறக்க காத்துக்கிடக்கின்றன அணுக்களே உங்கள் இயக்கத்துக்கு நீங்களேனும் ஓய்வுத்தாருங்கள் எங்கள் மன்றாடல்கள் உங்கள் செவிப்பறையினையாவது சென்றுசேரும் என்று நம்புகிறோம் .... உங்களுக்கு தெரியுமா , தூரத்து தேசத்தில் ஓர் அழகியிருந்தாள் மஞ்சள் தேகமும் , உருண்டைக்கண்களும் , சப்பை மூக்கும் கொண்ட அவள்மேல்   விண்ணுலக தேவனொருவன் காதல்கொண்டான் , அப்படியான அழகியவள் ... இன்று அவளை புண்கள் மோகிக்கின்றன , அவள் யோனியில் சீல் வழிய வாழ்ந்துக்கொண்டிருக்கிறாள் உங்களின் சீற்றம் அவள் வாழ்வை அழித்துவிட்டது .  கல்வி , பெண்மை , மக்கள் , நிலம் என்று அனைத்தையும் இழந்தவளாய் அலைந்துக்கொண்டிருக்கி...