நான் செல்வி நீங்கள் படிக்கவிறுக்கும் இந்த கதையை உங்களுக்கு கூறுபவள், இந்த கதையின் மையபாத்திரம். இந்த கதையில் வரும் பலருக்கு நான் தவறானவள், குற்றம் புரிந்தவள். நான் செய்த குற்றம் காதலித்தது. காதலித்தவனையே என் விருபத்துக்கு ஏற்ப மனம் செய்தது. நான் தவறு செய்ததாய் குற்றம் சுமத்துபவர்கள்.. என் தாய், மாமன், தாத்தா, இன்னும் பல உறவினர்கள்...என் கதையினை சொல்ல சில தலைமுறைகள் பின்னோக்கி செல்ல வேண்டும்...ஒரு நாடோடி திருடனின் வாழ்க்கையிலிருந்து என் கதை ஆரம்பிக்கிறது.
புக்கான் எங்கிருந்தோ நாடோடியாக பள்ளியூர் வருகிறான். செய்ய தொழிலில்லை, குடும்பம் குட்டி எதுவுமில்லை. கட்டிய கோவணமும் கிழிந்த துண்டுமே அவனது உடமை. பசிக்கு திங்க ஒரு வயலிலிருந்து சோளம் பிடுங்குகிறான் அதை பார்த்த தோட்டக்காரன் திருடன் என்று அலறுகிறான் விரைந்து ஓடிமறைகிறான்,புக்கான் ஆடு மாடுகளை திருட ஆரம்பிக்கிறான்.புக்கான் எனும் பெரிய கொள்ளைக்காரனை கண்டு பள்ளியூர் அச்சம்கொல்கிறது. புக்கான் ஒரு வெள்ளாள பெண்ணுடன் உடன்போக்கு செல்கிறான். குழந்தைகள் பிறக்கிறது. புக்கான் மரணிக்கின்றான். அவனின் குடும்ப மரம் விரிகிறது. அந்த மரத்தில் ஒரு கிளையாய் குப்பனின் குடும்பம். குப்பன் பெரிய அறிவாளி, பெரியார் கொள்கைக்காரன், குடிகாரன், பல மொழிகள் வல்லுனன், பட்டாளக்காரன், ரோடு மேஸ்திரி, மளிகை கடைக்காரன் இப்படி பல அவதாரங்கள். குப்பனுக்கு நான்கு பெண்கள் ஒரு ஆண். எல்லோரும் அவரவர் விருப்பப்படி வாழ்வை அமைத்துக்கொண்டார்கள். குப்பனின் பெரிய மகள் கணவனை விட்டுவிட்டு வாழாமல் பிறந்தவீடு வந்தாள், அவள் கணவன் வேறு ஒருவளுடன் வாழுகிறான். அடுத்த மகளுக்கும் குப்பனின் குடும்பத்துக்கும் எந்த தொடர்புமே இல்லை, அவளுடைய மகன் வீட்டைவிட்டு ஓடிப்போய்விட்டான் எங்கோ வடநாட்டில் லாரி டிரைவராய் வேலை செய்வதாய் கேள்வி. இளைய மகளின் கணவனோ வேறு ஒருவளுடன் உடன்போக்கு சென்றுவிட்டான். குப்பனின் மனைவிக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. பள்ளியூர் அவர்களை நாடோடிகள் என்றது. வெள்ளலா இனத்திலேயே இப்படி ஒருக் குடும்பம் இருக்காது என்று பேசினர். மகனுக்கு தவிட்டுக்கவண்டன் மகளை மனம் செய்துவைத்தான் குப்பன். அவர்கள் இருவருக்குள்ளும் காதல் வாழ்க்கை பெரிதாய் அமையவில்லை காமத்துக்காய் இரண்டு குழந்தைகளின் பெற்றோர் ஆனார்கள். முதலாமானவள் நான் செல்வி அடுத்து என் தங்கை பொற்கொடி. குப்பன் மகனான் என் தந்தை ஒருக்கட்டதில் மனைவி பிள்ளைகளை தணித்துவிட்டு பரதேசம் சென்றான். பிள்ளைகளை தன் சகோதரர்கள் உதவியுடன் படிக்கவைத்தாள் குப்பன் மருமகள். இந்த சூழ்நிலையில் செல்வி தன் காதல் பற்றி குப்பன் மருமகளிடம் சொல்கிறாள். வானத்துக்கு பூமிக்கும் குதித்தவளாய் காதலை எதிர்கிறாள். செல்வி வீட்டை விட்டு வெளியேறுகிறாள்...
என் அம்மா என் குடும்பம் என் ஊர் மொத்தமும் சொல்வதைப் போல் நான் "ஓடிப்போய் விட்டேன்"....செல்வியான நான் ஏன் ஓடிப்போனேன்.?
