Skip to main content

Posts

Showing posts from 2013

கொம்புக்காரன்

நாள்: 18/04/1993           மழை விடாமல் அடித்துக்கொண்டிருந்தது, மணி அதிகாலை நான்கு இருக்கும். எங்கும் கும்மிருட்டு பெருமழையாதலால் சுற்றிலும் ஆள் அரவமில்லை, இல்லையெனில் பால் கறக்கவாவது ஒருவர் இருவர் போவதும் வருவதுமாக இருப்பர். கொம்புக்காரன் எங்களை ஒரு மரத்தில் கட்டிவிட்டு அருகிலிருந்த பழைய கொட்டாயில் ஒதுங்கி நின்றுக் கொண்டிருந்தான். விடியும் முன் புதன் சந்தையை அடைந்துவிட வேண்டும், மழையின் வேகத்தை பார்த்தால் விடிந்தாலும் விடாது போல்தான் இருக்கிறது. மழை சிறிது ஓய்ந்தால் கூட போதும் அவன் தலையில் எதையாவது போர்த்திக்கொண்டு எங்களை விரட்ட ஆரம்பித்துவிடுவான் . அவன் பாவம் என்னை செய்வான் ஒழுங்காய் சரியான நேரத்துக்கு எங்களை கொண்டுப்போய் சேர்த்தாலே கூலி கொடுக்க வியாபாரி மூக்கால் அழுவான், இதில் தாமதமாய் போனால் ? மேலும் சீக்கிரம் போனால் தானே நல்ல விலைக்கு எங்களை விற்க முடியும். மழை இன்னும் விட்ட பாடில்லை அடிவானம் வெளுக்க தொடங்கியிருந்தது. கொம்புக்காரன் எங்கிருந்தோ கிடைத்த சவ்வு காகிதத்தை தலையில் மாட்டியபடி எங்களை மரத்திலிருந்து அவிழ்த்து நடக்க ஆரம்பித்தான். நேற்று இரவு முதல் இவ...

தான்தோன்றியாய் எழுதப்பட்ட ஒரு பிரதிக்கு என்ன தலைப்பை கொடுத்துவிட முடியும்?

அன்புள்ள அப்பா, நிச்சயம் இந்த கடிதத்தை நீங்கள் எதிர்பார்த்திருக்கமாட்டீர்கள், அதே போல் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுவேன் என்று கனவிலும் எண்ணியதில்லை. இக்கடிதம் தான்தோன்றியாய் எழுதப்பட்டதே ஆயினும், சொல்ல தெரியாத ஒரு பெரும் உனர்ச்சியின் விளைவால் வெளிப்படுகிறது . அதித உணர்வில் வெளிப்படும் இந்த கடிதம் அன்பினாலும், பாசத்தாலும் நிரம்பியது என்று என்னும்படி அமைந்திருந்தால், இங்கு வெளிபட்டிருக்கும் வார்த்தைகள் அனைத்தும் உலகின் மாபெரும் நடிப்பு கலையை உங்கள் முன் வெளிப்படுத்துகின்றன என்றே அர்த்தம். அன்பு, பாசம் போன்ற சொற்கள் தானே மானுட படைப்பிலே அதிக புனைவு நிரம்பியவை, கடவுளை காட்டிலும் அற்புத புனைவுகள் இவை. இருந்தும் மனிதன் வாழ புனைவுகள் எப்போதும் தேவைப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. நீங்கள் இந்த கடிதத்தை படிப்பீர்கள் எனும் நம்பிக்கையில் நான் எழுதவில்லை, ஒரு தேசாந்தரியிடம் இதை எதிர்பார்ப்பது அபத்தமான விடயம் தான். உங்களால் அதிகம் நேசிக்கப்பட்ட, அதே நேரம் உங்களை பெரிதும் நேசிக்காத உங்கள் மகன் தான் இந்த கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னுடன் இருக்கும் போது சொல்லப்படாத, உங்களுடன் பேச விர...

