Skip to main content

தோழியின் கதை

இது சௌமியா என்னிடம் சொன்னா அவள் தோழியின் கதை. அதை நான் அப்படியே அவள் சொன்னதைப் போலவே எந்த மாற்றமுமின்றி எழுத முற்படுகிறேன், இந்த கதையை நான் கேட்டபோது என் தோழியின் கதையும் இப்படியானதாகவே இருப்பது உரைத்தது, என் தோழியின் கதையை யோசிக்கும் போது நான் கதையில் மிக முக்கிய பாத்திரத்தை வகிக்கிறேன் என்பதை உணர்கிறேன்.நான் சௌமியாவினுடைய தோழியின் கதையை தான் எழுதப்போகிறேனா இல்லை எழுதப்போவது என் தோழியின் கதையா ? இல்லை இது என் வாக்குமூலமா?. மேலும் இப்பிரதி கதையல்ல உலகத்தின் எங்கோ ஓர் இடுக்கில் இப்படியான சம்பவம் நடந்தது, நடந்துக்கொண்டே இருக்கிறது சொல்லப்போனால் இது உங்களின் கதையாகவும் இருக்கலாம், இப்பிரதியை படிப்பதும் படிக்காமல் கழிவென ஒதுக்கி தள்ளுவதும் உங்கள் விருப்பம். படித்துமுடித்தவுடன் இதேப்போலான ஓர் கதையை அல்லது சம்பவத்தை நீங்கள் ஏற்கனவே அறிந்ததைப்போலவும் தோன்றலாம் அதுனாலே என்னை என் பிரதியுடன் சேர்த்து நிராகரிக்கலாம், எப்படியாயினும் நான் சொல்லப்போகும் சௌமியாவின் தோழி கதையும், என் தோழியின் கதையும், என் வாக்குமூலதையும் சௌமியாவின் தோழியே பின்வருமாறு சொன்னார்

இதயம் இத்துனை வேகமாய் துடிக்கும் என்பதை இப்போது தான் உணர்கிறேன். மனதிற்குள் ஒருவித பயம், குற்றஉணர்வு இரண்டும் ஒன்று சேர்ந்து என்னை வதைக்கிறது .சூரியனின் வெப்பம் முழுவதும் என் மீது இறங்குவதாய் உணர்கிறேன், யாருமில்லா தேசத்தில் நான் மட்டும் தனியாய் வாழ்வதாய் தோன்றுகிறது, இந்த உலகமே என்னை ஒதுக்கி தள்ளியதைப்போன்று தவிக்கிறேன்,ஏதோ செய்யக் கூடாத குற்றம் செய்தவளாய் வெதும்புகிறேன். என்னை யார் உதாசினப்படுதியது, நான் செய்த தவறு என்ன? என் வாழ்வில் நான் சொல்லப்போகும் ஓர் சம்பவம் நடந்தப்போது மேலே சொன்னா அத்துணை உணர்வுகளும் என்னை தாக்கின, ஆனால் இந்த கதையை உங்களிடம் சொல்லும் இத்தருணத்தில் வெறுப்பு மட்டுமே மிச்சமிருக்கிறது. இந்த கதையை நானும் இதை எழுதிய இளவேனிலும் ஒன்றாகவே சொல்லப்போகிறோம் ஒருவேளை அவரே இக்கதையில் வரும் ஆண் பாத்திரமாகவும் இருக்கலாம், யாராக இருந்தாலும் எல்லா ஆண்களும் ஆண்கள்தானே.

இப்போது கூட அவனின் நினைவுகள் என்னிடம் நிரம்பி கிடகின்றன. அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் என்னுள் இன்னும் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கின்றன. அவனை அத்துனை தூரம் காதலித்தேன், எட்டு ஆண்டுகள் காதலித்தோம். இன்னும் எங்கள் காதலுக்கான மிச்சம் நாங்கள் படித்த கல்லூரி அமர்வுப்பலகைகளில் படிந்துகிடக்கின்றன. அவன் பெயர் கவியன் ஒரு தீவிர இலக்கிய வாசகனாய் எனக்கு என் தோழியால் அறிமுகப்படுத்தப்பட்டான். குமுதம், ஆனந்த விகடனைக் கூட படிக்க விருப்பமில்லாத எனக்கு கைநிறைய புத்தகங்களுடன், அறிமுகமான முதல்நாளே ஒரு மணிநேரம் புதுமைப்பித்தன், நகுலன் என்று அவன் பேசியது பெரும் பிரமிப்பை தந்தது.

