Skip to main content

Posts

Showing posts from April, 2011

ஓடிப்போனவள்

நான் செல்வி நீங்கள் படிக்கவிறுக்கும் இந்த கதையை உங்களுக்கு கூறுபவள் , இந்த கதையின் மையபாத்திரம். இந்த கதையில் வரும் பலருக்கு நான் தவறானவள் , குற்றம் புரிந்தவள். நான் செய்த குற்றம் காதலித்தது. காதலித்தவனையே என் விருபத்துக்கு ஏற்ப மனம் செய்தது. நான் தவறு செய்ததாய் குற்றம் சுமத்துபவர்கள்.. என் தாய் , மாமன் , தாத்தா , இன்னும் பல உறவினர்கள்...என் கதையினை சொல்ல சில தலைமுறைகள் பின்னோக்கி செல்ல வேண்டும்...ஒரு நாடோடி திருடனின் வாழ்க்கையிலிருந்து என் கதை ஆரம்பிக்கிறது.         புக்கான் எங்கிருந்தோ நாடோடியாக   பள்ளியூர் வருகிறான். செய்ய தொழிலில்லை, குடும்பம் குட்டி எதுவுமில்லை. கட்டிய கோவணமும் கிழிந்த துண்டுமே அவனது உடமை. பசிக்கு திங்க ஒரு வயலிலிருந்து சோளம் பிடுங்குகிறான் அதை பார்த்த தோட்டக்காரன் திருடன் என்று அலறுகிறான் விரைந்து ஓடிமறைகிறான்,புக்கான் ஆடு மாடுகளை திருட ஆரம்பிக்கிறான்.புக்கான் எனும் பெரிய கொள்ளைக்காரனை கண்டு பள்ளியூர் அச்சம்கொல்கிறது. புக்கான் ஒரு வெள்ளாள பெண்ணுடன் உடன்போக்கு செல்கிறான். குழந்தைகள் பிறக்கிறது. புக்கான் மரணிக்கின்றான். அவனின் குடு...