நீங்கள் வெளியூருக்கு பயணம் மேற்கொள்ளுகிரீர்கள். பத்து மணி நேர ரயில் பயணம். மது அருந்திவிட்டு தான் எந்த ஒரு பயணத்தையும் தொடங்குபவர் எனில், அருகில் இருக்கும் டாஸ்மாக் மதுபான கூடத்துக்கு போய் ஒரு புட்டி மது அருந்துகிரீர்கள். மது புட்டியின் விலை 600, உங்களிடம் வசூலிக்கும் பணம் 620 கூடவே பிளாஸ்டிக் கிளாஸ் 5 ரூபாய், தண்ணீர் குடுவை 20 ரூபாய், தின்பண்டங்கள் 100 ரூபாய் ஆக மொத்தம் 745 ரூபாய். எச்சில் குவியல்களுக்கும், வாந்தியின் மிச்சங்களுக்கும் நடுவே குடித்து முடித்துவிட்டு புறப்படுகிரீர்கள்.
அதிகாலை மணி 4, ரயில் கல்லிக்கோட்டை (கோழிக்கோடு) ரயில் நிலையத்தில் நிற்கிறது, ரயிலை விட்டு இறங்குகிரீர்கள். வாஸ்கோடகாமாவை வரவேற்ற அதே கேரளத்து காற்று உங்களையும் வரவேற்கிறது. காற்றில் கோடையின் உக்கிரம் தெரிகிறது. சென்னை மாநகரிலிருந்து எப்போதும் கேரளம் போனாலும் ஆட்டோக்களின் ரூபத்தில் பேரதிர்ச்சி காத்துகிடக்கும். 15 ரூபாய்க்கு ஆட்டோவில் பயணிக்க முடியும் என்பதை உங்களால் நிச்சயம் நம்ப முடியாது தான். 15 ரூபாய் ஆட்டோ பணம் கொடுத்துவிட்டு நடக்க ஆரம்பிக்கிரீர்கள். அங்கிருந்து உங்கள் பயணம் வயல் நாட்டை(வயநாடு) நோக்கியதாய் இருக்கிறது. கல்பெட்டா எனும் நகரை (நகரம் என்று சொல்லிவிட முடியாது, பெரிய கிராமம்) அடைகிரீர்கள். அளவில் சிறிய ஊர், தர்மபுரியின் அளவில் பாதி இருக்கும், வயல்நாட்டின் மாவட்ட தலைமையகம். ஆரவாரம் இல்லாத அமைதியான ஊராய் இருக்கிறது. நீங்கள் இதற்கு முன் பாலக்காடு, வாளையாறு, மூனாரு என்று கேரளத்தின் சில பகுதிகளை சுற்றி இருந்தாலும், இயற்கையின் சொந்த தேசத்தின் மத்திய பகுதியும் அதன் வாழ்க்கை முறைகளும் உங்களுக்கு ஆச்சரியங்களை (அதிர்ச்சிகளை) கொடுக்கவே செய்கிறது. ரோட்டில் வாகனங்கள் அதி பயங்கர வேகத்தில் சென்றுக்கொண்டு இருக்கின்றன. உங்களை சுற்றி யாரும் நடக்கவில்லை. நீங்கள் மட்டும் தனியாக நடக்ககிரீர்கள் ஆச்சரியத்துடன் சுற்றியும் பார்க்கிரீர்கள். அப்போது தான் மக்கள் பாதசாரிகளின் (ப்லாட்பார்ம்) பாதையில் நடப்பதை பார்க்கிரீர்கள். நீங்கள் சென்னை மாநகரில் இல்லை என்பது உரைக்கிற்து (பொதுவாக தமிழ் நாட்டில் இல்லை என்பது). பாதசாரிகளின் பாதையில் நடக்க ஆரம்பிக்கிரீர்கள். 15 ரூபாயில் ஆட்டோ பயணம் என்பதோ, ப்லாட்பார்மில் பாதசாரியாய் நடப்பது என்பதோ சென்னை நகர வாசியான உங்களுக்கு ஆச்சரியமான விடயம் தான். அதே நேரம் வாகணங்களின் அதி பயங்கர வேகம் உங்களை அதிர்ச்சி அடையவே செய்கிறது.
