மேற்கு - கிழக்காக இடைவிடாது சுழன்றுக்கொண்டிருக்கும் அந்த நெடுங்காடு ஆதியின் முதல் கிழமைகளில் மனித மூச்சினை அறிந்திராத வல்லையாக இருந்ததென்று ஆங்கிலோ பாதிரி டானியல் ஈஸ்ட்பெரி தன் வாழ்க்கை குறிப்பில் எழுதிவிட்டு சென்றிருந்தான்..கானக இலைகளுக்கிடையே பாசியின் நிறம் ஒத்த பச்சை வாசத்தை கொண்டிருந்த குறுஞ்சி மனிதர்கள் வாழ்ந்ததை டானியல் அறிந்திருக்கவில்லை....பின்னாளில் காப்பி கொட்டையுடன் வந்த பாதிரியின் பேரன் பேட்ரிக் ஈஸ்ட்பெரி, வன மனிதர்களின் பச்சை குருதியினை கொண்டு ஆழிக்கும் பாலைக்குமாய் முடிவற்று நீண்டு கிடக்கும் மலை பூமிக்கு வழித்தடம் சமைத்தான். இரும்பின் இடைவிடாத ஓசையில் வீழ்ந்து செத்த நிலத்தின் மரங்களுடன், மனிதர்களும் செத்தார்கள். பேட்ரிக்கின் மேலாள் அரசிக்கு எழுதிய கடிதத்தில் இப்படி சொல்கிறான் “மரங்கள் வரிசையாக வெட்டுபட்டு விழும் நேரத்தில் எங்கள் கண்களில் கண்ணீர் அருவியாய் வழிந்தோடியது...மரங்களின் சாபத்துக்கு பரிகாரமாய் அவை செத்த 16வது நாளில் மரணமுற்ற ஆன்மாக்களுக்கு மனிதர்களை படையலிட்டோம், பெருமதிப்புக்குறிய அரசியாரே! மனித தலைகள் உருண்டோடியது ஏனோ அத்தனை சுவையான விடயமாக இருக்கவில்லை” ஆயிரம் ஆண்டுகளின் மண் காப்பி புதர்கள் மண்டி வாழ ஆரம்பித்தது அப்போதிலிருந்துதான். குருவிகளும், பட்சிகளும், யானைகளும், புலிகளும், சிறுத்தைகளும், பாம்புகளும், ஓனான்களும், புழுக்களும், குயில்களும், கழுகுகளும் அந்த வனத்தை விட்டு எதிர் பக்கம் செல்ல ஆரம்பித்ததும் அப்போதிலிருந்துதான்.
பாதிரியின் பேரன் வடித்த வழியினூடாக தான் பச்சையின் மனம் சிதைந்து போன அந்த மேனாள் வனத்தை கானும் ஆவலுடன் நகரத்து மனிதர்கள் சாரை சாரையாக வந்துக் கொண்டிருந்தார்கள். நகரத்தில் தொடங்கிய அந்த வரிசை காட்டை 3197 முறை சுற்றி வந்து முடிந்தது. வரிசை முடிந்த இடத்தில் நீண்டு விரிந்து சென்ற காட்டாற்றின் மறுகரையில் தான் யானைகள் காப்பகம் ஒன்றை அமைத்திருந்தார்கள் தீபகற்பத்தின் அரசர்கள்... வரிசையில் நின்றிருந்த மனிதர்களிடம் காசை வாங்கிக் கொண்டு, கூட்டம் கூட்டமாய் அவர்களை அக்கரைக்கு கொண்டு சென்று கொட்டிக் கொண்டிருந்தன புகை கக்கும் விசை படகுகள்.... உழுத்துப்போன விசை படகுகளின் ஓயாத பாய்ச்சலில் காற்று வெளியெங்கும் படர்ந்திருந்த மண்னென்னையின் வாசம் இரு கரைகளையும் பாலமிட்டு இணைத்திருந்தது....படகுகளின் ஆசன குழாயினூடாக வெளி வரும் எரி புகை மேற்கு திசையாக பயணித்து சேரத்து வீதிகளின் வழியாக அரபிக் கடலை கடந்து சொமாலிய கிராமம் ஒன்றில் பசித்த பிஞ்சு வயிறுகளி ஒடுங்கிய இடுக்குகளில் பதுங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருத்து. படகினூடே கரையில் வந்திரங்கும் கோடிகனக்கான கால்களை வரவேற்க யானைகள் எப்போதும் தாயார்நிலையில் காத்துகிடந்தன...கற்பம் தரித்த பெண் யானைகள், பழுப்பேறிய தந்தகளை கொண்டிருக்கும் ஆண் யானைகள், இரண்டு மூன்று மாத குட்டிகள், கிழடுதட்டிய மூத்தோர்கள்.....
