நான் இதுவரை யார் யாருடன் முயங்கினேன் என்பதை யாரிடமும் சொன்னது இல்லை ஆனால் உன்னிடம் சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இருக்கவில்லை. உன்னுடன் இந்த உலகை பற்றி, வாழ்க்கையை பற்றி, காமம் பற்றி, சுய இன்பம் பற்றி, கொக்கையின் பற்றி பேசமுடிகிறது. அதை பங்கிட்டுக்கவும் முடிகிறது, ஏனெனில் உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை.. நாம் நண்பர்களோ, காதலர்களோ அல்லது வேறு எதுவும் இல்லை. நீ சொல்வதைப் போல் நான் ஹூக்காவாகவும், நான் சொல்வதைப் போல் நீ கடலாகவும் இருக்கிறோம்.
ஆம்! நீ சொல்வது சரி தான். நான் இதுவரை எத்தனையோ மனிதர்களை கடந்து வந்துள்ளேன் ஆனால் யாரிடமும் ஈர மண்னின் வாசனையை நுகர்ந்தது இல்லை, நீயோ புது மழை நாளின் முடிவில் ஊறிப்போன மண்னைப் போல் வாசம் தருகிறாய். உன்னுடனான காமமும் அப்படியானதாக தான் இருக்கிறது. ஏரு உழுத வயலில் வெடித்து கிடக்கும் விளை மண்னை அள்ளி தின்பதான அதனுடன் கூடுவதான உணர்வை தான் நான் பெருகிறேன்.
*************************************************************************
நாம் எங்கே போகிறோம்?
எங்கே போகிறோம் என்று தெரிந்தால் தான் வருவாயா?
என் உதடுகள் உன் முதுகில் அழுத்தமாய் பதிந்தன. சில நிமிட பயணத்தில் உன் வீட்டை அடைந்தோம், மணி இரவு 11. அது தான் முதலும் கடைசியுமாக உன் வீட்டுக்கு வந்தது. உன் வீடு என்றதும் இன்றும் நினைவில் இருப்பது அந்த பெரிய மாமரம் மட்டுமே.
எனக்கு தெரியும் உன் வீட்டுக்கு தான் வருவாய் என்று.
எப்படி?
அது தெரியவில்லை. மனிதர்கள் அனேக நேரம் உள்ளுனர்வை நம்புபவர்கள்.
ஹ்ம்ம்ம்.. எப்போதுமான அதே புன்னகை உன்னிடமிருந்து வெளிப்பட்டது.
நான் குளிக்க விரும்புகிறேன்.
சரி! கொஞ்சம் காத்திரு, சுடு தண்ணி தாயார் செய்கிறேன். குளிர் கடுமையாக இருக்கிறது.
இந்த நகரில் குளிரை உனர்ந்த ஒரே ஆள் நீ மட்டும் தான்.
இல்லை நிஜமாகவே குளிர்கிறது.
எனக்கு இல்லை, நான் குளிர்ந்த நீரிலே குளிக்க விரும்புகிறேன் என்று சொல்லியப்படி குளியல் அறையின் கதவை மூடினேன்.
சில நிமிடங்கள் களித்து கதைவை தட்டி, மிருதுவான வெள்ளை துண்டை என்னிடம் நீட்டினாய்.
நீ மௌனமாக படுத்திருந்தாய், நான் உன் வயிற்றின் மீது படுத்திருந்தேன். ஈரம் சொட்டும் என் தலை மயிர் உன் உதடுகளில் படிந்துக் கிடந்தது.
உனக்கு மறக்கவில்லை தானே லவ் டிராப்?
ஆம்! எப்படி மறக்க முடியும், காதல் வழியும் அந்த பாடலை.
அப்படியெனில் இப்போது மீண்டும் கேள்…
ஹெட்செட்டை உன் காதுகளில் மாட்டிவிட்டேன். பாடல் முடியும் வரை அந்த அறை முழுவதும் நிசப்தம் நிலவியது.
இதுமட்டுமா, நீ சார்த்தர் குறித்து சொன்னதையும் நான் நினைவில் வைத்திருக்கிறேன்.
ஹா ஹா… ஆமாம்! சார்த்தர் நான் வாழும் காலத்தில் இங்கு வாழ்ந்திருந்தால் கண்டிப்பாக தேடி சென்று அவருடன் சுய இன்பம் கொண்டிருப்பேன்.