எனக்கு
யாருமில்லை
நான்
கூட..

அவன் முதன் முதலாய் சொன்ன நகுலனின் கவிதை என் வாழ்வு முழுதும் படிந்துகிடக்கிறது. அவன்பால் ஈர்க்கப்பட்டேன். அவனை தொடர ஆரம்பித்தேன், அவனும் என்பால் ஈர்க்கப்பட்டான் என்பது அவன் காதலை என்னிடம் வெளிப்படுத்திய நிமிடம்தான் அறிந்துக்கொண்டேன். அவன் எழுதிய கதைகளை, கவிதைகளை வேண்டி படித்தேன், அவன் மீதான மயக்கத்தால் புத்தகங்கள் மீதும் சிறிது ஈர்ப்பு ஏற்ப்பட்டது. இலக்கியங்கள் குறித்து மட்டுமே பேசதெரிந்து வைத்திருந்தான், அதை விடுத்தால் சினிமாக்கள் குறித்து பேசினான், அரசியல் பேசினான். தான் ஒரு மர்க்ஸ்சியன் என்று அடிக்கடி சொல்லிக்கொள்வான், சேகுவேராவை போல் இந்தியா முழுதும் பயணம் செல்ல இருப்பதாய் சொல்வான். இவைகள் அவன் மீதான மயக்கத்தை அதிகப்படுத்தியது. கால நேரங்கள் கடந்து அவனை காதலிக்க ஆரம்பித்தேன். திடிரென்று ஒருநாள் அதிகாலை ஏழுமணிக்கு என்னை சந்திக்கவேண்டும் என்று சொன்னான். வழக்கமாய் சந்தித்துக்கொள்ளும் அமர்வு பலகையில் சந்தித்துக்கொண்டோம். ஒரு மணிநேரமாய் எதையோ சொல்ல முயற்சித்துக்கொண்டிருந்தான். எனக்கு புரிந்தது அவன் காதலை வெளிப்படுத்த நினைக்கிறான் என்று, உள்ளுர மகிழ்ந்தவள் வெளிக்காட்டாமல் அவன் வார்த்தைகளுக்காய் காத்துக்கிடந்தேன். ஒருவழியாய் என்னை திருமணம் செய்துக்கொள்ள விரும்புவதாய் சொன்னான். நானும் அவனை கண்ட நாள்முதலாய் காதலிப்பதாய் சொன்னேன். அவனும் கண்டநாள் முதல் என்மீது ஈர்ப்பு இருந்ததை சொன்னான். எங்கள் காதல் இருவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு எங்கள் வரலாறுகளில் இடம்பிடித்துக்கொண்டது. காதல், காமம் என்று எல்லா உணர்வுகளும் எங்கள் நெருக்கத்தை அதிகரிக்கவே செய்தது.

வேலையின் காரணமாய் வேறு நகருக்கு வந்துவிட்டேன். கவியன் ஓர் மிகப்பெரிய நகரத்தில் இலக்கியம், சினிமா, எழுத்து என்று வாழ்ந்துக்கொண்டிருகிறான். வேலைக்கு செல்லாததால் அவனின் தேவைகளுக்கு மாதம் மாதம் நான் பணம் அனுப்பிக்கொண்டிருகிறேன். தோழியின் நண்பனாய் அறிமுகமான ராகுல், அவனாலே இந்த கதையை உங்களிடம் சொல்லிக்கொண்டிருகிறேன்.எங்கள் இருவருக்குமான அறிமுகமும் நட்பும் ஓர் ஆண்டுகளை கடந்துவிட்டது. கவியனின் எழுத்துகளுக்கு ரசிகன் ராகுல். கவியனை நானே அவனிடம் அறிமுகப்படுத்தினேன். கவியன் போலான அனைத்தையும் புரிந்துக்கொள்ளும் ஓர் துணை கிடப்பது அரிது என்பான் அடிக்கடி. அவன் சொல்லும்போதெல்லாம் மனம் பூரித்துபோகும். இப்போது சில நாட்களாய் நான் அவன் மீது ஈர்கப்படுகிறேன்.அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் என்னை கிளர்ச்சியடைய செய்கின்றன. அவன்பால் காமுறுகிறேன்.காரணம் தேடியலைந்தும் பயனில்லை காரண, காரியங்களைத் தாண்டி அவனை மோகிக்கிறேன். கணவுகளில் புணருகிறேன், என் இதழ்களை ஈரமாக்குகிறான்.நான் ஒருப்பாவி, கேவலமான ஜன்மம், மனுசியே இல்லை மிருகம், உடம்புக்கு அலையும் பிசாசு, கவியனுக்கு துரோகமிலைக்கிறேனே. எவ்வுளவு நல்லவன் அவன், என் மேல் எத்துனை காதல் கொண்டுள்ளான், என் மீது எத்துனை நம்பிக்கை கொண்டுள்ளான். எங்களின் புனிதமான காதலுக்கு துரோகம் புரிகிறேன், என்னை கொன்றுப்போட்டுவிடலாம்.

