இளவேனில், சில பல வருடங்களுக்கு முன் சினிமா கனவுடன் சென்னை நகருக்கு வந்தான். தான் எடுக்கும் படம் உலகின் மிக சிறந்த சினிமாவாய் இருக்கும் என்றும், இந்த உலகம் காணதா பல புரட்சிகளை அந்த படம் செய்யும் என்றும் நம்பினான். அவனை சொல்லி என்ன செய்ய, அவன் பார்த்து வளர்ந்த கேப்டன் படங்களும், சூப்பர் ஸ்டார் படங்களும் அவனுக்கு கொடுத்த நம்பிக்கைகள் அவை. நல்ல வேளை, கால சூழ்நிலையால் வேறு வேலை பார்க்கிறான். நாம் தப்பித்தோம்.
விஜிக்கு, மணிரத்தினமும் பாலாவும் ஆதர்ச மனிதர்கள். அவர்களை பார்த்து தான் சினிமா எடுக்க வந்தேன் என்பான். மௌன ராகத்தை போன்றோ, பிதாமகனைப் போன்றோ ஒரு படம் எடுத்துவிட வேண்டும் என்பது அவன் லட்சியம். இன்று ஒரு பிரபல் தொலைகாட்சியில்..குடும்ப சண்டைகளை வீதிக்கு இழுத்து அவர்களின் கண்ணீரை காசாக்கும் வேலையில் இருக்கிறான்.
காட்சி ஊடகமே ஊடக கலையின் உச்சம், உலகம் காணாத அத்துணை மாற்றங்களையும் நிகழ்த்தும் வலிமை காட்சி ஊடகத்துக்கு இருக்கின்றது. எழுத்து ஊடகம் காலாவதியான விடயம். விசுவல் மீடியா முன் ஒரு சிறு அணுவிலும் தகுதியற்றது எழுத்து எனும் பின்பத்தை நான் சந்திக்கும் பெரும்பான்மையான நண்பர்கள் சொல்லுகிறார்கள், நம்புகிறார்கள். நான் பொதுவாக ஊடகம் என்பதையே நம்பிக்கையற்று பார்க்கும் ஒருவன் எனக்கு எழுத்து காட்சி எல்லாம் ஒன்றுதான். மனித வார்த்தைகள் மீதான் நம்பிக்கைகளை சிதைத்து தான் எழுத்து எனும் வடிவம் பிறந்தது. எழுத்தின் பிறப்பில் தான் மானுடத்தின் சவக்குழி முதன் முதலில் தோன்டப்பட்டது என்று சொல்லலாம். எழுத்து அவநம்பிக்கையின் அடையாளம் தான். இருந்தும் எழுத்து வடிவத்தை, எழுத்து எனும் ஊடகத்தை நான் ஒரு துளியேனும் நம்பவே செய்கிறேன். ஏனெனில் எழுத்து எழுத தெரிந்த எல்லோருக்குமானது அதற்கு வர்க்க பேதங்கள் கிடையாது. யாரும் எதையும் எழுதலாம். ஒரு பிடி மணல் போதும் எழுத.
