குடிப்போமா என்றாய் – ஒருநொடி திடுக்கிட்டுப் பார்த்தவன் சரி என்றேன் – அதுதான் மிகச் சரியாக நம் முதல் உரையாடல் – அலைகள் நம் இருவரின் கால்களையும் ஒருசேர நனைத்துக்கொண்டிருந்தன – நாம் வீதியை நோக்கி நடக்க ஆரம்பித்தோம் – இரவு அனேகமாய் 9 மணியை நெருங்கியிருந்தது – ஒரு நொடி நின்றவன், எங்கு குடிப்பது என்றேன் – என்னைப் பார்த்து மௌனமாய் புன்னகைத்தபின் மீண்டும் நடக்க ஆரம்பித்தாய் – நான் உன்னைத் தொடர்ந்து நடக்கலானேன் – என்னையும் உன்னையும் தாங்கியப்படி, உன் ஊதாநிற ஸ்கூட்டர் நகரத்தின் வீதிகளில் ஊர்ந்து கொண்டிருந்தது – நகரத்தின் இரைச்சலுக்கு மத்தியில் ஆழ்ந்த நிசப்பதம் நிலவியது, நம்மிடையே – உன் வாசனைத் திரவியத்தின் நறுமணம் அடிமனதில் ஊடுருவிக்கொண்டிருந்தது, மழைச்சாரலைப்போல்– நான் உன்னைத் தீண்டாமலமரத் தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே இருந்தேன் –நீயும் விடாமல் பிரேக் போட்டுக் கொண்டே வந்தாய் – மதுக்கூடம் வரை நம்மில் அந்த விளையாட்டு தொடரவே செய்தது – ஒருசில முறைகளைத் தவிர அனேகம் நீயே வெற்றி பெற்றாய் – ஒன்று இரண்டு தடவை விளையாட்டின் ஆர்வத்தில் எதிர்பாராமல் பிரேக் பிடித்து வண்டியுடன் கீழேவிழப்போகவும் செய்தோம் –அது நிச்சயம் ஒரு மிகப்பெரிய மதுக்கூடம்தான் – 10D இதற்குமுன் வந்துள்ளாயா என்றாய் – நான் ஆயிரம் கேள்விகளுடன் உன்னை நோக்கினேன் – cut it off என்று சொல்லிவிட்டு நீ மதுக்கூடத்தின் வாசலினுள் நுழைந்தாய் – நான் உன்னைத் தொடர்ந்தேன் – வேலை நாளின் எச்சமாய் மதுக்கூடம் காலியாகவே இருந்தது – நாம் ஒரு மூலையில் அமர்ந்தோம் – இருள் மங்கிய மதுச்சாலை – அம்மாவாசை இரவில் குடிப்பதை நினைவுப்படுத்தியது எனக்கு – என்ன குடிக்கிறாய் என்றாய் – எதுனாலும் என்றேன் –நம் இரண்டாவது உரையாடல் – தண்ணீர் போதுமா என்றாய் அகண்ட சிரிப்புடன் – உன் சிரிப்பினால் அது நிச்சயம் நகைச்சுவையாகத்தான் தோன்றியது – விஸ்கி என்றேன் – பரிசாரகனைப் பார்த்து முணுமுணுக்கும் குரலில் ஏதோ சொன்னாய் – அவன் தலையை அசைத்தபடி சென்றான் – சத்தியமாக நீ பேசியது எனக்குக் கேட்கவே இல்லை – ஒருவேளை என் காதுகள் மந்தமாக இருக்கலாம் அல்லது ஒலித்துக் கொண்டிருந்த ஆங்கிலப் பாடலின் சப்தத்தின் காரணமாகவும் இருக்கலாம் – இன்றுவரை பரிசாரகனிடம் நீ என்ன சொன்னாய் என்பது எனக்குத் தெரியாது, அதுபற்றிச் சிறிதும் அக்கறையில்லை – பாடலின் ஒலி அளவால் முகம் கோணினேன், தாளமிட்டுக்கொண்டிருந்த நீ என் முகபாவத்தைப் பார்த்து பாடல்கள் பிடிக்காதா என்றாய் – பிடிக்கும் என்றேன் – இளையராஜா? என்று புருவம் உயர்த்தினாய் – தோளில் மாட்டியிருந்த பாப்மார்லி பையை எடுத்து மேசையின்மீது வைத்தேன் – மார்லீ!! என்று துள்ளினாய் – சுசிலா ராமனும் என்றேன் – உன் புருவம் இரண்டும், இரண்டு கேள்விக் குறிகளாய் மேலே செல்வதைப் பார்த்து லவ்டிராப் பாடலைப்பற்றிச் சொன்னேன் – கேட்கிறேன் என்றாய் – நான் சுற்றிலும் பார்த்தேன் – மங்கிய விளக்கு ஒளியில் ஆங்காங்கே மனித உருவங்கள் தெரிந்தன – குடித்தபடி, பேசியபடி, கோப்பைகளைத் தட்டுகளில் ஏந்தியபடி – நமக்கான முதல் மதுவைப் பரிசாரகன் நம் முன் வைத்தான் – ‘Cheers’ சொல்லி முதல் மிடரைப் பருகினோம் – உனக்கு விஸ்கிதான் பிடிக்குமா என்றாய் – ‘கள்’ என்றேன் – புன்னகைத்தாய் – கள் இல்லாததால் விஸ்கிதான் விருப்பமானது என்றேன் – இரண்டும் மூன்று நிமிட அமைதி – உனக்கு? என்றேன் – எப்போதும் விஸ்கிதான் என்றாய் – மீண்டும் மௌனம், இந்தமுறை ஐந்து பத்து நிமிடங்களைத் தாண்டியிருக்கும் – வேலை செய்கிறாயா என்றேன் – அது எதற்கு உனக்கு என்றாய் – கேள்வி முடிந்துபோனது – என் கண்களை உற்று நோக்கினாய் – எனக்கு ஒரு சில நொடிகள் நினைவு தட்டியது – உன் கண்களின் வீச்சை என்னால் தாங்கமுடியவில்லை என்றேன் – என்னைப் பார்க்காதே என்று மிகவும் இலகுவாய்ச் சொல்லிவிட்டு பரிசாரகனை அழைத்தாய் – மீண்டும் 2 கோப்பை விஸ்கி வந்தது – 2வது cheers சொல்லிக்கொண்டோம் – காதலிக்கிறாயா என்று கேட்டாய் – அது எதற்கு உனக்கு என்றேன் – உன் காதலன் குறித்துச் சொன்னாய், நான் கேட்டுக் கொண்டேன் – புகைக்கலாமா என்றாய் – நான் சிகரட் குடிப்பதில்லை என்றேன் – நீ புகைக்கும் அறைக்கு எழுந்து சென்றாய் – 5 நிமிடங்கள் கழித்து வந்தாய் – நான் எழுந்து கழிவறைக்குச் சென்றேன் – திரும்பி வந்தபோது மீண்டும் நிரப்பப்பட்ட கண்ணாடிக் கோப்பையைப் பார்த்தேன் – 3வது cheers சொல்லிக்கொண்டோம் – மணி ஒன்றை நெருங்கியிருந்தது – நீ மீண்டும் பரிசாரகனை அழைத்தாய் – இந்த முறையும் நீ முணுமுணுக்கும் குரலில்தான் பேசினாய் – இந்தமுறையும் நீ சொன்னது எனக்கு கேட்கவில்லை – ஒருவேளை என் காதுகள் மந்தமாக இருக்கலாம் அல்லது ஒலித்துக் கொண்டிருந்த ஆங்கிலப் பாடலின் சப்தத்தின் காரணமாக இருக்கலாம் – நீ சொல்வதைக் கேட்டுவிட்டுச் சென்றவன், பில்லுடன் திரும்பி வந்தான் – இரசீதுக்குப் பதிலாய் உன் கடனட்டை தேய்க்கப்பட்டது – உன் பின்னால் நான் அமர்ந்தபடி மீண்டும் பயணிக்க ஆரம்பித்தோம் – காற்றில் சிறகடித்த உன்முடி என் முகத்தில் படர்ந்து கிடந்தது, நான் விலக்க முயற்சிக்கவில்லை – என் வீட்டுக்கு வருகிறாயா என்று கேட்டாய் – சரி என்றேன் – நீ உன் வீட்டை நோக்கி வண்டியைச் செலுத்த ஆரம்பித்தாய் – 15 நிமிடத்தில் உன் வீட்டை அடைந்தோம் – உன் வீடு கடலின் அருகில் இருந்தது – வீட்டில் யாரும் இருக்கவில்லை –அறைத் தோழிகள் எங்கோ போயிருப்பதாய்ச் சொன்னாய் – அதையெல்லாம் கேட்கும் மனநிலையில் நான் இல்லை – நாம் இருவரும் மொட்டைமாடிக்குச் சென்றோம் – நிலவின் ஒளியில் கடல் நீலமஞ்சளாய்ப் பளபளத்தது – நாம் மௌனமாய் நின்றுகொண்டிருந்தோம் – நீ உடைமாற்றி வருவதாய்ச் சொல்லிவிட்டுக் கீழே சென்று 10 நிமிடங்கள் கழித்து வந்தாய் –கறுமை நிற இரவு உடையை அணிந்திருந்தாய் – எனக்கு அந்த இரவு ஆடை நான்கு வருடங்களுக்கு முன்னான ஒரு காதலை நினைவுபடுத்தியது – கறுப்பு எனக்குப் பிடித்த நிறம் என்றேன் – நீ அதைப்பற்றி அசட்டை செய்யவேயில்லை – என் கைகளைப் பற்றினாய் – ஏன் நான் அழைத்ததும் வந்தாய் என்று வினவினாய் – என்னை