உங்கள் வேலைகளை முடித்துவிட்டு ஓய்வெடுக்க தோன்றுகிறது, கூடவே குடிக்கும் என்னமும் சேர்ந்துக்கோள்ள கால்கள் கள்ளு கடைகளை தேட ஆரம்பிக்கின்றன. சிறிது நேர தேடலுக்கு பிறகு கள்ளு கடைக்குள் நுழைகிரீர்கள். உங்கள் முன் மண் பானையில் வெண்மையான 'கள்', ஒரு அமிர்தத்தின் உணர்வை தருகிறது பேராவலுடன் அருந்த ஆரம்பிக்கிரீர்கள் கூடவே வேகவைத்த கிழங்கு. ஒரு மொந்தை கள் மட்டுமே உங்களால் குடிக்க முடிகிறது, வயிறு நிறைந்துவிடுகிறது. ஒரு மொந்தை (லிட்டர்) கள்ளின் விலை 70 கிழங்கின் விலை 25. மொத்தம் நீங்கள் 95 ரூபாய்களை கொடுத்து விட்டு அறைக்கு திரும்புகிரீர்கள். சிறிது ஓய்வுக்கு பிறகு மதியம் கண் விழிக்கிரீர்கள். மீண்டும் குடிக்க தோன்றுகிறது, அருகில் இருக்கும் மது கூடத்துக்கு செல்கிரீர்கள். இரண்டு குடுவை பீர் வேண்டுகிரீர்கள். அது ஒரு தனியார் மது விடுதி, மிக சுத்தமாய் இருக்கிறது. மேலே மின்விசிறி சீரான வேகத்தில் சுழல்கிறது. நல்ல வெளிச்சமான சூழல். குடிக்க அவர்களே இலவசமாய் தண்ணீர் தருகிரார்கள், கூடவே இலவசமாய் ஊறுக்காய். தூய்மையான ஆடையுடன் பணியாளர்கள். மூன்று பீர் குடித்து முடித்துவிட்டு விலை கேட்கிரீர்கள். பில் வருகிறது. 200 ரூபாய். அடுத்த நாள் மீண்டும் கள்ளுடன் தொடங்குகிறது. அதே போல் ஒரு மொந்தை, ஆனால் கிழங்கு இல்லை. மாட்டு கறி, அத்துனை ருசி. வாழ்க்கை முழுதும் அத்துனை ருசியான மாட்டு கறி திங்கவே கேரளத்தில் தங்கிவிட விரும்பியது மனம்.பொடி பொடியாய் வதக்கிய வெங்காயத்தில் பொன்னிறத்தில் மாட்டு வறுவல், ஏகாந்த நிலைக்கு போகிரீர்கள்.
