Skip to main content

என் மரணவிழா கவிதை



என் மரணவிழாவில் இசைக்கப்படும் கவிதை இப்படியனதாய் இருக்கலாம்...

இதோ இங்கு சயனித்து கிடக்கும் இச்சவம்,வரண்டுப்போன ஓர் மாலைநேரத்தில்
யாருக்கும் அறிவிக்காமல் தன் உயிரினை வெளியேற்றியது...
தடைகளின்றி பொழுதுகடந்து உறங்கிக்கொண்டிருக்கிறது...தன் அடிமை
வாழ்வுக்கு ஓய்வுத்தந்து சுதந்திரமாய் கிடக்கிறது.
இச்சவம் அடிமையாகவே ஜனித்தது, அடிமையாகவே வாழ்ந்தது
அடிமையாகவே மரணித்தது சுதந்திரமடைந்தது...

இதுகாலம் தன்குறியை உயர்த்திப்பிடித்து தகுதியேயின்றி பெண்ணியம் பேசி அலைந்துக்கொண்டிருந்தது...
மார்க்ஸை, லெனினை புத்தகங்களில் தாங்கியவாறு ஏட்டுசுரைக்காய்
புரட்சி பேசித்திரிந்தது...
கவிதைகளை எழுத முயற்சித்து இறுதிவரை தோற்றுக்கொண்டேயிருந்தது..
கதைகளில் தோல்விக்கண்டதும் இச்சவம்தான்.
தனக்கான இருப்பை பதிவுசெய்ய "இசங்களை" பேசித்திரிந்தது
பின்நவீன அரிச்சுவடியறியாமல் பின்நவீனம் பேசியது
ஆரம்பநிலையிலேயே முடிவுபெற்ற இச்சவத்தின் பிரதிகள் இறுதிவரை
முடிவின்றியே முற்றுப்பெற்றன.
ஊற்றவே முடியாத மதுவையும் நாவால் நக்கி பருகியது இச்சவம்
பித்தோவன் இசைக்காத இசையை இசைத்தாய் எண்ணிக்கொண்டது,
நெருடாவை தாண்டிய காதல் கவிதை படைத்ததாய் பெருமைபேசியது....
முகில்சூழ்ந்த ஒருமலை தேசத்தின் அழகியை காதலித்து..
காதலும்,காமமும் ஒருசேர வழிந்தோடியது...
அவளின் சுருண்டமயிர்க்கற்றைகளில் கவிதை பாடியது..
.அவளின் அரவணைப்பில் குழந்தையாய் மாறிப்போனது..
அவளுக்காய் தன் கவிதைகளை இசைத்துக்கொண்டேயிருந்தது...அவளும் தாலாட்டுப்பாடிக்கொண்டேயிருந்தாள்...

இச்சவத்தின் துரோகங்கள் சொல்லில்அடங்காது...
கோடிக்கணக்கான மானிட உயிர்களின் மரணத்தில் சோறுத்தின்றது, காமம்புரிந்தது...
மனிதகுருதியின் சுவையில் போதைக்கொண்டது, மனிதசதைகளை புசித்தது...
ஒருநாள் மதுவெறியில் தஸ்தாயெவ்ஸ்கியின் சதையை புசித்துக்கொண்டிருப்பதை கண்டேன்
அவர் மரணவலியில் கதறிக்கொண்டிருந்தார்
மேலுமொருநாள் பொலிவியாவில் "சே"வினை புசித்தது....
ஒருபொழுது பாரதியை கால்களால் நசுகிக்கொண்டிருந்தது
புத்தன் வேடம்தரித்து ஒரேநாளில் பல்லாயிரம் உயிர்களை தின்றது...
உருமாறி அரை பொழுது உன்னாநோம்பு இருந்ததும் இச்சவமே....
இப்படி எல்லோரையும் புசித்தது....

எல்லாம் முடிந்து விடைப்பெறவிருக்கிறது இச்சவம்......

Comments

Popular posts from this blog

செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள்: வெறுப்பை ஜனநாயகப்படுத்தும் அழகியல்!