நீண்டிருக்கும் காப்பகத்தின் நுலைவாயிலில் பின்வரும் அட்டவனையொன்று எப்போதுமே தொங்கிக்கொண்டிருந்தது
- யானைகளை பார்க்க – 10 ரூ
- யானை சவாரிக்கு – 50 ரூ
- யானையை குழிப்பாட்ட – 100 ரூ
- குழந்தைகளுக்கு - இலவசம்
நாகராஜின் அப்பன் மாதேஸ்வரன் அந்த காப்பகத்தின் துப்புறவாளராய் நீண்ட காலமாக இருந்தார், எத்தனை வருடங்கள் என்பது அவருக்கு நிச்சயம் தெரியாது ஏனெனில் அவருக்கு எண்கள் தெரியாது. வழுவற்றுப்போன உடலாய் மாற ஆரம்பித்த மாதேஸ்வரனின் மீது பெரும் கருனை கொண்ட காப்பகத்தின் அதிகாரி அவருக்கு வேலையிலிருந்து நிரந்தர ஓய்வு கொடுத்து அனுப்பி வைத்தார். இன்னும் சில காலம் மாதேஸ்வரன் வேலையில் இருந்துவிட்டு போகட்டும் என்று சொன்ன தன் உதவியாளனை பார்த்து ‘வற்றி போன உடல்களை குப்பை தொட்டியில் தானே தூக்கி வீச முடியும்’ என்று சொல்லிவிட்டு கம்பீரமாய் நடந்து சென்றார். ஒரு முரட்டு யானையின் செயற்கையான கம்பீரம் அது. மிடுக்கான பச்சை நிற காவல் உடை, நெஞ்சில் குத்தியிருக்கும் வண்ண பட்டையம், அதிகாரத்தின் அடையாளமாய் இடது தோல் பட்டையில் தொங்கிக்கொண்டிருக்கும் கருமை நிற ரோப் கயிறு, பளபளக்கும் தோல் சப்பாத்து, இடுப்பின் ஓரத்தில் உறைக்குள் புதையுண்டு கிடக்கும் துப்பாக்கி...இவையும் அவரின் கம்பீர நடைக்கு வலுகூட்டின, கூட்டின என்று சொல்வதை காட்டிலும் வலுகூட்டின என்று அதிகாரி நம்பினார்....காட்டுவீரனை கொல்ல அனுப்பபட்ட படையில் தானும் ஒரு முக்கிய அங்கம் என்று சொல்லிக்கொள்ளும் அதிகாரி, வீரன் உடலினை தைத்த 28 குண்டுகளின் 7 குண்டுகள் தன்னுடையது என்றும் சொல்லிக்கொள்வார்.