இல்லை, கவியனிடம் என் எண்ணங்களை சொல்ல வேண்டும் அவன் என்னை புரிந்துக்கொள்வான்.அவன் மர்க்ஸ்சியன், பெண்ணியம் பேசுபவன்,பின்நவீனவாதி. அவனத்தான் அடிக்கடி சொல்லுவானே காமம் பசியை போன்றது, இயற்கை தேவை என்று. கண்டிப்பாக என்னை புரிந்துக்கொள்வான், என் மனநிலைக்கு நல்ல முடிவு சொல்லும் திறன் அவனிடம் மட்டுமே இருக்கிறது.நான் ராகுலுடன் படுக்கையை பகிரவில்லையே அவன் மீது ஒருவித எண்ணம் அவ்வுளவுத்தான். உலக தத்துவுங்களை பேசும் என் கவியன் மனித மனதை அறியாதவனா என்ன? மனம் பேதளித்தவளாய் எனக்குள்ளே புலம்புகிறேன். என் உடல் தேவை என் கட்டுப்பாடுகளை உடைத்தெறிகிறது. இருந்தும் என்னை கட்டுப்படுதிக்கொல்லவே முயல்கிறேன்.


"உங்க ரைடிங்ஸ் எல்லாம் ரொம்ப சூப்பர், எவ்வுளவு டேலண்டடா இருக்கீங்க சான்சேஇல்ல"
"உன் இதழ்களைப் போல"
"என்னது?"
"என் எழுத்துக்கள் உன் இதழ்களை போல சூடானது"
"ஹ ஹா, நல்ல கொம்பேரிசன், நீங்க எப்பவுமே இப்படித் தான் தமிழ் கிளியரா பேசுவிங்களா?"
"எப்பவும் இல்ல, சில அழகான நட்சத்திரங்களை பார்க்கும்போது மட்டும்......வீட்டுல யாருமில்ல?"
"அப்பா, அம்மா ஊருக்கு போயிருக்காங்க, அதுனாலத் தானே உன்ன சாரி உங்கள இன்வைட் பண்ண முடிஞ்சது"
"உன் இதழ்களில் நான் என் கவிதைகளை எழுத வேண்டும்"
"வாட்!!"
" உன்னப் பத்தின ஒரு சின்ன கவிதை"
அதற்கு மேல் பேசுவதற்கோ, கவிதைசொல்லவோ அங்கு எதுவுமில்லை. கவியனின் கவிதைகளால் உடல்முழுவதும் சிதைக்கப்பட்டுக்கிடந்தாள் ரோகினி. அவன் உடலைவிட்டு தன் உடலை பிரித்தெடுத்தவள் வெட்கத்தில் ஆடைகளை தேடிக்கொண்டிருந்தாள். தன் வேலைமுடிந்த களைப்பில் சிந்தனையாளன் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தான்.ரோகினி மீதான கவியனின் கிறுக்கல்கள் அதன் பின் ஒரு பத்து முறையாவது அரங்கேறியிருக்கும். கவியன் ஓர் கல்லூரியில் டால்ஸ்டாய் குறித்து பேச சென்ற கூட்டத்தில் அறிமுகமானவள் ரோகினி. உளவியல் மாணவி, ஆங்கில இலக்கியங்கள் மீதும், ருஸ்ய இலக்கியங்கள் மீதும் பெரும் ஈடுப்பாடு கொண்டவள். கவியன் அறிமுகமானபின் அவனின் எழுத்துக்களையும் ஈடுபாட்டுடன் வாசிக்க ஆரம்பித்தவள். அவன் மீதும் ஈர்ப்பு கொண்டாள். கவியனும் அவளின் உடல் மீது கொண்ட ஈர்ப்பின் அடையாளாமாய் தான் இதற்கு முன்னான உரையாடலை என்னால் எழுதமுடிந்தது.