சிதைவு

1 யாருமே இல்லாத அந்த ஒற்றை அறையில் நான் மட்டுமே இரண்டு வருடங்களாய் வாழ்ந்து வருகிறேன். ஆஸ்பெஸ்தாஸ் அட்டையும், உதிருந்து போன சுண்ணாம்பு சுவரும், பேருக்கு ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறியும், சிலந்தி அட்டடைகளும் என் அறையின் அடையாளங்கள்.யாருமில்லாத இந்த அறை எப்போதும் வெட்கை சூழ்ந்தே இருக்கிறது, மழை நாட்களிலும் வெட்கை வெளியே செல்ல மறுக்கிறது, நானும் அதனுடன் சேர்ந்து வாழ பழகிவிட்டேன். இப்போதெல்லாம் குளிர்ச்சியை மனமும், உடலும் விரும்புவதேயில்லை, எங்காவது குளிருட்டப்பட்ட கட்டிடங்களுக்குள் நுழையும்போதெல்லாம் என்னுடல் அன்னியப்பட்டு உதறுகிறது. நான் ஏற்கனவே சொன்னதைப்போல் இந்த அறைக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போது ஒரு கால் சென்டரில் வேலை செய்துக்கொண்டிருந்தேன். எட்டாயிரம் ரூபாய் சம்பளம், மூனு வருடங்கள் அங்கு வேலை செய்தேன். ஆறாயிரம் சம்பளத்துக்கு வேலையில் சேர்ந்தேன் பிறகு படிப்படியாய் சம்பளம் எட்டாயிரத்தை தொட்டது. உங்களுக்கு திடிரென்று கேள்வி தோன்றலாம் நான் பொய் சொல்லவதாய் கூட தோன்றலாம் ஆனால் அது தான் நிஜம் நான் ஆறாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்து அதிகபட்சமாய் மூன்று ஆண்டுகளுக்கு ...

விஷுவல் மீடியா எனும் கலை (?)

இளவேனில், சில பல வருடங்களுக்கு முன் சினிமா கனவுடன் சென்னை நகருக்கு வந்தான். தான் எடுக்கும் படம் உலகின் மிக சிறந்த சினிமாவாய் இருக்கும் என்றும், இந்த உலகம் காணதா பல புரட்சிகளை அந்த படம் செய்யும் என்றும் நம்பினான். அவனை சொல்லி என்ன செய்ய, அவன் பார்த்து வளர்ந்த கேப்டன் படங்களும், சூப்பர் ஸ்டார் படங்களும் அவனுக்கு கொடுத்த நம்பிக்கைகள் அவை. நல்ல வேளை, கால சூழ்நிலையால் வேறு வேலை பார்க்கிறான். நாம் தப்பித்தோம். விஜிக்கு, மணிரத்தினமும் பாலாவும் ஆதர்ச மனிதர்கள். அவர்களை பார்த்து தான் சினிமா எடுக்க வந்தேன் என்பான். மௌன ராகத்தை போன்றோ, பிதாமகனைப் போன்றோ ஒரு படம் எடுத்துவிட வேண்டும் என்பது அவன் லட்சியம். இன்று ஒரு பிரபல் தொலைகாட்சியில்..குடும்ப சண்டைகளை வீதிக்கு இழுத்து அவர்களின் கண்ணீரை காசாக்கும் வேலையில் இருக்கிறான். காட்சி ஊடகமே ஊடக கலையின் உச்சம், உலகம் காணாத அத்துணை மாற்றங்களையும் நிகழ்த்தும் வலிமை காட்சி ஊடகத்துக்கு இருக்கின்றது. எழுத்து ஊடகம் காலாவதியான விடயம். விசுவல் மீடியா முன் ஒரு சிறு அணுவிலும் தகுதியற்றது எழுத்து எனும் பின்பத்தை நான் சந்திக்கும் பெரும்பான்மையான நண்பர்கள் சொல்லுகிறார...

ஒரு குடியு(கனவு)லகவாசியின் பயணக்குறிப்புகளிலிருந்து: இயற்கையின் சொந்த தேசத்து பயணக் குறிப்புகள்.

நீங்கள் வெளியூருக்கு பயணம் மேற்கொள்ளுகிரீர்கள். பத்து மணி நேர ரயில் பயணம். மது அருந்திவிட்டு தான் எந்த ஒரு பயணத்தையும் தொடங்குபவர் எனில், அருகில் இருக்கும் டாஸ்மாக் மதுபான கூடத்துக்கு போய் ஒரு புட்டி மது அருந்துகிரீர்கள். மது புட்டியின் விலை 600, உங்களிடம் வசூலிக்கும் பணம் 620 கூடவே பிளாஸ்டிக் கிளாஸ் 5 ரூபாய், தண்ணீர் குடுவை 20 ரூபாய், தின்பண்டங்கள் 100 ரூபாய் ஆக மொத்தம் 745 ரூபாய். எச்சில் குவியல்களுக்கும், வாந்தியின் மிச்சங்களுக்கும் நடுவே குடித்து முடித்துவிட்டு புறப்படுகிரீர்கள். அதிகாலை மணி 4, ரயில் கல்லிக்கோட்டை (கோழிக்கோடு) ரயில் நிலையத்தில் நிற்கிறது, ரயிலை விட்டு இறங்குகிரீர்கள். வாஸ்கோடகாமாவை வரவேற்ற அதே கேரளத்து காற்று உங்களையும் வரவேற்கிறது. காற்றில் கோடையின் உக்கிரம் தெரிகிறது. சென்னை மாநகரிலிருந்து எப்போதும் கேரளம் போனாலும் ஆட்டோக்களின் ரூபத்தில் பேரதிர்ச்சி காத்துகிடக்கும். 15 ரூபாய்க்கு ஆட்டோவில் பயணிக்க முடியும் என்பதை உங்களால் நிச்சயம் நம்ப முடியாது தான். 15 ரூபாய் ஆட்டோ பணம் கொடுத்துவிட்டு நடக்க ஆரம்பிக்கிரீர்கள். அங்கிருந்து உங்கள் பயணம் வயல் நாட்டை(வயநாடு) நோக்கி...