லுங்கியும், பனியனுமாய் காலை 6 மணிக்கு வேலைக்கு வரும் மாதேஸ்வரன் திரும்பி குடிசைக்கு செல்ல இரவு 9-10 ஆகும். காப்பகத்துக்கு வந்து போகும் அத்தனை சுற்றுலா பயணிகளின் கழிவுகளையும் தனியோருவராய் கூட்டி சுத்தம் செய்து கழுவ வேண்டும். மஞ்சள் ஏறிப்போன வெள்ளைப் பீங்கான குழிகளில் நிறம்பி கிடக்கும் மல குவியல்களுக்கும், மூத்திர நாற்றத்தின் நடுவிலும் தான் அவரின் வாழ்க்கை அதுவரை இயங்கிக்கொண்டிருந்தது....அப்பனின் ஓய்விக்கு பின் நாகராஜ் வேலைக்கு போக ஆரம்பித்தான். மாதேஸ்வரனின் காலம் காலமான உழைப்பில் மனம் குளிர்ந்து போயிருந்த அதிகாரி நாகராஜை யானைகளின் கழிவுகளை சுத்தம் செய்யும் சித்தாளாக நியமித்தான். அப்பனை போலவே காலை 6 மணிக்கு போகும் நாகராஜ் திரும்பி குடிசைக்கு வர 9-10 ஆகும். அப்பனிலிருந்து வெகுவான ஒரு மாற்றத்தை இவன் கண்டிருந்தான். அழுக்கு லுங்கி அதிகாரியின் பழைய கால் சராயகவும், கிழிந்த பனியன் ஒரு நைந்துப்போன டீசர்டுமாய் மாறிப்போயிருந்தது... ஆனால் ஒன்று மட்டும் மாறவே இல்லை... ஆதியின் முதல் கிழமைகளில் டானியல் நுகராமல் விட்ட பாசியின் நிறம் ஒத்த பச்சை வாசம் அது. வேலைக்கு வந்த ஆரம்ப நாட்களில், எறும்பு கூட்டம் போல் ஆயிரகணக்கில் வரும் இந்த மனிதர்கள் எல்லாம் எங்கிருந்து வருகிறார்கள் எனும் கேள்வி அவனுள் எழுந்துக்கொண்டே இருந்தது, ’நகரம்’ என்று பதில் சொன்னான் அதிகாரியின் உதவியாளன்... நகரம் எனும் ஒன்றை அவனால் கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை. எப்படி இத்தனை மக்கள் நகரத்தில் வாழ்வார்கள் எனும் அடுத்த கேள்வியும் எழவே செய்தது. அவனுக்கு தெரிந்தது எல்லாம் யூக்லிப்டஸ் மரங்களும், பேட்ரிக் ஈஸ்ட்பெரி கொண்டு வந்த காப்பி புதர்களும் மட்டுமே.
காப்பகம் காலை9 முதல் மாலை 5.30 வரை பரபரப்பாகவே இருக்கும்... யானை சவாரி, யானை பார்த்தல், யானை குளியல் என்று தனித்தனியாக அதன் போக்கில் நடக்கும். நாகராஜ் காலையில் 6 மணிக்கு வந்ததும் தன் யானையை காட்டாற்றில் குளிப்பாட்டி அதன் இடத்தில் சங்கலியிட்டு கட்டிவைப்பான். மிகவும் வயது மூத்த யானை அது, சாவின் விளிம்பில் தான் வாழ்ந்து வந்தது. சமயங்களில் சங்கலியின் உராய்வில் யானையின் கால்களில் வரும் புன்னை சுற்றி ஈக்கள் கூட்டமாய் மொய்த்துக்கொண்டு இருக்கும். மருத்துவர் வந்து மருந்திடும் வரை புன் அப்படியே தான் இருக்கும். புதிய மருத்துவர் பெரும்பாலும் தாமதமாக தான் வருவார் வேலைக்கு, இதற்கு முன் இருந்த வடநாட்டு மருத்தவர் போல் இல்லை இவர். அவருக்கு யானைகள் என்றால் உயிர் எப்போதும் அவைகளுடனே இருப்பார், விளையாடுவார், உணவிடுவார், பல நேரங்களில் யானைகள் மீதே தூங்கியும் போவார்.....