நாகரீகத்தின் உச்சமான காட்சி ஊடகம் தோன்றி 100 வருடங்களை கடந்துவிட்டது. உலகின் சிறந்த 100 படங்கள் பட்டியலிடப் படுகின்றன. பூமிப்பந்தின் கடைக்கோடியில் இருக்கும் கடைசி வீட்டின் வரவேற்ப்பு அறையையும் அழகாய் அலங்கரிக்கின்றன தொலைக்காட்சி நிகழ்ச்சிகள். ஆஞ்சலினா ஜோலிக்கு நோவு வந்ததை பற்றிய சன் டீவி செய்தியை வருத்ததுடன் பார்கிறான் இருளப்பட்டி முனுசாமி. நடிகர்கள் தேசங்களின் ஆட்சி கட்டில்களுக்கு அழகு சேர்க்கிரார்கள். நீங்களும் நானும் என்ன சோறு திங்களாம், மாதவிடாயில் என்ன பஞ்சு பயன்படுத்தலாம், காமத்தில் என்ன நிரொத் போடலாம் எல்லாம் சொல்லித் தருகிரார்கள் காட்சி ஊடக நாயகர்கள். நம் சமுகத்தின் சிந்தனையாளர்களாய் இருப்பது உலகனாயகனும், கவிபேரரசும் தானே. சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் என்று சமுகத்தால் சொல்லப்படுபவரும் தாங்கள் எழுத வந்ததே ஏதோ தொலைக்காட்ச்சியில் தோன்றதான் என்பதை போல் எல்லா நிகழ்ச்சிகளிலும் வந்துவிடுகிரார்கள், கேட்டால் விவாதம் என்கிறார்கள் (இதை தானே சமுகவியலாளன் ப்யர் பூர்த்யு 40 வருடங்களுக்கு முன்னே சொன்னான்.) இது மட்டுமா சாதனை, காட்சி ஊடகம் தன் பயணத்தின் முதல் படிகளை கடக்கும் போது தான் உலகம் வெகு விமர்சையாய் இரண்டு பெரும் அகில யுத்தங்களை நடத்தி முடித்தது, 10-20 கோடி மனிதர்களை அழகாய் சவப்பெட்டியில் மூடியது. அதன் எச்சங்களை, பெருமை பேச காட்சிகளாய் மிச்சம் வைத்திருக்கிறது காட்சி ஊடகம் (எழுத்தும் தான்).
மூத்திர சட்டியுடன் வீதி வீதியாய் பேசி பேசி செத்த ராமசாமி கிழவன் உரித்த வெங்காயங்கள் எதையும் சமுகத்தில் அத்துனை மாற்றங்களையும் நிகழ்த்தக்கூடிய ஒரு ஊடகம் உரிக்காமல் விட்டது ஏன் ? ஒரு கிழத்தின் தள்ளாடும் குரலின் தேவையை இன்னும் தர்மபுரிக்களும், பரமக்குடிகளும் உனர்த்திக்கொண்டு தானே இருக்கின்றன ஏன்? சின்ன கவுண்டன்களின், தேவர் மகன்களின், சுந்தரபாண்டியன்களின் பெருமைகளை பேசியதை தவிர வேறு என்ன செய்தது விசுவல் மீடியா?.
இன்றைய சமுகத்தின் ஆதிக்கம் மிக்க ஒரு கலையால், அதன் பனியாளர்களுக்கு கூட தொழிலாளர் சுதந்திரத்தை தர மறுப்பது ஏன்? ஒரு அணு அளவினும் மதிப்பில்லா எழுத்து வடிவத்தில் உருவான மூலதனத்தை உலகம் இன்றும் சார்ந்து நிற்க வேண்டி இருப்பதன் தேவை என்ன? மார்க்சின் தேவையை காட்சி ஊடகத்தால் பூர்த்தி செய்ய முடியாமையின் காரணம் ஏன்? எழுத்தின் ஆதிக்கதில் நடந்த ருஸ்ய புரட்சியையும், பிரன்ச்சு புரட்சியையும், க்கூப புரட்சியையும் காட்சி ஊடகம் செய்யாதது ஏன்? எழுதில் மாபெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்திய டார்வினையும், உலகம் உருண்டை என்று உரக்க கத்திய கலிலியோவையும் காட்சி ஊடகத்தால் கடக்க முடியாதது ஏன்? அவர்களைப் போன்று உன்மைகளை பேச மறுப்பது ஏன்?
எழுத்து போலியானது தான் எந்த சந்தேகமும் இல்லை, இருந்தும் அது மனிதனுக்கு சிந்திக்க கற்று கொடுத்தது (!!சிந்திப்பதே போலியானது தான்), உரிமைகளை பேசியது, புரட்சிகளை செய்தது, ஓரளவேனும் மனிதனை மனிதானகவே பார்த்தது. அதுனால் தான் குற்றமும் தண்டனையும், அன்ன கரினாவும், கோபல்லபுர கதைகளும், பென் ஏன் அடிமையானாளும், மார்க்சியங்களும் தோன்றின. சாப்ளினும், சத்யஜித் ரேவும், தார்கோவஸ்கியும், மகேந்திரனும் காட்சி படைபாளிகள் தானே. அவர்கள் படைக்கவில்லையா? இதற்கு என்னால் ஒரே ஒரு பதிலை சொல்லிவிட முடியும், கடைசி வரை அரசியல் படங்களையே எடுத்து செத்த சாப்ளின் ஒரு காமெடி பிதாமகன், அவன் படைப்புகள் நகைச்சுவையின் உச்சங்கள். இந்த அவலத்தை என்னவென்று சொல்வது? ஆனால் அதே அவல நகைச்சுவையில் மாண்டோ எழுதிய அத்துனை கதைகளும் அரசியல் கதைகள். இப்படி தான் நாம் நம்புகிரோம். அதிகாரமையங்கள் திட்டமிட்டு மறைத்த அரசியல் போராளி சாப்ளின்.