அது ஏன் சுய இன்பம்??
ஏன் என்றால் சுய இன்பம் என் சுயம் சார்ந்தது. நான் முழுமையாக நானகவே இருப்பேன். இன்னும் சொல்லப் போனால் சுய இன்பத்தில் மட்டுமே நான் வரும்புவது போல், விரும்பியவர்களுடன், விரும்பிய நேரத்தில் காதல் கொள்ள முடியும், காமத்தில் இல்லை.
ஹ்ம்ம்ம்…
அந்த இரவு அற்புதமானது தான். என்னால் இப்பொழுதும் சொல்ல முடியும்.
மரணம் பிறப்பை போன்று வலியானது இல்லை, அது ஆர்கசம் (Orgasam) போன்று மேன்மையானது. உச்சத்தை அடைந்த நீ முனங்கள் சப்தத்துடன் அந்த வரிகளை என்னிடம் சொன்னாய்.
நான் உச்சத்தை அடைந்து விட்டதாய் உன்னிடம் சொன்னேனா? நான் இன்னும் மரணிக்கவில்லை. ஹா ஹா ஹா…
ஹ்ம்ம்ம்.. எப்போதுமான அதே புன்னகை உன்னிடமிருந்து வெளிப்பட்டது.
தொடர்பே இல்லாமல் பேசுவதில் நீ திறமையான ஆள் தான்.
தொடர்புடன் மட்டும் தான் எல்லாம் நடக்க வேண்டும் என்றால் நீ உன் தாயுடனோ அல்லது தந்தையுடனோ மட்டும் தான் காமம் கொண்டிருக்க வேண்டும். எந்த தொடர்பும் இல்லாத ஒரு இரவில், எந்த தொடர்பும் இல்லாத ஒரு நகரத்தில், எந்த தொடர்பும் இல்லாத ஒரு மனிதனுடன் உச்சத்தை அடைந்திருக்க மாட்டாய்.
டார்லிங்.. நான் இன்னும் உச்சம் தொடவில்லை.. ஹா ஹா ஹா
******************************************************************
நான் இந்த மணலைப் போல் கரைந்துப் போக விரும்புகிறேன். வாழ்தல் மிகவும் சுமையாக இருக்கிறது.
ம்ம்…
ஒரு மாதிரி பல லட்சம் வருடங்களுக்கு முன்னான பழைய பொதி ஒன்றை தூக்கி சுமப்பதான உணர்வு என்னை தினமும் துரத்துகிறது.அந்த பொதி முழுவதிலும் பண்பாட்டு குப்பைகள், ஒழுக்க பிம்பங்கள், உறவு படிநிலைகள், தேச பற்று கிழிசல்கள் என்று சீழ் வழிந்துக் கொண்டிருக்கிறது.
ம்ம்…
என்னால் ஆடைகளை தூக்கி சுமக்க முடியவில்லை ஆடை என்னை யாரோவாக மாற்றுகிறது நான் நானாக இருப்பதில்லை. நிர்வானம் தான் எனக்கு அதிகமாய் பிடிக்கிறது அதில் தான் என் சுயத்தை உணர்கிறேன்.
ம்ம்…
நான் பேசுவது உனக்கு அயற்சி தருகிறதா?
அப்படி சொல்லிவிட முடியாது ஆனால் டீ குடிப்போமா?
வெக்கையிலும் இஞ்சி டீ இதமாக தான் இருக்கிறது, நல்ல டீ தானே.
நீ காதலித்திருக்கிறாயா?
இது என்ன கேள்வி, காதலிக்காமல் வாழ முடியுமா. நான் எப்போதும் காதலிக்கிற ஆள். ஆனால் ஒரே ஆளை அல்ல.
உன்னை முத்தமிட தோன்றுகிறது.
அதுக்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம்? நீயும் என் மீது அதே பழைய சீழ் வழியும் பொதியை ஏற்றி அழுத்துகிறாய்.
ம்ம்…
*********************************************************************
நீ இப்படியே தான் இருக்க போகிறாயா?
எப்படி?
மௌனமாக யாருடனும் பேசாமல், யார் உணர்வுகளையும் புரிந்துக்கொள்ளாமல் எல்லாவற்றைக்கும் சொந்த விளக்கங்களை கொடுத்துக்கொண்டு… வாழ்க்கை நீ பேசுவதை போன்றதல்ல.