"ம்ம்...சொல்லு!"
"கவி உன்கிட்ட ஒன்னு சொல்லணும், திட்டமாட்டாயே, தப்பா நினைக்காத"
"என்னனு சொல்லு"
"இப்பகொஞ்ச நாளா எனக்கு அடிக்கடி மைன்ட் ரொம்ப டிஸ்டர்பா இருக்கு"
" டிஸ்டர்ப்னா ???"
"செக்ஸ் பீலிங்க்ஸ், அதுவும் வேறு ஒரு பையன் மேல...ராகுல்............
ங்கோத்தா...இந்த வார்த்தையுடன் போன் துண்டிக்கப்பட்டதை உணரமுடிந்தது என்னால்....

இவை எல்லாம் நடந்து முடிந்து பலவருடங்கள் கடந்துவிட்டது. மேலே சொன்னா சம்பவங்கள் எனக்கு நிஜமான கவியனை அறிமுகப்படுத்தியது. யாராக இருந்தாலும் ஆண்கள் ஆண்களாகவே இருக்கிறார்கள். அதற்குப்பின்னான சண்டைகள் எங்கள் இருவருக்குள்ளும் ஓர் பெரும் இடைவெளியை ஏற்ப்படுத்தியது, என்னை ஓர் அடிமையைப் போல், மிருகத்தைப்போல் நடத்த ஆரம்பித்தான். கொடுமைகளை ஏற்கமுடியாமல் நானாகவே அவனை விட்டு விலகிவிட்டேன். செய்த வேலையை விட்டுவிட்டு நான் சிறுவயதில் ஆர்வத்துடன் கற்ற நடனத்தை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுத்துக்கொண்டு வாழ்ந்துக்கொண்டிருகிறேன். ஆனால் கவியன் ஏற்படுத்திய வலி இன்னும் அடிமனதில் இருந்துக்கொண்டே இருக்கிறது. அவன் மீதான காதல் இன்று வெறுப்பின் உச்சமாய் தகிதுக்கொண்டிருகிறது. இருந்தும் காதலித்துக்கொண்டே இருக்கிறேன், முதன் முதலாய் நகுலனின் கவிதயுடன் அறிமுகமான கவியனை.

Comments

  1. பெயரில்லாMay 18, 2012 at 10:16 AM

    உங்கள் உணர்வுகள் புரியக்கூடியவை தான் ஆனாலும் நீங்கள் இறுதியாக கூறியது போல யாராக இருந்தாலும் ஆண் ஆணாகவே தான் இருப்பார்கள் எந்த பெண்ணும் தனது படுக்கையை இன்னொறுத்தி உடன் பங்கிட மாட்டாள் அதேபோல் ஆண்கள் இந்த விசயதில் அதிக கவனமாக இருப்பார்கள் இதை நீங்கலும் புரிந்து னடக்கனும்

    ReplyDelete
  2. இனியவன்May 18, 2012 at 10:20 AM

    உங்கள் உணர்வுகள் புரியக்கூடியவை தான் ஆனாலும் நீங்கள் இறுதியாக கூறியது போல யாராக இருந்தாலும் ஆண் ஆணாகவே தான் இருப்பார்கள் எந்த பெண்ணும் தனது படுக்கையை இன்னொறுத்தி உடன் பங்கிட மாட்டாள் அதேபோல் ஆண்கள் இந்த விசயதில் அதிக கவனமாக இருப்பார்கள் இதை நீங்கலும் புரிந்து னடக்கனும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள்: வெறுப்பை ஜனநாயகப்படுத்தும் அழகியல்!

