Skip to main content

Posts

In the most health-obsessed society ever, all is not well*: On Trauma

1 Philosopher Byung-Chul Han's essay Neuronal Power begins with the following lines: " Every age has its signature afflictions. Thus, a bacterial age existed; at the latest, it ended with the discovery of antibiotics. Despite widespread fear of an influenza epidemic, we are not living in a viral age. Thanks to immunological technology, we have already left it behind. From a pathological standpoint, the incipient twenty-first century is determined neither by bacteria nor by viruses, but by neurons ". Modern integrative body mind science defies Byung-Chul Han’s statement, that it is reductive to define human suffering solely in terms of ailments. However, we are living in an era, where production relations dictate nearly everything about human existence, in this specific context Byung-Chul Han’s statement—that the majority of human society is afflicted by mental or neuronal issues—serves as a foundational lens to understand contemporary humans and their struggles. In today’...

#இந்திய திரைவெளிகள் அருளும் சாகச நீதிகள்

0. சமகால மனித சமூகங்கள், தண்டனை சட்டங்களால் வழி நடத்தப்படுகின்றன. ஒரு சமூகத்தின் அறத்தையும், நீதியையும் முடிவு செய்யும் வலிமை கொண்டவையாக இருக்கும் தண்டனை சட்டங்கள் அறத்தையும் , நீதியையும் நிலைநிறுத்த வேண்டி, வன்முறை மற்றும் பயத்தினை மூலதனமாகக் கொண்டு இயங்குகின்றன. தண்டனை சட்டங்களால் இயக்கப்படும் நம் சமூகங்களில் வாழும் மனிதர்களின் இருப்பு என்பதே இந்த சட்டங்கள் இயல்பாக உருவாக்கும் அச்சம் மற்றும் வன்முறை உண்டாக்கும் பயத்துடனான வாழும் இருப்பாகியிருக்கிறது. சமூக மயமாக்கப்படுத்தலின் ஊடக, இந்த வன்முறை மற்றும் பயத்தை இயற்கையான சமூக செயல்பாடாக நம்பவைக்கப்படுகிறோம். சமூகத்தில் நீதி மற்றும் அறத்தை உறுதி செய்வதாகச் சொல்லும், அரசியல் சட்ட நூல்களில் எண் வரிசையில் அடுக்கப்பட்டிருக்கும் தண்டனை சட்டங்களுக்கும் நீதிக்கும் அறத்துக்கும் எப்போதும் பாரிய இடைவெளிகளே இருக்கின்றன. இச்சட்டங்கள் இயங்குவதற்கு ஆதாரமாகவிருக்கும் நீதித்துறை எனும் அதிகார அமைப்பு, ஃபூக்கோ சொல்வதைப் போன்று, “தீவுக்கூட்டத்தை” போல் சிக்கலான உபஅமைப்புகளை கொண்ட ஒரு நிறுவனமாகச்  செயல்படுகிறது - நீதிமன்றம், சிறை, காவல், கண்காணிப்பு, ராண...

செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள்: வெறுப்பை ஜனநாயகப்படுத்தும் அழகியல்!

0. பெருந்தொற்று குறித்த செய்தி என்னை வந்து சேர்ந்த போது, நான் எனது சீனப் பயணத்திற்கு தீவிரமாக தயாராகி கொண்டிருந்தேன். ஒரு வேளை பெருந்தொற்று என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால், நான் இந்த பிரதியை பெய்ஜிங்கிலிருந்து எழுதியிருக்கக்கூடும். அந்த நேரத்தில் அது பெருந்தொற்றாக உருவாகியிருக்கவில்லை. மாறாக, சில நூறு மனிதர்களை நிமோனியா போன்ற விளைவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் யாரும் அறியாத கிருமியாக, தொலைதூர செய்தியாக இருந்தது. கோவிட்-19 பெருந்தொற்று நான் வாழ்ந்த நகரத்தை வந்தடைய மூன்று மாதங்களானது. உலக சுகாதார நிறுவனம் அதை ஒரு தொற்றுநோயாக அறிவித்த அந்த இரவில் நண்பர் ஒருவர் பின்வரும் வாட்சப் செய்தியை அனுப்பியிருந்தார்: “நாம் அனைவரும் வீடு திரும்பும் நேரம் வந்துவிட்டது. பிரிந்து கிடக்கும் மனித இனம், ‘மனிதர்’ எனும் ஒற்றை அடையாளத்தின் கீழ் ஒன்றினையும் அற்புதமான சூழலை கண்களுக்கு புலப்படாத சிறிய கிருமி உருவாக்கி இருக்கின்றது” 1. மார்ச் 2019க்கு பிறகு மனித இருப்பு அதிக சிக்கலானதாகவும், இதுவரை இல்லாத அளவில் மெய்நிகரானதாகவும் மாறியது. கோவிட் -19 பற்றிய செய்திகள் இணையம் மற்றும் தொலைக்காட்சி திரைகளை நிரப்பின. போ...

the right to sex - amia srinivasan

    amia asks, what justice is? - why justice is always available only to selective bodies but not to everyone. why justice always comes with color, gender, caste, sexuality, shape, etc? so, what justice is? or how these bodies are selected for entitling justice but no other bodies? or who make these selections? – is that the system itself or the system that is constructed by patriarchy?i would say amia is one of the greatest living philosophers who is from a non-european, non- alpha male, non-white group of human thinkers that creates a ground for more fierce argument against the normative of our present system, which is highly stratified - of course, caste is still a quotient to think of, but to note that her writings brutally disown the caste identities and intensify to talk about the stratification of bodies and privileges based on caste. the series of six essays with haunting titles published recently under the label ‘right to sex’, question whose right to sex? and how th...

