ஊழிக்காலம்
சாம்பல் நிறத்திலான மரணத்தின் சொற்கள் கடவுளர்களின் ஆசியுடன் அந்த நகரத்தின் வீதிகளில் வியாபித்திருந்ததை அவர்கள் பார்த்துக் கொண்டே ஓடினார்கள். நீண்டு கிளை பரப்பியிருந்த கருமையின் விரல்கள், வீழ்ந்துகிடந்த உடல்களின் எரிந்துபோன ஆன்மாக்களை சேகரித்துக் கொண்டிருந்தன. சிவப்பேறிய தன் தங்கக் கரங்களால் அரசர் பறக்கவிட்டுக் கொண்டிருந்த வெள்ளைப் புறாக்கள் அந்த தீவு தேசத்தின் வான்வீதிகளினூடே பயணித்து வடக்கின் மூலையில் நிலை கொண்டிருந்த எரிந்துபோன ஆன்மாக்களின் நாசியில் எச்சமிட்டுப் பறந்ததை மேலை தேசத்து அரியணைகள் கம்பளம் விரித்து ஆரவாரம் செய்த அதே நொடியில்தான், இரும்பு பறவையின் கடைசி அமிலமுட்டை மிச்சமிருந்த ஒரே ஒரு சிறுமியின் கன்னத்தில் முத்தி வெடித்ததில் சிதறிய அவளின் இடதுகால் பெருவிரல் அரசரின் தங்கக் கைகளில் போய் விழுந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. அரசர், சமாதானத்தின் சின்னமாய் அழுகிப்போன அவள் இடதுகால் பெருவிரலினைத் தன் கிரீடத்தில் பதித்து வைத்திருப்பதை அந்தக் கிழவியின் கதை மீண்டும் எனக்கு நினைவுபடுத்திச் சென்றது…….
குட்டிதேவதை
குட்டிதேவதையை தரிசித்தல் என்பது வார்த்தைகளால் மிகைப் படுத்தப்பட்ட கனவின் நொடிகளைப் போன்றது (நண்பர்கள் ஏன் இப்படி ரொமான்டிசைஸ் செய்கிறாய் என்று கேட்கக் கூடும் பலநேரங்களில் வாழ்க்கை உணர்ச்சிகளால் நிரம்பியதுதானே). நிழலைப்போல் தொடர்ந்து கொண்டே இருக்கும் குட்டிதேவதையை மனதால் உணரும் தருணம் வரை கண்களால் பார்த்தல் சற்றே முடியாத காரியம்தான். உங்களுடனே, உங்களுக்காகவே, உங்களைப் போன்றே இருப்பாள். ஒரு மழைநாளில் கடலும் நீங்களும் அவளும் ஒன்றாய் சங்கமிக்கும் நொடியில் அவள் உங்களின் முன்னே தோன்றுவாள். தோழன், தேனீர் விற்கும் பையன், மூப்படைந்த கிழவி, உடல் ஒட்டி ஒரே ஒரு பாணுக்காய் ஏங்கிய படி அழுது கொண்டிருக்கும் நாய், கடல் மணலை வீடாய்க் கொண்ட பலநூறு மனிதர்கள் எல்லோரும் உங்கள் உலகை விடுத்து மறைந்துபோவர். குட்டிதேவதை பேரமைதியில் கடலையும், கடலை நனைத்துக் கொண்டிருக்கும் மழைத்துளிகளையும் ரசித்துக் கொண்டிருப்பாள் உங்களைத் தன் மனதில் தாங்கியபடி. நீங்கள் சுயம் மறந்து அவளை பார்த்துக் கொண்டிருப்பீர்கள்.
ஒரு நடுசாமத்தில்… யாருமற்ற தனிமையில் குட்டி தேவதை அவளின் அன்பை முழுமையாய் உங்களுக்கு வெளிப்படுத்துவாள்… அப்போது உங்கள் உலகம் சுழலாமல் அப்படியே நின்று கிடக்கும், ஆம் நிச்சயம் நின்றுதான் கிடக்கும்……….. யாரோ ஒரு யாசகன் வீதியில் பாடிச் செல்லும் பாடலின் கடைசி வார்த்தைகள் உங்களுக்கு கேட்கக்கூடும். இன்னும் உங்கள் உயிரின் மிச்சம் உயிருடன் இருப்பதை உணர்ந்த தருணத்தில் ஓவென்று கத்த தோன்றும்…. ஆனால் நீங்கள் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள் ஒரு சிலந்தியின் வலைப்பின்னலை… மழை ஒய்ந்த சாமத்தின் காற்று குட்டிதேவதைக்கான முத்தத்தை சுமந்து செல்லும்….
