அடுத்த தலைமுறை யோனிக்களும், விந்துகளும் தீர்ந்துப்போக கிடக்கின்றன
ஒருக்கையில்லாத எனது மகனும், தலை பெருத்து பிறக்கப்போகும் என் மகளும் எதிர்க்காலமாய் நிற்கிறார்கள்..
நீ பறித்துக்கொண்ட கடல் சூழ்ந்த எங்கள் நிலம் மலடுக்கொள்கிறது
ஆடும், மாடும், நாயும், நரியும், காக்கையும், குருவியும்
காலின்றி, உடல் சிறுத்து, புண்கள் புற்றுக்களாய் சீல்வழிய பிறக்க காத்துக்கிடக்கின்றன
அணுக்களே உங்கள் இயக்கத்துக்கு நீங்களேனும் ஓய்வுத்தாருங்கள்
எங்கள் மன்றாடல்கள் உங்கள் செவிப்பறையினையாவது சென்றுசேரும் என்று நம்புகிறோம்....
உங்களுக்கு தெரியுமா, தூரத்து தேசத்தில் ஓர் அழகியிருந்தாள்
மஞ்சள் தேகமும், உருண்டைக்கண்களும், சப்பை மூக்கும் கொண்ட அவள்மேல்
விண்ணுலக தேவனொருவன் காதல்கொண்டான், அப்படியான அழகியவள்...
இன்று அவளை புண்கள் மோகிக்கின்றன, அவள் யோனியில் சீல் வழிய வாழ்ந்துக்கொண்டிருக்கிறாள்
உங்களின் சீற்றம் அவள் வாழ்வை அழித்துவிட்டது.
கல்வி,பெண்மை, மக்கள், நிலம் என்று அனைத்தையும் இழந்தவளாய் அலைந்துக்கொண்டிருக்கிறாள்...
எங்கள் தேசத்தில் அப்படியான தேவதைகள் நிறையபேர் இருக்கின்றனர், என் மகளும் ஓர் தேவதையே
அவர்கள் அழகில் மயங்கியேனும் தாக்குதலை நிறுத்துங்களேன்....
அதிகார வர்கத்தின் கேளிக்கை விருந்துகளுக்கு ஒளிகொடுக்க,
எங்கள் அடுப்பினை அணைக்க முற்படுகிறாய்
அவர்கள் செவிகளை எங்கள் அழுகை தீண்டவில்லை
நீங்களேனும் கருனைக்காட்டுங்கள்...
அணுக்களே!! வேண்டுமெனில் எங்களை பலியிட்டு படயலிடுகிறோம்
எங்கள் தலைமுறை வாழ வழிக்கொடுங்கள்....
மன்றாடி வேண்டுகிறோம் எங்களை வாழவிடுங்கள் ...........
Comments
Post a Comment