ஆனால் இப்போது அப்படி இல்லை, புதிய மருத்துவரோ வாங்கும் சம்பளத்துக்கு வேலை செய்யவேண்டுமே என்று சிகிச்சை செய்பவர். பல சமயங்களில் அவரின் சிகிச்சை பலனின்றி புண் அப்படியே இருக்கும், இவன் தனக்கு தெரிந்த பச்சிலைகளை கொண்டு யானையின் புண்னுக்கு பத்திடுவான், ஆனால் அதிகாரிக்கு அது தெரியவந்தால்... ’நீ என்ன5 வருசம் படிச்சு வந்த டாக்டரா, மூடிட்டு வரட்டி அள்ளவேண்டியது தானே’ என்று வசை வாங்க வேண்டி இருக்கும். ஆனாலும் அவசர நேரங்களில் அதிகாரிக்கு தெரியாமல் தன் யானைக்கு பச்சிலை வைத்தியம் செய்வான்... காட்டு உயிர்களின் மருந்தும், உணவும் நாட்டில் இருந்ததில்லை எனும் தாத்தனின் வார்த்தை அவன் காதுகளிள் எப்போதும் எதிரொளித்துக்கொண்டே இருக்கும். அவனை போலவே அனேக பாகன்களும் சமயங்களில் அதிகாரிக்கு தெரியாமல் யானைகளுக்கு பச்சிலை வத்தியம் செய்வார்கள்...அவர்கள் அனைவருக்குமே காட்டின் வைத்தியம் தெரிந்திருந்தது. அங்கிருந்த அத்தனை யானைகளுக்கும் ஏதோ ஒரு பெயர் இருந்தது, அதிகாரபூர்வ பதிவேட்டில் அந்தந்த பெயரில தான் அந்தந்த யானை பற்றிய விடயங்கள் பதிவு செய்யப்பட்டன். வயது, பால், நோய் குறிப்புக்கள், இப்படி பல... இவனின் யானைக்கு பெயர் ராஜு கனபதி, வயது - 76, பால் – ஆண்.
வரலாற்றின் அத்தனை பக்கங்களிலும் தன் பெயர் இடம் பிடிக்க வேண்டும் எனும் வேட்கையுடனே அலையும் மனிதர்கள் அந்த காப்பகத்தை தங்கள் வரலாற்று பக்கங்களில் பதிய வைக்கும் பேராசையுடன் தங்கள் கேமராக்களில் புகைப்படங்களை எடுத்துக்கொண்டே இருப்பார்கள். பார்க்கின்ற அத்தனை யானைகளுடனும் புகைப்படம் எடுப்பார்கள், எதற்கு என்று தெரியாமலே கேமராக்கள் ஓளிர்ந்துக்கொண்டு இருக்கும், புகைப்பட கருவியை கொண்டு அந்த நிலத்தையும், அங்கிருக்கும் களிறுகளையும், பிடிகளையும், கன்றுகளையும் தங்கள் கைகளில் கொண்டு செல்ல முயற்சிக்கும் மனிதர்களுடன்... அந்த நிலமும், களிறுகளும், பிடிகளும், கன்றுகளும் பல கோடி ஒளி சிதறல்களாய் உருக்கொண்டு பல்வேறு ஊர்களுக்கும், தேசங்களுக்கும் பயணிக்கும். பிறந்து மூன்று மாதங்களே ஆனா சீமாவும் அந்த வரிசையில் நிற்க வைக்கப்பட்டாள், குட்டி யானையாதலால் அவளுக்கு சுற்றுலா பயணிகளிடம் அதிகப்படியான வரவேற்பு இருக்கவே செய்தது, அவள் வேறு எதுவும் செய்ய முடியாதவளாய் சங்கிலியால் பினைக்கப்பட்டப்படி பல மணி நேரம் அப்படியே நின்றுக்கொண்டிருப்பாள் தினமும். ஒரு நாளுக்கு குறைந்தது இருநூறு முன்னூறு பேராவது அவளுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள், அதுவும் சீமாவின் தும்பிக்கையை பிடித்தப்படி தான். சீமாவுக்கு முன் லட்சுமி குழந்தையாக இருக்கும்போது இதை போலவே படங்களை அவளுடன் எடுத்துக் கொண்டிருந்தார்கள். நாகராஜ் இதை பார்த்து தினம் தினம் ஆச்சரியப்பட்டு போவான், ஏன் இவர்கள் இப்படி யானைகளுடன் நின்று இப்படி இடைவிடாமல் புகைப்படங்களை எடுத்துக்கொள்கிறார்கள், அதுவும் ஏன் தும்பிக்கையை பிடித்தபடியே எடுக்கிறார்கள், இதை வைத்து அவர்கள் என்ன செய்வார்கள் எனும் கேள்விகள் அவனை இடையிடாது துரத்திக்கொண்டே இருந்தன, ஆனால் அவன் யாரிடமும் இதையெல்லாம் கேட்கவில்லை.