நண்பர் ஒருவரை சந்திக்கிரீர்கள், அவர் கேரள அரசியல் குறித்து பேசுகிறார். நீங்கள் தமிழக டீ கடைகளில் தினமும் அரசியல் பேசுபவர் எனில் நண்பரின் பேச்சு உங்களுக்கு பெரும் ஈர்ப்பை தருகிறது. ஆர்வமாய் கேட்க ஆரம்பிக்கிரீர்கள். அவர் கேரள கம்யுனிஸ்ட் கட்சியை ‘கொலைகாரர்களின் கட்சி’ என்கிறார். நீங்கள் அவரை காங்கிரஸ் அனுதாபி என்று நினைக்கும் சம்யம், காங்கிரஸ் கட்சியை அதன் ஆட்சியை வெகுவாய் விமர்சிக்கிறார். பாரதிய சனாதாவை பேய்கள் என்கிறார். உங்கள் ஊரில் அடிப்படைகள் அற்புதமாய் இருக்கிறதே என்கிரீர்கள். நீங்கள் பார்க்கும் எல்லாம் ஆராம்பகால் நிஜ மார்க்ஸ்யத்தின் எச்சங்கள் என்கிறார். இருவரும் வீதிகளில் நடக்கிரீர்கள். இரண்டு சக்கர வாகனங்களை காட்டிலும் கார்கள் அதிகம் தென்படுகின்றன. இந்த கார்களுக்கான பெட்ரோல் வளைகுடா நாடுகளில் குருதியாய் வழிந்துக்கொண்டு இருக்கிறது என்கிறார் விரக்தியுடன். அடம்பர வீடுகள் அதிகம் கண்களில் தெரிகின்றன, இதற்கான் கற்களும் வளைகுடா நாடுகளில் தான் சுமக்கப்படுகின்றன என்கிறார். நன்பர் பேசிய மலையாளம் இலகுவாய் புரியும்படியே உங்களுக்கு இருக்கிறது (அஜித்தாவை தவிற நெருங்கிய மலையாள தோழிகள் வேறு யாரும் உங்களுக்கு இல்லை. அவரும் தமிழில் பேசவே பெரிதும் விரும்புவார், இருந்தும் வெகு இலகுவாய் மலையாளம் உங்களுக்கு புரிந்தது ஆச்சரியம் தான்) இருவரும் மதுவிடுதிக்கு செல்கிரீர்கள், நீங்கள் நேற்றுப்போன அதே கடை(பார்). மீண்டும் பீர். இப்போது மணி மதியம் 2. மதுகூடத்தை சுற்றி நோட்டம் விடுகிரீர்கள். உங்கள் இருவரை தவிற வேறு யாரும் இல்லை. உங்களுக்கு அதிர்ச்சியாய் இருக்கிறது. மதியம் 2 மணிக்கு வெறுமையுடன் நீங்கள் மது சாலையை பார்த்ததேயில்லை. மாலை வரை அங்கு தான் இருக்கிரீர்கள். சிறிது கூட்டம் கூடுகிறது. மனிதர்கள் வருகிறார்கள். ஒரு கிலாஸ் மது வேண்டுகிறார்கள் 40ரூபாய், கூடவே ஒரு சோடா குடுவை 10 ரூபாய். தண்னீர், ஊறுக்காய் இலவசம். பில் வருகிறது 50ரூபாய் கொடுத்துவிட்டு விடைப்பெறுகிறார்கள். ஒரு சிலர் மேலும் ஒரு தம்ளார் மது வேண்டுகிறார்கள். ஆக மொத்தம் அதிகமாய் 100 ரூபாய். மிகவும் வெகு சிலரே தின்பண்டங்களை வேண்டுகிறார்கள். உங்களை தின்பண்டம் வாங்க சொல்லி எந்த பணியாளரும் கோருவதில்லை. இது எல்லாமே உங்களுக்கு ஆச்சரியமாய் தான் இருக்கும். உங்களுக்கு சிறுநீர் கழிக்க வேண்டும். கழிப்பறையும் ஆச்சரியத்தை தருகிறது. அத்துனை சுத்தமான கழிப்பறையை டாஸ்மாக்குகளில் பார்க்காதவர் நீங்கள், என்ன செய்ய, வியப்பது சாதரனமே.
