சு கத் ராஜபக்சவை முதன்முதலாக சந்தித்தபோது அவனுடன் பேசுவதற்கான விருப்பம் இவனிடத்தில் தோன்றாமல் போனதற்கு முழு முதற்காரணமாக இருந்தது ராஜபக்சவுடன் வந்திருந்த மிக அழகான இரு சிங்களப் பெண்கள்தான் எனும் உண்மையை இவன் யாரிடத்திலும் எந்த காலத்திலும் சொல்லியது கிடையாது. அதற்கான தேவையும் எப்போதும் தோன்றியதில்லை, காரணம் சுகத் ராஜபக்சவுடனான இவன் நட்பு ஈசலின் வயதினை விட பத்து மணிநேரம் குறைவானது. காலை ஒன்பது மணிக்கு அறிமுகமாகி, மதியம் ஒரு மணிக்கு ஒன்றாக புகைப்பிடித்து, மாலை ஆறு மணிக்கு ஒன்றாகக் கடற்கரைக்குச் சென்று, கடற்கரையில் இரண்டு மணி நேரங்கள் சில கதைகளை பேசிவிட்டு, பக்கத்தில் இருந்த பானி பூரி கடையில் ‘பேல் பூரி’ சாப்பிட்டுவிட்டு, மது விடுதியினை தேடிச் சென்று பீர் அருந்தி முடித்து இரவு பத்து மணிக்கு மதுவிடுதியை விட்டு வெளியேறி, அருகில் இருந்த உணவகத்தில் கொத்து பரோட்டாவும் கலக்கியும் உண்டு முடித்து, அங்கிருந்து ஆறு மைல் தூரத்திலிருந்த சுகத்தின் விடுதியை நோக்கி பயணித்து, சரியாக பத்து ஐம்பத்தி நான்குக்கு விடுதியினை அடைந்து, இருவரும் கைகளை அழுத்தி பிடித்து நன்றி சொல்லி விடைபெற்றபோ...