நானும் கடவுளும் இருபத்தாறு ஆண்டுகளும்: சமயம்- கடவுள் குறித்தான் ஞானியின் படைப்புகளை முன்வைத்து

நான் அப்போது உயர்நிலைக்கல்வி படித்துக்கொண்டிருந்தேன். நம் கல்வி முறை எல்லா மாணவர்களுக்கு தரும் அதே துயரங்களை, வலிகளை எனக்கும் அள்ளி வழங்கிக்கொண்டிருந்தது. மதிப்பெண்கள், பொறியியல் கல்வி எனும் சாத்தான்கள் என்னை துரத்தியவாறே இருந்தன. பள்ளிக்கு போகும், படிக்கும் ஆர்வம் இல்லாமல் படித்துக்கொண்டிருந்தேன், கடும் மனசோர்வாலும் பாதிக்கப்பட்டிருந்தேன், ஒருநாள் உடல்சோர்வு காரணமாய் வீட்டில் மயங்கி விழுந்தேன். அம்மாவும், அப்பாவும் பதறியடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு என்னை அழைத்து சென்றார்கள். அவர்களின் பயம் என் மனதில் அப்படியே பதிந்து விட்டது. சில நாள் கழித்து மயங்கி கிடப்பதை போன்று நடித்தேன், அன்றும் பெற்றோர்களின் கண்களில் அதே அச்சம் தெரிந்தது. என் திட்டம் வேலை செய்தது, தொடர்ந்து மயங்கி விழ ஆரம்பித்தேன். அதுவும் எல்லாம் திட்டம் போட்டு செய்தேன். நான் நடிக்கிறேன் என்பதை அவர்கள் கண்டுபிடிக்க முடியதப்படி அவர்கள் நினைத்து பார்க்க முடியாத இடங்களில் விழுந்து கிடப்பேன். மலக் காடு, வயல்வெளி, வீட்டு வாசல் என்று தொடர்ந்தது என் திட்டம். என் அம்மாவும், அப்பாவும் எத்தனையோ மருத்துவமனைகள் அழைத்து சென்றார்கள் எல்லா ...

ரோசிக்கு ஒரு கடிதம்

// என் வாழ்வில் நான் பார்த்த மிக உன்னதமான மக்கள் போராட்டமான கூடங்குளம் போராட்ட குழந்தைகளுக்கு சமர்ப்பணம் // அன்புள்ள ரோசி,     நீ எப்படி இருக்கிறாய். நிச்சயம் நீ நலமாக இல்லை என்று எனக்கு தெரியும். என்னை போலான ஒரு சாவினை விரும்பாமல் நீ போராடுகிறாய். அதற்கு பதிலாய் உன்னை அடிக்கிறார்கள், பட்டினி போடுகிறார்கள், துப்பாக்கி வைத்து மிரட்டுகிறார்கள் உன்னை தீவிரவாதி என்று முத்திரை குத்துகிறார்கள், உன் மீது தேச துரோக வழக்கு போடுகிறார்கள். இருந்தும் நீ அஞ்சாமல் போராடுகிறாய் உன்னை வெல்ல முடியாமல் திணறுகிறது உன் அரசு. நான் மரணிக்கும் போது உன் வயது தான் எனக்கு, இப்போது உயிரோடு இருந்திருந்தால் உன் பாட்டி வயதிருக்கும்.  அது ஒரு கடும் போர்க்காலம் பெரும் சப்தங்களும், புகைகளும், கண்ணீரும், மரணங்களும் நிறைந்து ஆட்சியாளர்களின் ஆணவத்தால் எங்கள் வாழ்க்கை தோற்றுக்கொண்டிருந்த காலம் அது. போர் நிரம்பிய ஒரு நாளில் தாயின் கருவறையை விட்டு வெளியே வந்தேன், வராமலே இருந்திருக்கலாம். என் அம்மாவின் கருவறையே அதிரும் இரைச்சல்களில் வாழ பழகிக்கொண்டேன். ஒரு நாள் நாங்கள் யாரும் எதிர்பாரா நேரத்தில் ஒரு பெரிய இரும்...