சமிபத்தில் வந்த “சூது கவ்வும்” எனும் ஒரு படம் மாற்று சினிமா என்றார்கள், நல்ல படம் ஜாலியா இருந்தது என்றார்கள், அது போலி அரசியலை பேசுகிறது, சினிமா அறத்தை மதிக்கவில்லை என்றார்கள். அதில் ஒரு காட்சி மிகவும் திறமையான, வெறிதானமாய் என்கௌண்டர்களை செய்யும் ஒரு போலிஸ் அதிகாரியின் தலையில் துப்பாக்கி வைக்கிரான் மிகவும் ஒல்லியான, பயந்த நோஞ்சான் இளைஞன், அந்த அதிகாரி ஏளன புன்னகை செய்கிறான். அவர் முகத்தில் துப்பாக்கியால் அடித்து, கையில துப்பாக்கி வச்சிருக்கேன் சிரிக்கிர என்கிறான் அவன், அதிகாரியின் கண்களில் பயம் தெரிகிறது. இது எத்துனை அலுத்தமான பதிவு. உங்களை கொலை செய்யும் திறன் இருப்பவன் உங்கள் மீது அதிகாரம் செலுத்துவான் அவனே உங்கள் அரசன், எத்துனை உன்மை ஆனால் நான் பேசிய வரை அத்துனை நன்பர்களும் நல்ல நகைச்சுவை காட்சி என்றார்கள் (சில படைபாளிகளையும் சேர்த்து)
ஏன் நம்மால் சாப்ளின் பேசிய அரசியலை உனர்ந்துக்கொள்ள முடியவில்லை? ஒரு திரைப்பட காட்சியின் வலிமையை உனரமுடியவில்லை? காட்சி ஊடகம் குறித்து இத்துனை கேள்விகள் நம்மிடம் தோன்ற காரணம் என்ன? எனக்கு தோன்றிய இரண்டு விடயங்கள்
1) விசுவல் மீடியாவுக்கு மக்களை மாயாஜாலம் போல் கட்டிவைக்க முடியும் ஆனால் சிந்திக்க வைக்க முடியாது. காரணம் நாம் கானும் காட்சிகளை மட்டுமே உண்மை என்று நம்பும் பண்பு எல்லா வகையிலும் நம்மிடம் மிக அழமாய் பதிந்து போய் இருக்கிறது. எனவே மக்களை சிந்திக்க வைக்காமல், நம்ப வைக்கும் ஒரு ஊடகம் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.
2) காட்சி ஊடகம் சாமானியனின் படைப்பு இல்லை, முதளாளிகளின் ஊடகம். பெரும் செல்வம் இருப்பவரே ஒரு காட்சி படைப்பை உருவாக்க முடியும் என்பது எதார்த்தம். எனவே அங்கு பனம் சம்பாதிக்கும் எண்ணமே இருக்கும், சமுகம் குறித்த பார்வை இருந்தாலும் அதிலும் எப்படி பணம் சம்பாதிக்க முடியும் எனும் யோசனையே மிச்சமிருக்கும்.
