நாம் எதிர்பாரா நேரத்தில் நமக்கு வரும் ஒரு தொலைபேசி அழைப்பு அதுவும் நாம் ஆதர்சமாய் ஏற்றுக்கொண்ட ஒருவரிடமிருந்து அதிகாலை நம்மை தட்டி எழுப்பினால் நாம் எந்த மனநிலையில் நிற்ப்போம்.அப்படியொரு மனநிலையிலிருந்து, அப்படியொரு அழைப்பை சந்தித்தபின் இதை எழுதுகிறேன்.சிறிதும் தொடர்பே இல்லாத எண்ணிலிருந்து வந்தது அந்த அழைப்பு, அவரத்தான் என்று தெரியும் சிறிது பயம் கலந்த தயக்கத்துடனே வழக்கமாய் வரும் வணக்கம் இல்லாமல் ஹலோ என்றேன். அழைப்புஒலியின் வேகத்தில் மறுப்பக்கதிலிருந்து வார்த்தைகள் வந்தன.
வணக்கம் தலைவா என்றேன்.
"எப்படி இருக்கீங்க, உங்கள நான் தொந்தரவு செய்யவில்லையே"என்றார்
என்னது இடையூறா இந்த குரலின் அறிமுகத்துக்காய் ஓராண்டுக்காலம் காத்துக்கிடந்தேன் என்றேன் மனதுக்குள்உங்களுடன் சில தினங்களுக்கு முன்பே பேசவேண்டும் என்று நினைத்தேன், ஏன் தற்கொலை பற்றியெல்லாம் ஸ்டாடஸ் போட்டுரிங்கள் மனம் பக்கென்றது என்றார்.இல்லை தோழரே மனதில் தோன்றியது போட்டேன், இப்போது மனம் தெளிந்துவிட்டது என்றேன்.சந்தோசப்பட்டவர் தாடியெல்லாம் இல்லாமல் ஒருப்புகைபடம் போட்டுல்லிரே மிகவும் அழகாய் இருப்பதாய் சொன்னார் ஒரு பெண் அழகாய் இருப்பதாய் சொன்னால் எவ்வுளவு வெட்கம் வருமோ அதே வெட்கம் ஏற்பட்டது வெளிக்காட்டவில்லை. நன்றி என்றேன் அமைதியாய்
சொந்த ஊர் நமக்கு சென்னையேவா? என்றவருக்கு....தர்மபுரிக்கு அருகில் ஒரு கிராமம் அ.பள்ளிப்பட்டி என்றேன்
தருமபுரி எனக்கு நன்றாய் பழக்கப்பட்ட ஊர் என்றும் 83களில் அங்குத்தான் சுற்றிதிரிந்ததாகவும் கூறினார்.அவர் பேச்சில் இருந்த உற்சாகமும், நகைச்சுவையும் என்னுள் ஒட்டிக்கொண்டது. உங்கள் வயது என்ன என்றார்.
23 என்றேன், என்னை விட பாதி வயது இளையவர் நீங்கள், ஆனால் நீங்களும் நானும் ஒன்றே நின்றோமெனில் பெரிய வயது வித்யாசம் இருக்காது என்று நகைத்தார். நாற்பது வருட வாழ்வில் துயரங்களையே சந்தித்த இந்த மனிதன் எத்துனை உற்சாகமாய் பேசுகிறார் நாம் என்ன துயரை சந்தித்துவிட்டோம் மரணத்தை சிந்திக்க என்று என்னையே கடிந்துக்கொண்டேன்.
