Skip to main content

Posts

Showing posts from 2019

இலையுதிர் கால நறுமணம்

https://www.setaswall.com/road-autumn-black-white-1440-x-900/ அ ன்றைய செய்தித்தாளின் ஏழாவது பக்கத்தில் வெளியாகியிருந்தது அந்தச் செய்தி. சாம்பல் நிறத்தில் அச்சடிக்கப்பட்டிருந்த அந்தப் புகைப்படம் அவன் நினைவுகளையும் அவனைச் சந்திக்க வேண்டும் எனும் ஆர்வத்தையும் ஒரு சேரக் கிளறிவிட்டிருந்தது. வெற்றிடத்தை நிரப்புவதற்கென்று பிரசுரிக்கப்படும் பெட்டிச் செய்திகளில் ஒன்றாகவே அந்தச் செய்தி வெளியாகியிருந்தது. மூன்று வருடங்களுக்கும் முன், அவனைக் கடைசி முறையாக பார்த்தபோது எப்படி இருந்தானோ அப்படியே அந்தப் புகைப்படத்திலும் இருந்தான். நிலைத்துவிட்ட அவன் அடையாளங்களில் ஒன்றான அடர்ந்த நீண்ட தாடி, ஒட்ட வெட்டப்பட்ட தலைமுடி, இடது புருவத்தில் வெட்டுத் தழும்பு, எப்போதும் எதையோ தேடிக்கொண்டிருக்கும் சிறிய கண்கள், நேரான மூக்கு, ஒட்டிப்போன கன்னங்கள், தலையைவிட்டுத் தனித்து வெளியே தெரியும் பெரிய காதுகள்; எல்லாமும் அப்படியேதான் இருந்தன. இந்த மூன்று வருடங்கள் அவனை எதுவும் செய்திருக்கவில்லை, அவனை ஒரு துளி அளவிலும் மாற்றியிருக்கவில்லை. புயலும் வெள்ளமும் அனைத்தையும் சிதிலமாக்கிவிட்டுச் சென்ற பிறகான நான்கு ஆண்டுகளில் ஒரு து...