அடுத்த நாள் வீதிகளில் நடக்கும் போது உங்கள் கண்களில் இரண்டு புத்தக கடைகள் தெரிகிறது. உள்ளே சென்று பார்வையிடுகிரீர்கள். எல்லாம் மலையாளத்தில் இருக்கிறது. இருந்தும் ஒரு புத்தகம் உங்களை ஈர்க்கிறது. காரணம் அதில் இருந்த தாஸ்தயேவ்ஸ்கியின் படம். புத்தகம் சிறிய அலவில் இருக்க நீங்களே அது ‘வென்னிற இரவுகள்’ என்று முடிவு செய்கிரீர்கள். அடுத்து ஓரான் பாமுக்கின் என் பெயர் சிவப்பு ஆங்கிலத்தில் இருப்பதை பார்க்கிரீர்கள். உங்கள் பயணத்தின் ஆச்சரியங்களில் மேலும் ஒன்று கூடுகிறது. இந்துனை சின்ன நகரத்தில் இந்த புத்தகங்களை பார்ப்பது ஆச்சரியம் தான். அதே நேரம் வீதியெங்கும் விற்கப்படும் லாட்டரிக்கள் பெரும் வருத்ததை தருகிறது.
இன்று அரசு மது கடைக்கு செல்கிரீர்கள். வரிசையில் மக்கள் நின்று மது வாங்கி செல்கிரார்கள், நீங்களும் வரிசையில் நிர்க்கிரீர்கள். அங்கு அமர்ந்து குடிக்க மதுகூடமில்லை, உங்கள் இடங்களில் தான் குடிக்க வேண்டும். நீங்கள் வாங்கும் மதுவுக்கு ரசிது கொடுக்கிறார்கள். மது விலை 277.07 ரூபாய் வரி 322.92 ரூபாய். நீங்கள் முதன் முறையாய் தமிழ் நாட்டில் இருந்து கேரளம் போகிறவர் எனில் நீங்கள் அதிர்ச்சி அடையளாம். ஒரு சம்யம் நாஞ்சில் நாடன் இங்கு பிறந்து இருந்தால் உன்னர கள் எனும் கட்டுரையை எழுதாமல் இருந்திருப்பார். கமலக்கண்னன் மதுபானக்கடையை எடுக்காமலே இருந்திருப்பார் என்றும் தோன்றும் உங்களுக்கு. தருமபுரி அளவு ஊரில் உங்களால் ஒரே ஒரு அரசு மதுபான கடையை தான் பார்க்க முடிகிறது. இரண்டு மது விடுதிகள். இரண்டு கள்ளுக் கடைக்கள். ஒரு நொடி சூளைமேட்டில் இருக்கும் 10 டாஸ்மாக்குகளும் மனதில் தொன்றி மறையாலாம் உங்களுக்கு.
இப்படி நீங்கள் கேரளத்தில் வாழ்ந்த நான்கு நாட்களும் ஆச்சரியங்களாளும், அதிர்ச்சிகளாலும் முடிந்துப்போகிறது. மீண்டும் ரயில் சென்னை நகரை நோக்கி பயனிக்க ஆரம்பிக்கிறது. அத்துனை தூரம் கேரள மண்னை நீங்கள் நேசித்த போதும் உங்கள் மனம் வெறுமையால் நிரம்பி நிர்க்கிறது. ஆம் உங்கள் அன்பு தோழியின் திருமன நாள் குறித்த செய்தி உங்களுக்கு கிடைக்கும் போது, பிரிவின் முடிவை நீங்களே எடுத்தவர் என்றாலும் மனம் வலிக்கவே செய்கிறது. அன்பு மிக்க அரவனைப்பை, தோல்களை தேடும் அந்த நேரத்தில் உங்களை ரட்சிக்க ஒரே ஒரு தவறிய அழைப்பு போதுமானதாய் இருக்கிறது. உங்களின் நம்பிக்கைகள் மீண்டும் உங்களிடம் துளிர்க்கிறது. (என்னைப் போன்ற சில பைத்தியகார மனிதர்கள் வாழ்க்கை மீதான நம்பிக்கையை இருக்க பற்றிக்கொள்ள ஒரே ஒரு தவறிய அழைப்பு போதுமானதாய் இருக்கிறது)
Comments
Post a Comment