சென்னையில் எங்கு வாசம் என்றார்.சூளைமேடு என்றேன். கங்கையம்மன் கோவில், வன்னியர் வீதி என்று வார்த்தையிலே வரைப்படம் தீட்டினார்.அந்தகாலத்தில் ஈழமக்களின் புகலிடமாய் சூளைமேடு இருந்ததாகவும் கூறினார்.என்னிடமிருந்து "ம்" மட்டுமே வந்துக்கொண்டிருந்தது.என் தமிழை புரிந்துக்கொள்ள கடினப்படுகிறிர்களா என்றார் இல்லை தலைவா ஆச்சரியமாய் உள்ளது, உங்கள் தமிழ் சிறிதும் ஈழத்தை ஒத்திருக்கவில்லை என்றேன் ( தீபனின் தமிழை ஒருகணம் நினைத்து பார்க்கிறேன்).இந்திய தமிழர்களிடம் பேசி பேசி இப்படியாகிவிட்டது கமலகாசன் தெனாலியில் ஈழத்தமிழை கொன்றதைப் போல் நான் உங்கள் தமிழை கொலைசெய்கிறேன் என்றார்.தமிழ் செத்தால் பரவாயில்லை தமிழன் சாகமல் இருக்கணும் என்றேன், எப்போ சென்னை வருகை எனும் என் கேள்விக்கு டிசம்பர் முழுவதும் அங்குதான் வாசம், புத்தக திருவிழாவுக்கு வருவிர்கள் தானே என்றார், அந்த பதினைந்து நாள் வாழ்க்கை நமக்கு திருவிழாவில்தான் என்றேன் . கண்டிப்பாய் சந்திக்க வேண்டும் என்றேன், சந்திப்போம் என்றார்.
கொஞ்சம் தைரியம் வந்தவனாய் உங்களுடன் பேச வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை ஆனால் பார்க்க டெரர்லுக்குள இருக்கீங்க ஒருவித பயம் என்றேன். அதுல்லாம் வெளியே சும்மா ஆக்டிங் என்றவர். என்ன செய்வதாய் முடிவு சினிமா டைரக்சண் தான் என்றார் "ஆம் " என்றேன் அதற்கென்று எந்த முயற்சியும் எடுக்காமல் நான் செய்யும் பாடாவதி வேலையை பற்றி சொல்லவில்லை, அம்மா அக்கா என்று என் வாழக்கை ஒரு வலைக்குள்ளே இருப்பதையும் சொல்லவில்லை. தனக்கு தெரிந்த தொடர்புகள் மூலம் முயற்சிப்பதாய் சொன்னார் உங்கள் வாழ்க்கை எப்படி போகுது என்றேன், பதினெட்டு வருடங்கள் அகதியாகவே இந்த நிலத்தில் ஓடிவிட்டது என்றார். அதன் வலியை உணர்ந்தேன், எத்துனை கோடிபேர் இவரைப்போல் புகலிட வாழ்வில்.எங்கள் உரையாடலின்போது நான் நின்ற மண்ணில் சூரியன் உதித்திருந்தது மணி காலை 5.30 , அவர் இருந்த நிலத்தில் மணி அதிகாலை இரண்டு. என்ன இன்று தெளிவாய் இருகின்றிர்களா என்றேன் இல்லை ஒரு லெவலில் இருபதாய் சொன்னவர் மதுச்சாலைகளை வைத்து வழி சொல்லும் தன் பழைய நினைவுகளை சொன்னார், அரும்பாக்கம் மதுவிடுதி, சூளைமேடு என்று சொன்னவருக்கு, நான் உங்கள் முன் குழந்தைபோல் என்றேன், கவலையை விடுங்கள் வளர்ந்துவிடலாம் என்றார்.புனகையித்தேன்.
இறுதியாய் கவலை படதே தைரியமாய் இரு, உலகில் பலகோடிபேர் உணவு, உடையின்றி இருக்கின்றனர் உனக்கு எல்லாம் இருக்கிறது, மரணத்தை பற்றி என்னதே, சென்னை வரும் போது சந்திப்போம் என்று சொல்லி நன்றியுடன் அழைப்பை துண்டித்தார்.எல்லாம் கனவுப்போல் இருக்கின்றது, ஆனால் எல்லாமே நிஜம், யாரென்று தெரியாத முகநூல் வாசகனுக்காய் இத்துணை நேரம் செலவு செய்து, தைரியம் சொல்லி, உற்ச்சாகமூட்டி மாயமாய் காணாமல் போன அந்தோணி....கதையில் வரும் ஜென்குருவாய் தோன்றுகிறார். என் சுறுசுறுப்பு என்னுள் மீண்டும் வந்ததாய் உணர்கிறேன். இன்னும் ஜென்குருவிடம் கேட்கவேண்டிய பாடம் நிறைய உள்ளது, அதுவும் அரசியல் பாடம்.
சில நேரங்களில் இப்படிதான் நண்பா எதிர்பாரா திசையில் இருந்து நம்பிக்கை பிறக்கும்.வாழ்வது கடமையாக இல்லாமல் வாழ்க்கையே கொண்டாடுவோம் நண்பா.
ReplyDelete