0. பெருந்தொற்று குறித்த செய்தி என்னை வந்து சேர்ந்த போது, நான் எனது சீனப் பயணத்திற்கு தீவிரமாக தயாராகி கொண்டிருந்தேன். ஒரு வேளை பெருந்தொற்று என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால், நான் இந்த பிரதியை பெய்ஜிங்கிலிருந்து எழுதியிருக்கக்கூடும். அந்த நேரத்தில் அது பெருந்தொற்றாக உருவாகியிருக்கவில்லை. மாறாக, சில நூறு மனிதர்களை நிமோனியா போன்ற விளைவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் யாரும் அறியாத கிருமியாக, தொலைதூர செய்தியாக இருந்தது. கோவிட்-19 பெருந்தொற்று நான் வாழ்ந்த நகரத்தை வந்தடைய மூன்று மாதங்களானது. உலக சுகாதார நிறுவனம் அதை ஒரு தொற்றுநோயாக அறிவித்த அந்த இரவில் நண்பர் ஒருவர் பின்வரும் வாட்சப் செய்தியை அனுப்பியிருந்தார்: “நாம் அனைவரும் வீடு திரும்பும் நேரம் வந்துவிட்டது. பிரிந்து கிடக்கும் மனித இனம், ‘மனிதர்’ எனும் ஒற்றை அடையாளத்தின் கீழ் ஒன்றினையும் அற்புதமான சூழலை கண்களுக்கு புலப்படாத சிறிய கிருமி உருவாக்கி இருக்கின்றது” 1. மார்ச் 2019க்கு பிறகு மனித இருப்பு அதிக சிக்கலானதாகவும், இதுவரை இல்லாத அளவில் மெய்நிகரானதாகவும் மாறியது. கோவிட் -19 பற்றிய செய்திகள் இணையம் மற்றும் தொலைக்காட்சி திரைகளை நிரப்பின. போ...

In the most health-obsessed society ever, all is not well*: On Trauma

1 Philosopher Byung-Chul Han's essay Neuronal Power begins with the following lines: " Every age has its signature afflictions. Thus, a bacterial age existed; at the latest, it ended with the discovery of antibiotics. Despite widespread fear of an influenza epidemic, we are not living in a viral age. Thanks to immunological technology, we have already left it behind. From a pathological standpoint, the incipient twenty-first century is determined neither by bacteria nor by viruses, but by neurons ". Modern integrative body mind science defies Byung-Chul Han’s statement, that it is reductive to define human suffering solely in terms of ailments. However, we are living in an era, where production relations dictate nearly everything about human existence, in this specific context Byung-Chul Han’s statement—that the majority of human society is afflicted by mental or neuronal issues—serves as a foundational lens to understand contemporary humans and their struggles. In today’...

படுகொலைக்கு முன்னான சில மணி நேரங்கள்

    ஏதும் செய்வதறியாது நான் அப்படியே அமர்ந்து கிடக்கிறேன் , எத்தனை மணி நேரங்கள் என்று நிச்சயம் தெரியவில்லை . அந்த தகவல் எனக்கு சொல்லப்பட்ட   நொடியிலிருந்து நான் இப்படியே தான் அமர்ந்திருக்கின்றேன் , ஒரு துளிக்கூட அசைவில்லாமல் ஊரின் எல்லையில் அசையாது கிடக்கும் வேடியப்பனை போல் . கண்களில் லேசாக கண்ணீர் வருவதுபோல் இருக்கிறது ஆனால் வரவில்லை வந்தும் ஒரு பயனும் இல்லை . உடல் நடுங்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை , இறுகிப்போன உடலை விட்டு வெளியேறும் மூச்சு காற்றை கூட என்னால் உணரமுடியவில்லை . அதே நேரம் ஒளியற்று , ஆண்டுகளாய் இருண்டு கிடக்கும் அந்த அறையின் காற்றில் பிசுபிசுப்புடன் கலந்திருந்த உயிரின் வெப்பம் என்னை தீண்டி செல்கிறது , சூடான மழைத் துளியை போல் . மூளை சீரற்று யோசித்து கொண்டிருக்கிறது ... அம்மாவின் முலை காம்புகள் , விபத்தொன்றில் மரணித்த நன்பன் , தேர் திருவிழா , அப்பா கைபிடித்து கழனிக்கு கூட்டி சென்ற முதல் நாள் , அவளின் முதல் முத்தம் , இதுவரை முகம் பார்க்காத மகனின் கணவு முகம் , கல்லூரியின் விடுதி அறை , முதல் காமத்தின் வெள்ளை இரவு ... இப்படி சொல்லி ம...