நீங்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கும் சமூகமும்,தேசமும் மிகப்பெரியபொருளாதார வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது எனும் பின்பத்தை இந்திய தேசியம் கட்டமைத்துக் கொண்டிருக்கும் தருணத்தில்,பிச்சையெடுக்கும் குடிகளிடம் பிச்சையெடுத்து அப்படியான பின்பம் போலியானதுஎன்று உடைத்தெரிந்துள்ளார்.தமிழக ஆட்சியாளர். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பேய்க்கு பயந்து சாத்தானிடம் மாட்டிக்கொள்ளும் தமிழகம் வழக்கம்போல் இம்முறையும் கொள்ளை கூட்டதிடமிருந்து தமிழகத்தை பாதுகாக்க தமிழர்கள் சர்வாதிகாரியின் கைகளில்மாட்டிக்கொண்டிருக்கின்றனர். மூன்று தமிழர் உயிர்காக்க சட்டபேரவையில் தீர்மானமேற்றி சிறிது நம்பிக்கை தந்த புது ஆட்சியாளர்,சமசீர் கல்வியில் ஆரம்பித்தார் தனது பழைய செயல்பாடுகளை.
பரமக்குடி படுகொலைகள்,சமசீர் கல்வி,கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவாய் எதுவும் செயல்படாமல் மௌனம் காப்பது,சட்டமன்ற தீர்மானத்தை முழுமையாய் முரண்கொண்டு மூன்று தமிழர்களுக்கு எதிராய்நீதிமன்றதில் பதில்தந்தது,அண்ணா நூலகத்தை இடமாற்ற முனைந்தது,இறுதியாய்அடிப்படை தேவைகளின் விலையேற்றம்.6.25காசுகள் உயர்த்தப்படிருக்கும்பால்விலை,உயரப்போகும் மின்சார கட்டணம்,உயர்ந்துப்போன பேருந்து கட்டணங்கள். விலைஉயர்வுக்கு கொடுக்கப்பட்டுள்ள காரணம் அரசுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்பதுவே. பொது நிறுவங்கள் என்பவை மக்களுக்கான சேவை செய்பவையே அன்றி லாபமீட்ட தொடங்கியவையன்று.
அவை லாபத்தில் இயங்க ஏழை எளியவர் குருதியை சுவைக்க கூடாது என்பதை புரியாத ஆட்சியாளர்கள் இருக்கும் தேசத்தில் எதன் மீதும் நம்பிக்கையில்லை.இருக்கின்ற ஏரி குளங்கள் அனைத்தையும் குப்பைகளால் நிரப்பி வானளவு கட்டிடங்கள் காட்டி பன்னாட்டு நிறுவனகளுக்கும்,டாடாவுக்கும்,ரிலையன்சுக்கும் சேவகம் செய்யும் ஆட்சியாளர்கள் இந்த தேசத்தில் இன்னும் நாற்பது கொடி மக்கள் உறங்க வீடின்றி வீதிகளில் உறங்குவதையோ, சுகாதாரமில்லா வாழ்க்கை குறித்தோ, தினமும் உண்ணும்ஒருவேளை உணவு குறித்தோ எந்த அக்கறையுமேயில்லை.
பன்னாட்டு எசமானர்களுக்குசேவகம் புரியும் பத்து கோடி பேருக்கு மட்டுமே இந்த தேசம் சுருங்கிக்கிடகிறது,தமிழக ஆட்சியாளர்களும் முந்தய ஆட்சி சீர்கேடுகள்,மைய அரசு நிதி தராமை எனும் பல காரணங்களை கொண்டு இப்பணிகளை செவ்வனே செய்கின்றனர் ஆறு ரூபாய் விலை உயர்வு என்பது ஆட்சியாளர்களின் பிள்ளைகளையோ, இருக்கும் சிறுஅளவு மேல்வர்கத்துக்கோ எந்த பாதிப்புமில்லை ஆனால் மிகுதியான மக்கள் வறுமையில் வாழ்வது என்பதே நிசம். பேருந்து பயண கட்டண உயர்வென்பது கார்களில் பவனி வருபவரையும்,குளிருட்டப்பட்ட சொகுசுதனியார் பேருந்துகளை செல்பவரை எந்த அளவிலும் பாதிக்கப்போவதில்லை ஆனால் எதார்த்தத்தில் தினமும் இரண்டு ரூபாய் கட்டணத்தில் பிதுங்கிவழியும்பேருந்துகளில் பயணிக்கும் மனிதர்களே முழுமையான தாக்குதலுக்கு ஆட்படுகின்றனர்.
முந்தய ஆட்சியில் இருக்கும் சாதாரன பேருந்துகளை டீலக்ஸ் அல்ட்ரா டீலக்ஸ் எனும் வழியில் ஒரு தாக்குதலை தொடுத்தனர்,இன்றியஆட்சியாளர்கள் கட்டணங்களை உயர்த்தி அடுத்த தாக்குதலை தொடுத்துள்ளனர். என் நண்பனொருவன் சொன்னதைப்போல் பேருந்து கட்டணங்கள் விமான கட்டணங்களுடன் போட்டியிடுகின்றன. சாதிய அடக்குமுறை,அறிவு அடக்குமுறை,பொருளாதார தாக்குதல் என்று அணைத்து வகையிலும் இன்றைய ஆட்சியாளர்கள் சர்வதிகார ஆட்சி புரிகின்றனர்.
நாமும் நம் மீது கட்டவிழ்க்கப்படும் அடக்குமுறைகள்,கலாசார இருடிப்புகள் என்று எதையும் உணரமால் உன்ன சோறு கிடைக்கின்ற ஒரே காரணத்துக்காய் எதையும் கண்டுக்கொள்ளாமல் சிறந்த அடிமைகளாய் எதையும் எதிர்த்து போராட துணிவின்றி வாழ்கிறோம்.ஆட்சியாளர்கள் தம்சுயலாபத்துக்காய் நம் நிலத்தை கொலை பூமியாய் மாற்றுவர்.
நாம் நம் நிலத்தை விட்டே துரத்தப்படுவோம். உறவுகளின்றி, நிலமின்றி ஏதோ ஓர் தேசத்தில் நம் தலைமுறைகள் அகதிகளாய்அலைந்துக்கொண்டிருக்கும் காலம் தொலைவில்யில்லை. இதை தமிழ்பெருமை பேசும் முன்னால் ஆட்சியாளர்களும், ஆர்ய புகழ் பாடும் இன்றைய ஆட்சியாளர்களும் செவ்வனே செய்வர். பேய்க்கு பயந்து சாத்தானிடம் மாட்டிக்கொண்ட கதை முடியும்போது தமிழகம் எனும் தேசம் வரலாறுகளின் நீண்டதூரத்தில் புதையுண்டு கிடக்கும்.
சில நாட்களுக்குமுன் ஈழத்து நண்பன் இப்படி சொன்னான் " நாங்கள் நிலத்தை, லட்சகணக்கான மக்களை இழந்திருக்கலாம் ஆனால் தமிழக தமிழர்களைபோல் தன்மானமற்ற அடிமைகளில்லை"
Comments
Post a Comment