உனக்காய் வரையப்படுகின்ற முதல் கடிதம். என் முதல் காதல் கடிதமும் கூட. மிகுதியான தருணங்களில் இதுவே இறுதியாய் அமைந்துப்போக விருப்பம். எத்தனையோ காதல்களை கடந்து வந்திருந்தாலும் எழுத ஆசைப்பட்ட முதல் கடிதம். நீ எதிர்ப்பார்க்கா கடிதமும் கூட. படித்தால் அதிசயத்துப்போவாய் எனும் நம்பிக்கை என்னுள். நம்பிக்கை தானே, பொய்த்துப்போகலாம் தவறில்லை.வாழ்க்கையால் அடிமையாக்கப்பட்டு பெயர்களாலும், உறவுநிலைகளாலும் சிதைந்துப் போன ஒருவனின் காதலியாய் கிடைக்கப் பெற்ற உனக்கு என்னால் எம்மாதிரியான கடிதம் எழுத முடியும்.இழந்துப்போன காதலிக்காய் இன்றும் ஆண்டிஸ் மலைத்தொடர்களில் சுற்றித் திரியும் நெருடாவின் சோக வரிகளோ, ஜென்னிக்கோ ஹெலன் டெமூத் அம்மையாருக்கோ பேராசான் மார்க்ஸ் எழுதிய கடிதங்களோ, இல்லை நீ செல்லம்மாவோ நான் பாரதியோயன்று, உனக்காய் உலகின் தலைசிறந்த காதல் வரிகளை எழுத. பால் விலை இரண்டு ரூபாய் ஏறிப்போனதைப் பற்றியோ, சொகுசு பேருந்து எனும் பெயரில் பல மடங்குஏறிப் போன சென்னை பேருந்துகளின் கட்டணம் குறித்தோ, இன்னும் நிரந்திர வேலை கிட்டா என் அடிமை வாழ்வைப் பற்றியோ, இந்த வருடமேனும் சம்பளம் உயருமா எனும் விடைத்தெரியா ...