Fake/Factoid Fictions: ‘Glory’ Of The Lost Diet - 00

H umans are always obsessed about their past, which they presume as a glorious past with less evil and more harmony. In the 21st century internet driven world, stories of 'Glory' are one of the popular features that serves as a vital channel to feed the big data machines. Have we lived in a more harmonious past? I think this is more of an anthropological question, rather a sociological view. Also, we may have to answer the objective nature of the word ‘harmony’ like almost every other things exists in nature – the word harmony (of course the word did not exist in nature – which, again is an another different discussion that can be answered by a linguist whether the words are innate or not) is also relative to our existential identities. What might be harmonious to me might not be harmonious to another. Let us put all these questions aside and try to touch upon a topic which places the prime role in our story of glory, i.e., lost native diet. Cyberspace is filled with the storie...

இங்கு ஒரு விரல் புரட்சி செய்யப்படும்.

ஒ ரு விரல் புரட்சி குறித்து பேசும் போது, இரண்டாயிரம் வருடங்களாக வழக்கில் இருக்கும் ஒரு சொல் குறித்து பேசுவதும் தேவையானதாக இருக்கிறது. அதாவது பூமி தட்டையானது, அண்டத்தின் மையமாக பூமி இருக்கிறது, சூரியன் உட்பட மற்ற அனைத்து நட்சத்திரங்களும் கோள்களும் பூமியை சுற்றி வலம் வருகின்றன என்று உறுதியான நம்பிக்கையை கொண்டிருந்த காலத்தில் இருந்து பயன்பாட்டில் இருக்கும் ஒரு வார்த்தை, இன்றளவும் அதன் வீரியத்தை இழக்காமல் மக்களுக்கான அதிகாரத்தை மக்களின் கைகளில் கொண்டு சேர்க்கும் அனைத்து வலிமையையும் கொண்ட மாபெரும் அரசியல் வடிவம் என்று கொண்டாடப்படுகிறது. மக்களாட்சி அல்லது ஜனநாயகம் என்று சொல்லப்படும் அந்த வார்த்தையின் அபத்தம் என்னவெனில் அறிவியல், பூமி மைய வாதத்தை கடந்து, சூரிய மைய வாதம், குவாண்டம், கருந்துளை, பன்மை அண்டங்கள் எனும் கருத்தியல்கள் ஊடாக பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இன்றளவும் மக்களாட்சி முறையே அரசியல் அமைப்பின் உச்சம் அல்லது அதை தாண்டிய சிறந்த அரசியல் முறையை மனிதர்கள் இன்னும் கண்டடையவில்லை என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். இன்றுவரை அரசியலின் மேன்மைகள் மக்களாட்சி கொள்கைகளை அளவீடுகளாக கொண்டே அண...

போலி செய்திகளின் காலம் அல்லது ஒரே இரவில் கோட்பாட்டு இயற்பியலாளராக மாறுவது எப்படி?

நா ம் போலிச் செய்திகளின் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம்மைச்சுற்றிப் பல்லாயிரம் கோடிப் போலிச் செய்திகளும், சில ஆயிரம் உண்மைகளும் உண்மை என்று சொல்லப்படுபவையும், காற்றில் உலவிக்கொண்டிருக்கின்றன. 21ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்பங்கள் போலிகள் நிறைந்த புதிய உலகினை உருவாக்கி இருக்கின்றன என்று அபத்தமாக எழுத முடியாது. ஆனால் 21ஆம் நூற்றாண்டின் செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களும் சமூக ஊடகங்களும் அவற்றை உருவாக்கிய பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களின் தகவல் வேட்கையும் மனித வரலாற்றின் போக்கை நிர்ணயிக்கும் வலிமை கொண்டதாக மாறியிருக்கும் போலிச் செய்திகளின் உருவாக்கத்தையும் பரவலையும் எளிமையாக்கியிருக்கின்றன. மானிட அறிவின் எல்லைகளை உடைத்து அறிவையும், தகவல் பரிமாற்றத்தையும் கட்டற்ற சனநாயகமாக மாற்றியிருக்கக் கூடிய ஆற்றலைக் கொண்ட மெய் நிகர் உலகம், வரலாற்றின் துயராக, செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களின் தகவல் வேட்கையின் பொருட்டு அறிவுக்கு எதிரான போலிகளின் திசையில் பயணிக்கின்றது. அப்படி பல்கிப் பெருக்கும் போலி தகவல்களின் பலிகடாக்களாக நாம் ஒவ்வொரு நாளும் மாறுகின்றோம். தகவல் தொழில்நுட்ப உலகம் உருவாகுவதற்கு முன்பும்...