கோவிந்தன் பட்டாளத்துக்காரன் என்னுடன் பள்ளிக்கூடத்தில் உடன் படித்தவன். பள்ளி நாட்கள் முதலே என்னை காதலிப்பதாய் கூறினான். என் குடும்பம் தாய் என்று பல காரணங்களால் அவன் காதலை தவிர்த்தேன் எண்ணத்தான் மறைத்தாலும் என் மீதான அவனின் காதல் என்னை கொன்று வதைத்தது. கல்லூரி படிப்பு முடிந்து சென்னை வந்து வேலை தேடி அலைந்த நாட்களில் அவன் காதலும் என்னுடன் கூடவே வந்தது. கோவிந்தனை காதலிப்பதாய் ஒத்துக்கொண்டேன். காதல் சுகமாய் சென்றது, என் தாயும் என் மாமன்களும் என் காதலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரியும். என் தங்கை பொற்கொடி மாட்டுமே அவர்கள் ஏற்றுக்கொள்வர் என்று நம்பினாள், என் காதலுக்கு முழுமையாய் ஆதரவு தந்தாள். பொற்கொடியோ வித்யாசமாய் பேசிதிரிந்தாள். எந்த கேள்வி கேட்டாலும் அவள் பதில்களில் மிகுதியானா வார்த்தைகள் மார்க்ஸ் என்றோ இல்லை பெரியார் என்றோ வரும். அவள் பேச்சுக்களும் செயல்களும் நடைமுறை வாழ்வுக்கு ஒத்துவராது என்று தெரிந்தாலும் அவள் என் காதலை ஆதரிப்பதால் அவள் பேச்சுக்கள் குறித்து ஏதும் சொல்வதில்லை...........
நானும் அம்மாவிடம் சொல்லிவிடலாம் என்று பலமுறை முயன்றும் பயத்தால் தோல்விகண்டேன். இதற்கு இடையே எங்கள் காதல் குறித்து கோவிந்தன் குடும்பத்துக்கு தெரியவந்தது. அவன் அம்மா என்னை மருமகள் என்று கொண்டாடினாள்.அவன் குடும்பத்திலிருக்கும் அனைவரும் எங்கள் காதலை ஏற்றுக்கொண்டார்கள். என்னால் என் தாயிடம் என் விருப்பத்தை சொல்லமுடியவில்லை, அச்சம் என் வென்றுக்கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் என் மனஉளைச்சல் அதிகமாய் போய் தற்கொலை செய்ய முடிவு செய்தேன். அன்று மாலை வேலை முடிந்து அலுவலகம் வரும் வழியில் தூக்க மாத்திரைகளை வாங்கிவந்தேன். எல்லோரும் உறங்கியப்பின் மாத்திரைகளை விழுங்கிவிடுவதாய் திட்டம். முடிந்த அளவு அழுதேன் . வழமை போல் கோவிந்தன் அழைத்திருந்தான் அவனிடம் சரியாய் பேசவில்லை உடல்நிலை சரியில்லை உறங்கப்போவதாய் போய் சொல்லி அவனின் அழைப்பை துண்டித்தேன்.
ஊர் அடங்கிபோய் இருள் போற்றி உறங்கிபோயிருந்தது. அங்கங்கே நாய்களின் குறைப்பு சப்தம் கேட்டது. எனக்கோ என்ன செய்வது என்றே தெரியவில்லை. வீட்டுக்கு வெளியே வந்து நின்றேன்.பொற்கொடி ஏதோ புத்தகம் படித்துக்கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும் உறங்கவில்லையா என்று வினவினாள் உறக்கம்வரவில்லை என்று பதில்தந்தேன். என் முழுமையாய் சோகம் அப்பியிருந்த முகத்தை கண்டவள்.
"என்ன ஆச்சு ஏன் ஒரு மாதிரியாய் இருக்கிற ? என்றாள்
"இல்லையே நல்லாத்தான் இருக்கிறேன்"என்றேன்
பதிலேதும் பேசாதவளாய் மீண்டும் படிக்க ஆரம்பித்தாள். சில மணித்துளிகள் அங்கு ஒரு மௌனவெளி பரவியது, சுற்றியிருந்த தென்னை மறந்களினுடே பயணித்த காற்றின் ஓசை அமைதியை கிழித்து ஒரு வித அச்சம் கலந்த சூழ்நிலையை உருவாக்கியது. தாங்க முடியாதவளாய் கதறிஅழ ஆரம்பித்தேன். பொற்கொடி என்னை ஓடி வந்து அனைத்துக்கொண்டவளாய், என்னை தேற்றினாள். நீண்ட நேரம் இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். நான் தற்கொலை செய்துக்கொள்ள தயாரானதை அவளிடம் சொன்னேன் என்ன மிகவும் கடிந்துக்கொண்டவள், மீண்டும் இதுப்போல் முட்டாள் முடிவுகளை எடுக்கவேண்டாம் என்றாள்.