விளக்கங்கள்? ஏதும் இல்லாத வாழ்க்கையில் விளக்கங்களுக்கு என்ன வேலை? வாழ்தல் என்பதை நான் வாழ்தலாக மட்டுமே பார்கிறேன் அதை தாண்டி அதில் ஏதும் இல்லை.
நீ சொல்லும் சூன்ய நிலையில் வாழ்க்கை சாத்தியமில்லாதது, இப்படியான வரட்டு பிடிவாதத்தால் நீ உணர்வுகளை இழந்து நிற்கிறாய், அடுத்தவர் துயர் பற்றி எந்த அக்கறையும் இல்லை
ஆம் என்ன செய்வது! தினமும் ஒரு வேளை சோற்றுக்கே வழியில்லாத கோடிகனக்கான மனிதர்களை கடந்து செல்லும் வாழ்க்கையில் சுரனை இல்லாமல் தான் வாழ் வேண்டி இருக்கிறது.
வாசனை கமலும் புன்னகையுடன் சொல்ல வேண்டும் அப்படிதானே?
ஆம், ஏனெனில் வாழ்தலை காட்டிலும் அதிகமாக உன்னை நேசிக்கிறேன்.
நேசித்தல்.. எவ்வுளவு போலியான வார்த்தை
ஹம்ம்ம்.. வாழ்க்கையை போல
அப்படி எப்படி சொல்ல முடியும்? வாழ்வு போலியானது இல்லையே.
அப்படி நீயும் நானும் நம்புகிறோம்.
????
வாழ்க்கை பிறப்புக்கும் இறப்புக்கும் இடையேயான் ஒரு பயணம் என்பது என் தனிப்பட்ட புரிதல், அது சரியா தவறா தெரியாது. ஒரு ஆற்றல் மற்றொரு ஆற்றலாய் மாறும் நிலை. அதற்கு இடைப்பட்ட ஒரு காலம் அவ்வுளவு தான், இதை தான் பிறப்பு இறப்பு என்கிறோம். அந்த ஆற்றல் எங்கேயும் போய்விடுவதில்லை அப்படியே தான் இருக்கிறது வேறு வடிவத்தில் வேறு ஒன்றாய், வேறு ஒரு காலத்தில்.
ம்ம்…அப்போ நீ பேய் இருக்கிறது என்கிறாய்.
மனிதன் மூளை இருக்கும் வரை பேய்களும்,தேவதைகளும் இருக்கவே செய்யும்.
ஹ்ம்ம்….
முடிவே இல்லாத இந்த பிரமாண்ட அண்டத்தில் ஒரு மனிதனின் இருப்பு என்பது அதிகபட்சமாக 100 ஆண்டுகள், ஆனால் இந்த அண்டம் பல லட்சம் பல கோடி வருடங்கள் பழமையானது. இன்னும் எத்தனை லட்சம் கோடி வருடங்கள் வாழும் பிறகு என்ன ஆகும் ஏதும் நமக்கு தெரியாது. இப்படியான ஒரு அமைப்பில் நாம் ஒரு அமிபாவை விட சிறிதான ஒரு உயிரினம். அண்டம் தன் இயல்பில் இயங்குகிறது அதனுடன் நாமும் சேர்ந்து இயங்குகிறோம் ஆனால் நாம் அதை நம்புவதில்லை.. நாம் ஆறு அறிவு படைத்தவர்கள் அதனால் சுயமாய் இயங்குபவர்கள் என்று நம்புகிறோம்.
ஆமாம்! அதுனால் தானே இதையெல்லாம் நம்மால் சிந்திக்க முடிகிறது.
ஆறவது அறிவு ஒரு மயிரையும் செய்யவில்லை.. கடவுளர்களையும், துவக்குகளையும் உருவாக்கியதை தவிர்த்து.
நீ என்ன சொல்ல வருகிறாய்?
வாழ்க்கையை பெரிதாக பேசும் எவரேனும் ஒருவர் 200 வருடங்கள் வாழ்ந்து கான்பிக்க முன்வர வேண்டும் என்று விரும்புகிறேன்.
சரி நாம் இப்போது முத்தமிட்டுக்கொள்வோம்!
**********************************************************************
Comments
Post a Comment