இதையெல்லாம் கடந்து சமிப காலங்களில் கேட்டாலே அதிகம் அருவெருப்பை தரும் வார்த்தைகாளாய் “நடு நிலமைகளும்” “மாற்று சினிமாவும்” இருக்கின்றன. ”தமிழ்” (தமிழனுக்கு தவிர வேறு எவறுக்கும் இந்த நிலை இருக்காது என்றே நம்புகிரேன்), “புரட்சி” எனும் வார்த்தைகளை எந்த அளவு அருவெருப்பாய் இருக்கிறதோ அதே அளவு “நடு நிலமைகளும்” “மாற்று சினிமாவும்” இருக்கின்றது. நடு நிலைமை என்றால் என்ன? அதிகாரமையங்கள் தறுகளை செய்யும் போதும் மக்கள் பக்கம் நின்று தட்டிகேட்காமல், காவல் துறை லேசாக அடித்தார்கள் என்பதா? இல்லை கல்வி முதலாளிகள் நடுநிலைமை தொலைக்காட்சிகளை நடத்துவதா?. எனக்கு எப்போதும் எந்த நிலைமைகள் மீதும் நம்பிக்கை இருந்தது இல்லை, மக்களையும் மனிததையும் தாண்டி எந்த நிலைமைகளும் இல்லை. அதே போல் ஒரு சினிமா எப்படி மாற்று சினிமாவாகிவிட முடியும்? மாற்று சினிமாவின் விளக்கம் என்ன? கழிப்பறை காட்சிகளை 5 நிமிடம் தொடர்ந்து காட்டினால் அது மாற்று சினிமா என்கிறோம். ஒரு மிக முக்கிய நாவலுக்கு நன்றிகளை சொல்லி விட்டு, அந்த நாவலுக்கு சிறிதும் நியாயம் செய்யாமல் காடுகளிலிலும், மலைகளிலும் நடிகர்கள் துன்பப்படுவதை காட்சியாய் பிடித்து அதை விளம்பரமாய் போட்டு உலக சினிமா பேசுகிரோம். இசுலாமிய விரோத படங்களை எடுத்து தேசியத்தை கட்டமைக்கிறோம் அதற்க்கும் மாற்று சினிமா, உலக சினிமா தகுதிகளை கொடுத்து பெருமைகொள்கிறோம். இதை தான் உலகின் மிக ஆழுமையான ஒரு ஊடகம் இது வரை செய்த சாதனைகள்.
ஒரு கலை எல்லா மனிதர்களுக்குமானதாய் இருக்க வேண்டும். அந்த கலைக்கு எந்த தடைகளும், இவர்களுக்கானது எனும் குறுக்கீடுகளும் இருக்க முடியாது அப்படி இருந்தால் அது கலையாக முடியாது. தான் எண்ணியதை எழுத்தில் அல்லது ஒவியாமாய் கடத்த ஒரு பிடி மணல் போதும் என்பதைப் போல் சினிமாவும்,காட்சியும் எல்லோருக்குமானதாய் மாறும்வரை அது இந்த சமுகத்தில் எதையும் சாதித்துவிட முடியாது அதற்கு உதாரனம் தான் இந்த 100 ஆண்டுகள். நாம் என்ன தான் “மாற்று”கள் பற்றி பேசினாலும் காட்சி ஊடகம் பெரும் செல்வந்தர்களின் கைகளை விட்டு சாமான்ய கைகளுக்கு வரும் வரை அது எந்த விதத்திலும் மக்கள் கலையாக முடியாது. அப்படியே ஒரு சாதரன மனிதனுக்கு கிட்டினாலும் அது சமுகத்தை எத்துனை தூரம் சிந்திக்க வைக்கும் என்பதும் பெரும் கேள்விகளே.
//அவர்கள் பாவம்...உனக்கும் எனக்கும் விடுதலையை பெற்று தருவதாய் நம்புகிறார்கள்...உனக்கும் எனக்குமான உண்மையை பேசுவதாய் நம்புகிறார்கள்..ஆனால் உன்னை போல் ஏதும் செய்ய வழிகளற்று சிலுவையில் அரையப்பட்டு கிடக்கிறார்கள்...அவர்களை ரட்சிப்பிராக பிதாவே! ஆமென்!!//
enakku eluthu sol vari ellame poi endru siru vayathil thonum. ippo Antha poi il thaan naatam athigam. naan pechhukku athigam mukkia thuvam kodukkathathal amaithiana paiyan anen. eluthil ulla mayakkam eno mel sonna udagangalin thakkathil illai.
ReplyDeleteenakku eluthu sol vari ellame poi endru siru vayathil thonum. ippo Antha poi il thaan naatam athigam. naan pechhukku athigam mukkia thuvam kodukkathathal amaithiana paiyan anen. eluthil ulla mayakkam eno mel sonna udagangalin thakkathil illai.
ReplyDelete