அன்புள்ள அங்கிள், எப்போதும் போல் கடவுளின் அனைத்து ஆசிகளையும் பெற்று மிக நலமாக இருப்பீர்கள் என்று தெரியும். கடவுளால் இரட்சிக்கப்பட்ட ஒரே ஒருவரான நீங்கள் என்றுமே நலமாக தானே இருக்க முடியும். நலமா என்று கேள்வியை கேட்கும் நான் நிச்சயம் முட்டாளாக தான் இருக்க முடியும். நான் உங்களின் இன்றையநாள் சகோதரனின் மகன், என்னை கண்டிப்பாய் உங்களுக்கு தெரியாது ஆனால் இந்த உலகையே இரட்சிக்கும் உங்களை எனக்கு நன்கு தெரியும், உங்களை தெரியாது என்று சொன்னால் தான் அது அபத்தமாய் இருக்கும். அங்கிள் நான் என் மீதே பெருமை பட்டுக்கொள்ள பல காரணங்கள் இருக்கின்றன. உங்களின் 500 ஆண்டுகள் குருதி கரை படிந்த வரலாற்றை அறிந்தவன் என்பதற்காகவே நான் பெருமை படவேண்டும். நீங்கள் கொன்ற முதல் சிவபிந்திய உயிரில் ஆரம்பித்தது உலகை பாதுகாப்பதற்கான உங்களின் செயல் திட்டங்கள். இன்று வரை லத்தின் அமெரிக்கா, ஆப்ரிக்கா, வியட்நாம், ஈராக், ஆப்கன், ஜப்பான் என்று உலகம் முழுதும் உங்களின் பாதுகாப்பு செயல்பாடுகள் செவ்வனே இருக்கிறது என்பதை நான் பெருமையுடன் பட்டியலிடுகிறேன். நீங்கள் அதிபுத்திசாலி, இசுலாமியர்கள் உங்கள் கொள்கைகளுக்கு எதிராக சுய உரிமைகளை கோருகி...