காப்பி கொட்டைகளை ரானியின் தீவு தேசத்துக்கு எடுத்து செல்வதற்காக பாட்ரிக் உருவாக்கிய கருமையான தார் சாலையின் வழியாக யானைகள் ஊர்வலமாய் நடக்கலாயினர். யானைகளின் கூட்டத்தில் காட்டு யானைகளுடன், லட்சுமி, ராஜுகனபதி, சீமா, மகேஷ் என்று காப்பகத்தின் அத்தனை யானைகளும் இருந்தனர். யானைகளின் நீண்ட ஊர்வலம் மனித தலைகளால் நிறம்பிய அந்த நகரத்தில் முடியலாயிற்று, மனித தலைகளை தவிர்த்து நகரத்தில் வேறு எதுவும் இருக்கவில்லை. மனிதர்களை விலக்கிக்கொண்டு முன்னேறிய யானைகள் நகரத்து குழந்தைகள் தேட ஆரம்பித்தனர், குழந்தைகளை கண்டுபிடித்த யானைகள் குழந்தைகள் ஒவ்வொருவருடனும் புகைப்படங்களை எடுக்க ஆரம்பித்தனர், அதுவும் குழந்தைகளின் கைகளை பற்றியபடி... திடுக்கிட்டு விழித்த நாகராஜுவை சுற்றிலும் இருள் அடர்ந்து கிடந்தது, தூரத்தில் ஒலித்த யானைகளின் பிலிறல் அவனுக்கு கேட்டது, அமைதியாக மீண்டும் பாயில் சுருண்டு படுத்துக் கொண்டான்...மீண்டும் தூங்க முயற்சித்த அவனுக்கு தூக்கம் பிடிபடவில்லை... மழை மேகங்கள் மூடியிருந்த கருத்த வானத்தில் விண்மீன்களை தேட ஆரம்பித்தான்.
Few lines from 2 articles published in a Sociology Journal “Journal of Mountain Cultures”
Title: En route Daniel Eastburry’s coffee hills [JMC – Oct 1998 – 203 – 214]
......Daniel’s son Patrick visited this little mount after 30 years of his father’s return. He found that the weather conditions in the hill will suit plantation of coffee. Thus he started empowering the life of tribal inhabitants by planting coffee bushes. Also he became the 1st person in the history to make use of mammoths for cultivation; additionally he had a dream of setting up an elephant sanctuary in this hill to safe guard the lives of the gigantic animals of this forest......
......Thus we conclude not only Patrick paved the road to the lives of tribes but to the mammoths too...
Title: Comments on “En route Daniel Eastburry’s coffee hills” [JMC – Dec 1998 – 13-27]
.....But Daniel & Patrick missed to notice the green smell that was/is poised over each and every living being of the forest....
Comments
Post a Comment