ஆட்சியாளர்களே, இனவாதிகளே, தேசியவாதிகளே,கம்யுனிஸ்டுகளே, தலைவர்களே, சனநாயகவாதிகளே, பகுத்தறிவுவாதிகளே
மரணத்தின் கடும் நாற்றம் பால்வெளியெங்கும் பரவிக்கிடக்கிறது, சுவாசிக்க வழியின்றி நாங்கள் அலைந்து கொண்டிருக்கிறோம். ஆம், நீங்கள் செய்த கொலைகளின் மணங்கள் அவை. சனநாயகக் கொலைகளுடன் விழித்து, சனநாயக்க் கொலைகளுடன் உறங்கச் செல்கிறோம், நாளை நாங்களும் கொலை செய்யப்படலாம் எனும் பயத்துடன். தேசியத்தின் பெயரைச் சொல்லி அவனைக் கழுவில் ஏற்றியது நீங்கள்தான். கலாச்சாரத்தின் பெயரை சொல்லி அவளை அமிலம் வீசிக்கொன்றவர்கள் நீங்கள்தான். அதே கலாச்சாரத்தின் பெயரால் அவள் யோனியை கிழித்துக் கொன்றவர்களும் நீங்கள்தான். புத்தனின் கோவணத்தை உடுத்திக் கொண்டு குழந்தை மாறா அந்த பாலகனை கொன்றவர்களும் நீங்கள்தான், அவனைப் போன்று பலலட்சம் பிள்ளைகளைக் கொன்றவர்களும் நீங்கள்தான். அவனை மலம் தின்ன வைத்துக் கொன்றவர்களும் நீங்கள்தான். தீண்டப்படாதவள் என்று சொல்லி அவளை அம்மணமாய் விரட்டியவர்களும் நீங்கள்தான். மார்க்சியத்தின் பெயரால் அவர்களைக் கொன்றவர்களும் நீங்கள்தான். நீங்கள் கொன்ற பிள்ளைகளின் அழுகிய கைகளும், கால்களும் பெரும் வீச்சத்துடன் என்னைச் சூழ்ந்திருக்கிறது, அந்த குழந்தைகளின் அம்மாக்களின் யோனியில் வழியும் ரத்தம் உங்களின் விந்துடன் கலந்தே சொட்டிக் கொண்டிருக்கிறது. உங்கள்க் கொலைகளால் வழியும் குருதியில் நடந்தபடியே இதை எழுதுகிறேன், நீங்கள் அந்தக் குருதியைதான் எனக்கு மையாகத் தருகிறீர்கள் என்று அறிந்தே இதை எழுதும் கொலைகாரன் நான். உங்கள் கொலைகளின் நாற்றம் சகதியாய் என் மீது படிந்து கிடக்கிறது. நீங்கள் கொலைகளைச் செய்தீர்கள், கொலைகளைச் செய்கிறீர்கள், கொலைகளைச் செய்வீர்கள். நான் கொலை செய்யப்படும்வரை எந்த மயிருக்கும் உதவாத இந்த எழுத்துகளை எழுதி இறுதியில் உங்களால் கொலை செய்யப்படுவேன்.
கடவுள்
எனக்கொரு கடவுள் வேண்டும். இரண்டு கால்களும், இரண்டு கைகளும் மட்டுமே இருக்கும் கடவுள் வேண்டும். தன் ரத்தத்தால் என்னைப் பரிசுத்தமாக்காத கடவுள் வேண்டும். பிறைநாளில் மட்டுமே தோன்றாத ஆண்டவர் வேண்டும். தன் பெயரை சொல்லி என் குருதியையும், எலும்புகளையும் புசிக்காத கடவுள் வேண்டும். பெண்ணுமில்லாது, ஆணுமில்லாது, பாலுமில்லாத அருளர் வேண்டும். நல்லது, தீயதை போதிக்காத கடவுள் வேண்டும். இம்மை, மறுமைகளை பேசாத தேவன் வேண்டும். கடல் மீது நடக்காத, வானில் பறக்காத, அண்டத்தை மூன்றடியில் அளக்காத கடவுள் வேண்டும். கோடிகளில் புரளாத, பட்டாடைகளில் ஜொலிக்காத கடவுள் வேண்டும், அம்மணமாய் இருப்பின் இன்னும் சிறப்பு. என் தாயின் முட்டையிலும், அப்பனின் விந்திலுமிருந்தே நான் தோன்றினேன் எனும் உண்மையை பேசும் கடவுள் வேண்டும். உயிரினத்தை நேசிக்கும் கடவுள் வேண்டும். பாக்களிலும், இதிகாசங்களிலும் வாழாத கடவுள் வேண்டும். மூப்படையும் கடவுள் வேண்டும். மரணிக்கும் கடவுள் வேண்டும். எனக்கு ஆப்பிளையும், சர்ப்பத்தையும் அனுப்பாத கடவுள் வேண்டும். கறுப்பு, வெள்ளை, மஞ்சள், சிவப்பு பார்க்காத கடவுள் வேண்டும். அலைபேசி எண்ணில்லாத, முகநூல் பழக்கமில்லாத கடவுள் வேண்டும். கொலைகளைச் செய்யாத கடவுள் வேண்டும். ஆம் எனக்கொரு கடவுள் வேண்டும், என்னை மனிதனாய் மட்டுமே பார்க்கும் கடவுள் வேண்டும்.

Comments
Post a Comment