நா ம் கண்காணிப்பு முதாளித்துவத்தின் (survilance capitalism*) காலத்தில் வாழ்கிறோம். நம் இருப்பின் அத்தனை கூறுகளும் பெரு நிறுனங்களின் மூலப்பொருள்களாக மாறி இருக்கின்றன. அந்த மூலப் பொருட்களை கொண்டு நமக்கான இன்றைய மற்றும் நாளைய வாழ்வை அவர்கள் நிர்மாணிக்கின்றார்கள். தனிநபர் நலன் சார்ந்த தீர்வுகளை ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப நமக்கு வழங்குவதாய் சொல்லும் அவர்கள் செய்வது எல்லாம் நம்மை கண்காணிப்பது அதன் வழியாக நமது அனுபவங்களை - யாருக்குமே தெரியாத நம் அந்தரங்கங்களை கூட அறிந்து அவற்றை கொண்டு அவர்களின் வணிக எல்லைகளை விரிவாக்குவது மற்றும் நம்மை கட்டுப்படுத்துவது – நம் சிந்தனையின் எல்லைகளை வரையறுப்பது. நமக்கான நண்பர்களை, காதலர்களை, எதிரிகளை, பொருளாதார, ஆன்மிக, அரசியல், சமூக, மெய்யியல், அறிவியல், கலை, மொழி, பண்பாடு என்று அனைத்து எல்லைகளையும் முடிவு செய்வது. எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் நான் ஒரு மாதத்துக்கு எந்தனை ஆணுறைகளை எந்த கடைகளில் எந்தெந்த ஊர்களில் வாங்குகிறேன் என்பதை வைத்து என் காதல் வாழ்க்கையை அறிவது. இந்த தகவலை கொண்டு எனக்கு தேவையான பாலியல் பொருட்களை, மருத்துவ உதவ...