சில நாட்கள் கழித்து அம்மாவிடம் என் காதலை சொன்னேன். வானத்துக்கும் பூமிக்கும் குதித்தவள் ,தான் வீட்டை விடு செல்வதாய் மிரட்டினாள். நான் அவளின் காலில் விழுந்து மன்றாடினேன். அன்று சண்டை ஓய்ந்து உறங்க சென்றோம். தினம் தினம் அம்மா என்னை திட்ட ஆரம்பித்தாள், கோவிந்தனை மறக்க சொல்லி துன்புறுத்தினாள். நான் மன ரீதியாய் மிகுந்த துன்புறுத்தல்களுக்கு ஆளானேன். அம்மா என் காதலி எதிர்க்க ஒரே காரணம் அவன் வேறு சாதி. வாழ்கையே இருண்டுபோனதாய் தோன்றியது. உலகில் இருந்த எல்லோருமே வெறுப்பதாய் உணர்ந்தேன். கோவிந்தனின் அழைப்பும், அறுதல் வார்த்தைகள் மட்டுமே என்னை இயங்கசெய்தன. அவ்வப்போது பொற்கொடியின் ஆறுதல்களும் என்னை அறுதல் செய்யும். பொற்கொடியோ எனக்கும் அம்மாவுக்கும் இடையே அகப்பட்டு அல்லாடினாள். இப்படியே வாழக்கை சென்றுக்கொண்டிருந்தது. ஒருநாள் முடிவு செய்தேன். கோவிந்தனுக்கு அழைத்து நான் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டதாய் சொன்னேன். அவனிருந்த டெல்லிக்கு விமானம் பிடித்து சென்றேன். அடுத்த இரண்டு மணிநேரத்தில் கோவிந்தனை சந்தித்தேன். அவனின் புன்னகை பல நாட்களுக்கு பிறகு எனக்கு என் உயிரை மீட்டுத்தந்தது, என் மீட்பவராய் காட்சிதந்தான். யாரிடம் சொல்லமால் பதிவு திருமணம் செய்துக்கொண்டோம். பிறகு ஒரு குறுஞ்செய்தி மட்டும் மன்னிப்பு கேட்டு பொற்கொடிக்கு அனுப்பிவிட்டு தொலைபேசியை அணைத்துவிட்டேன்.
அடுத்தநாள் என் தாய், மாமன், அத்தை என்று எல்லோரும் கோவிந்தன் எண்ணுக்கு அழைத்தனர். திரும்பி வந்துவிடுமாறு மாமா அழைத்தார். தானே திருமணம் செய்து வைப்பதாய் சொன்னார். மாமனின் பாசம் கண்டு மெய்சிலிர்த்தேன். உடனே புறப்பட்டு வீடு திரும்பினேன். பொற்கொடி என்னிடம் அப்போது சொன்னவை இன்றும் நினைவில் இருக்கிறது " மாமா, அம்மவலாம் நம்பாத, கடசியா காதல் படம் மாதிரி ஏமாதிடுவானுங்க"என்றாள். அவள் சொன்னது அப்படியே நடந்தது, கோவிந்தன் கும்பத்தார் முறைப்படி பேச வந்த போது எல்லோரும் சேர்ந்து அவர்களை அசிங்கப்படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றினர். பொறுக்கமுடியாமல் நான் அவர்களுடனே செல்வது என்று முடிவுசெய்தேன். நான் கிளம்ப தயாரானபோது அம்மா என்னை அடிக்க வந்தாள். கோவிந்தன் என்னை காப்பாற்றி அவள் என் மனைவி யாரும் அடிக்கும் அதிகாரம் இல்லை என்றான். எல்லோரும் அதிர்ச்சியில் நிற்க நான் அவர்களுடன் வீட்டை விட்டு வெளியேறினேன்....
இது நடந்து முடிந்து ஒரு வருடம் ஆகிவிட்டது யாரும் என்னுடன் பேசுவதில்லை பொற்கொடி மட்டும் தினமும் பேசுவாள். நான் இப்போது இந்த கதையை அம்ரிஸ்தரிலிருந்து சொல்லிக்கொண்டிருக்கிறேன். அதிகாலை குளிர் கோவிந்தனின் கதகதபில் என்னை நெருங்க மறுக்கிறது. குருதுவாரக்களில் பாடல் சப்தம் கேட்கிறது. என் சொந்தங்களை விட்டு பல ஆயரம் மைல்கள் தள்ளியிருகிறேன். எல்லோரையும் பார்க்கவேண்டும் மீண்டும் என் ஊருக்கு போகவேண்டும். அம்மா உன் உணவு எனக்கு மீண்டும் வேண்டும், என்னைக் காட்டிலும் உன் சாதி உனக்கு முக்கியமா ? நான் வந்த பரம்பரையில் புக்கான் என்ன சாதியென்று உனக்கு தெரியுமா?
Comments
Post a Comment