எ ழுத்து தன் வடிவங்களை இடைவிடாது மாற்றிக்கொண்டே இருக்கிறது. ஒரு சமயம் மரபார்ந்த நடைகளாகவும், கடுமையான சட்ட திட்டங்களுக்குள்ளும் ஆட்பட்டுக் கிடந்த எழுத்துகள், அதன்பின் நவீனத்தின் தாக்கங்களிலிருந்து விடுதலையாகி தான்தோன்றியாய் புதிய வகைமைகளை பிறப்பித்தன. ஒற்றைத் தன்மையான கதையாடல்களிலிருந்து விலகிய இன்றைய எழுத்துகள் வாசகருக்கு கட்டட்ட வெளிகளையும் திறப்புகளையும் அனுபவங்களையும் கொடுக்கும் பன்முகத்தன்மையானவலை பின்னல்களாய் உருவம் கொள்கின்றன. வாசகரின் மனதைப் பொறுத்து ஒரு பிரதி அதன் வடிவங்களை மாற்றிக் கொள்கிறது, வாசிக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அனுபவங்களை பெறுவதற்கான அணைத்து சாத்தியப்பாடுகளையும் புது எழுத்துக்கள் முன்வைக்கின்றன. பின்நவீனம், மாய எதார்த்தம் எனும் வடிவங்கள் அகிலம் முழுவதிலும் எழுத்தாளர்களின் மீது பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன். இவை இரண்டும் ஏதோ ஒரு வகையில் இன்றைய எழுத்து தனக்கான வெளியை உருவாக்குவதற்கான அடிப்படைக் காரணிகளாய் இருக்கின்றன. 1)போர்ஹேஸ், மார்க்குவெஸின் வருகை, அவர்கள் இலக்கிய உலகம் மீது ஏற்படுத்திய தாக்கம். 2) அதே காலத்தில் நவீனத்திலிருந்து பின் நவீ...