ஆங்கில வழி மொழியாக்கம் - எல்.ஜே.வைலட், இளவேனில் எ ட்டு மாதங்கள், சிறையில் பிணை இல்லாமல் நான் உண்மையிலே குற்றவாளியா? ஒவ்வொரு நொடியும் இன்னும் நினைவில் அப்படியே இருக்கின்றன. அன்று நடந்த ஒவ்வொரு காட்சியும் இன்றும் உயிர்ப்புடன் என் முன் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. சிறை கம்பிகளுக்கு பின்னே மூன்று மாதங்கள் தாங்கவே முடியாத சித்தரவதைகளையும், அவமானங்களையும் கடந்தும் சில வேளை நான் என்னையே கேட்டுக் கொள்கிறேன் - நான் உண்மையிலேயே குற்றவாளியா? என் இதயத்தின் ஆழத்திலிருந்து வரும் ஒரே பதில் இல்லை இல்லவே இல்லை என்பதே. சபிக்கப்பட்ட ஆகஸ்ட் 10 2017 அன்று அந்த வாட்சப் செய்தி என்னை வந்து சேர்ந்ததும் ஒரு மருத்துவனாக, ஒரு தந்தையாக, இந்திய தேசத்தின் பொறுப்பான ஒரு குடிமகனாக என்னால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்தேன். திடீரென்று திரவ ஆக்ஸிஜன் தீர்ந்து போனதால் உயிராபத்தில் இருந்த ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற முயற்சித்தேன். ஆக்ஸிஜன் இல்லாத காரணத்தால் மரணித்துக்கொண்டிருந்த அப்பாவி குழந்தைகளின் உயிர்களை காப்பாற்ற என்னால் முடிந்த மட்டும் முயற்சித்தேன். நான் பதட்டத்துடன் அனைவரையும் தொலைபேசியில் தொடர்பு கொ...