வேறு யாரும் அழைக்கவில்லை அதனால் என்றேன் – நீ ஏன் என்னை அழைத்தாய்? என்றேன் – நான் கூப்பிட வேறு யாரும் என் கண்களுக்குத் தெரியவில்லை, உன் தாடிதான் தெரிந்தது என்றாய் – நீ போதையில் இருக்கிறாயா என்றேன் – பலமாகச் சிரித்துவிட்டு, அதற்கு இன்னும் 7 கோப்பைகள் மிச்சமிருப்பதாய்ச் சொன்னாய் – நீ? என்ற உன் கேள்விக்கு – இன்னும் 3 அல்லது 4 கோப்பைகள் மிச்சமிருப்பதாய்ச் சொன்னேன் – நான் சாவைப்பற்றி என்ன நினைக்கிறாய் என்றேன் – மரணித்தப்பின் பார்த்துக்கொள்வோம் என்று சொன்னாய் – விபத்தில் மரணித்த காதலியைப்பற்றி உன்னிடம் சொன்னேன் – நான் மரணிக்க விரும்பவில்லை ஆனால்,கண்டிப்பாக எப்படியும் சாகத்தானே வேண்டும் என்றாய் – மீண்டும் மௌனம், இந்தமுறை நெடிய அமைதி அது, நான் நேரத்தை அளவிடவில்லை – அலைகளின் ஓசை ரீங்காரமாய் இடைவிடாது கேட்டுக்கொண்டே இருந்தது – நம் கைகள் பிணைந்தபடியே இருந்தன – நீ என் உதடுகளையே பார்த்துக்கொண்டிருந்தாய் – உன் கண்களின் திசையை அறிந்தும் நான் அமைதியாகவே இருந்தேன் – எனக்கு எப்போதும் முதலில் முத்தமிடப் பிடிக்காது என்று மட்டும் சொன்னேன் – என்னை இழுத்து அணைத்து உதடுகளில் முத்தமிட ஆரம்பித்தாய் – என் கண்கள் முன் மஞ்சள் நீலத்தில் மின்னிய நீண்ட கடல் பரப்பு மட்டுமே தெரிந்தது – உன் பெயர் என்னவென்று உன் காதுகளில் முத்தமிட்டபடியே கிசுகிசுத்தேன் – உனக்கு எதற்கு அது என்றாய்–10 மணிக்கு விழித்தெழுந்தோம் – நீ என்னை இறுக்கமாய் அணைத்து முத்தமிட்டாய் –‘I love you’ என்றேன் – ஏளனமாய் புன்னகைத்தபடி புகைக்க ஆரம்பித்தாய் – நான் உன்னிடமிருந்து விடைபெற்றேன் – நீ அமைதியாய்க் கடலைப் பார்த்தபடி புகைத்துக்கொண்டிருந்தாய்!
- எனில்?
0. பெருந்தொற்று குறித்த செய்தி என்னை வந்து சேர்ந்த போது, நான் எனது சீனப் பயணத்திற்கு தீவிரமாக தயாராகி கொண்டிருந்தேன். ஒரு வேளை பெருந்தொற்று என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால், நான் இந்த பிரதியை பெய்ஜிங்கிலிருந்து எழுதியிருக்கக்கூடும். அந்த நேரத்தில் அது பெருந்தொற்றாக உருவாகியிருக்கவில்லை. மாறாக, சில நூறு மனிதர்களை நிமோனியா போன்ற விளைவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் யாரும் அறியாத கிருமியாக, தொலைதூர செய்தியாக இருந்தது. கோவிட்-19 பெருந்தொற்று நான் வாழ்ந்த நகரத்தை வந்தடைய மூன்று மாதங்களானது. உலக சுகாதார நிறுவனம் அதை ஒரு தொற்றுநோயாக அறிவித்த அந்த இரவில் நண்பர் ஒருவர் பின்வரும் வாட்சப் செய்தியை அனுப்பியிருந்தார்: “நாம் அனைவரும் வீடு திரும்பும் நேரம் வந்துவிட்டது. பிரிந்து கிடக்கும் மனித இனம், ‘மனிதர்’ எனும் ஒற்றை அடையாளத்தின் கீழ் ஒன்றினையும் அற்புதமான சூழலை கண்களுக்கு புலப்படாத சிறிய கிருமி உருவாக்கி இருக்கின்றது” 1. மார்ச் 2019க்கு பிறகு மனித இருப்பு அதிக சிக்கலானதாகவும், இதுவரை இல்லாத அளவில் மெய்நிகரானதாகவும் மாறியது. கோவிட் -19 பற்றிய செய்திகள் இணையம் மற்றும் தொலைக்காட்சி திரைகளை நிரப்பின. போ...
Comments
Post a Comment