0. பெருந்தொற்று குறித்த செய்தி என்னை வந்து சேர்ந்த போது, நான் எனது சீனப் பயணத்திற்கு தீவிரமாக தயாராகி கொண்டிருந்தேன். ஒரு வேளை பெருந்தொற்று என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால், நான் இந்த பிரதியை பெய்ஜிங்கிலிருந்து எழுதியிருக்கக்கூடும். அந்த நேரத்தில் அது பெருந்தொற்றாக உருவாகியிருக்கவில்லை. மாறாக, சில நூறு மனிதர்களை நிமோனியா போன்ற விளைவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் யாரும் அறியாத கிருமியாக, தொலைதூர செய்தியாக இருந்தது. கோவிட்-19 பெருந்தொற்று நான் வாழ்ந்த நகரத்தை வந்தடைய மூன்று மாதங்களானது. உலக சுகாதார நிறுவனம் அதை ஒரு தொற்றுநோயாக அறிவித்த அந்த இரவில் நண்பர் ஒருவர் பின்வரும் வாட்சப் செய்தியை அனுப்பியிருந்தார்: “நாம் அனைவரும் வீடு திரும்பும் நேரம் வந்துவிட்டது. பிரிந்து கிடக்கும் மனித இனம், ‘மனிதர்’ எனும் ஒற்றை அடையாளத்தின் கீழ் ஒன்றினையும் அற்புதமான சூழலை கண்களுக்கு புலப்படாத சிறிய கிருமி உருவாக்கி இருக்கின்றது” 1. மார்ச் 2019க்கு பிறகு மனித இருப்பு அதிக சிக்கலானதாகவும், இதுவரை இல்லாத அளவில் மெய்நிகரானதாகவும் மாறியது. கோவிட் -19 பற்றிய செய்திகள் இணையம் மற்றும் தொலைக்காட்சி திரைகளை நிரப்பின. போ...

In the most health-obsessed society ever, all is not well*: On Trauma

1 Philosopher Byung-Chul Han's essay Neuronal Power begins with the following lines: " Every age has its signature afflictions. Thus, a bacterial age existed; at the latest, it ended with the discovery of antibiotics. Despite widespread fear of an influenza epidemic, we are not living in a viral age. Thanks to immunological technology, we have already left it behind. From a pathological standpoint, the incipient twenty-first century is determined neither by bacteria nor by viruses, but by neurons ". Modern integrative body mind science defies Byung-Chul Han’s statement, that it is reductive to define human suffering solely in terms of ailments. However, we are living in an era, where production relations dictate nearly everything about human existence, in this specific context Byung-Chul Han’s statement—that the majority of human society is afflicted by mental or neuronal issues—serves as a foundational lens to understand contemporary humans and their struggles. In today’...

படுகொலைக்கு முன்னான சில மணி நேரங்கள்

    ஏதும் செய்வதறியாது நான் அப்படியே அமர்ந்து கிடக்கிறேன் , எத்தனை மணி நேரங்கள் என்று நிச்சயம் தெரியவில்லை . அந்த தகவல் எனக்கு சொல்லப்பட்ட   நொடியிலிருந்து நான் இப்படியே தான் அமர்ந்திருக்கின்றேன் , ஒரு துளிக்கூட அசைவில்லாமல் ஊரின் எல்லையில் அசையாது கிடக்கும் வேடியப்பனை போல் . கண்களில் லேசாக கண்ணீர் வருவதுபோல் இருக்கிறது ஆனால் வரவில்லை வந்தும் ஒரு பயனும் இல்லை . உடல் நடுங்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை , இறுகிப்போன உடலை விட்டு வெளியேறும் மூச்சு காற்றை கூட என்னால் உணரமுடியவில்லை . அதே நேரம் ஒளியற்று , ஆண்டுகளாய் இருண்டு கிடக்கும் அந்த அறையின் காற்றில் பிசுபிசுப்புடன் கலந்திருந்த உயிரின் வெப்பம் என்னை தீண்டி செல்கிறது , சூடான மழைத் துளியை போல் . மூளை சீரற்று யோசித்து கொண்டிருக்கிறது ... அம்மாவின் முலை காம்புகள் , விபத்தொன்றில் மரணித்த நன்பன் , தேர் திருவிழா , அப்பா கைபிடித்து கழனிக்கு கூட்டி சென்ற முதல் நாள் , அவளின் முதல் முத்தம் , இதுவரை முகம் பார்க்காத மகனின் கணவு முகம் , கல்லூரியின் விடுதி அறை , முதல் காமத்தின் வெள்ளை இரவு ... இப்படி சொல்லி ம...