அந்நியனை வாசித்துவிட்டு என்னை மெர்சோவாக உருவகப்படுத்திக்கொண்டு வெயில் தகிக்கும் கோடையின் பகற் பொழுதுகளில் கை விரல்களை துப்பாக்கியாகக் கருதிக் கொண்டு கடற்கரை மணலில் பெயரற்ற அந்த அரேபியனை தேடி அலைந்த பொழுதுகளை நினைத்து பார்க்கிறேன். இருத்தலியத்துக்கும் அபத்தத்துக்கும் கிளர்ச்சிக்கும் இடையேயான இடைவிடாத உரையாடலாக காம்யுவின் வார்த்தைகளில் சிக்குண்டு, வாழ்வின் அபத்தங்களை இன்றுவரை தேடிக்கொண்டே இருக்கின்றேன்.
அந்நியனை தொடர்ந்து வீழ்ச்சி, முதல் மனிதன், கிளர்ச்சியாளன் என்று நீண்ட காம்யு மீதான தேடல் வாழ்வின் அபத்தம் குறித்த தேடலாகத் தொடர்கின்றது. காம்யுவை விட்டு விலகி ஓடுவதென்பது எத்தனை முயற்சித்தும் இயலாத ஒன்றாகவே இருக்கின்றது. காரணம் காம்யு எனும் வார்த்தை ஒரு தனிமனிதனையோ அல்லது எழுத்தாளனையோ குறிக்கும் பெயர்சொல் மட்டும் அல்ல, அது அபத்தவாதத்தின், கிளர்ச்சியின், வாழ்க்கை பற்றிய தேடலின் குறியீடு. வாழ்வின் அல்லது வாழ்க்கை என்று சொல்லப்படுவதின் அபத்தங்களை அதன் படிநிலைகளை இடைவிடாது உடைத்து விசாரிக்கும் காம்யுவின் பிரதிகள் பிறப்புக்கும், இறப்புக்கும் இடையே நிகழும் பயணமான ’இருப்பு’ குறித்தான விசாரனைகளாகவும், அந்த இருப்பு என்பது எப்படி ஏதுமற்றதாகவே இருந்து மறைகின்றது என்பதையுமே தொடர்ந்து பேசுகின்றன. இந்த சூன்ய நிலைக்கும் கிளர்ச்சி நிலைக்கும் இடையே ஊடாடும் ஒன்றாக தான் காம்யுவின் படைப்புகள் இருக்கின்றன.
கொலை என்பது சமுக கட்டமைப்பின்படி குற்றம். ஆனால் அதே கொலை ஒரு இடத்தில் அதாவது போர் சூழலில் வீரமாகவும், குற்றமற்றதாகவும் இருக்கின்றது அல்லது இன்னும் சொல்லப்போனால் போரில் வென்றவர்களின் கொலைகள் வீரத்தின் அடையாளமாக கருத்தப்படுகின்றது அந்த கொலைகளை சமுகம் கொலைகளாய் பார்ப்பதில்லை அல்லது கொலைக்காரர்கள் தண்டிக்கப்படுவதில்லை நகைமுறனாக அவர்கள் கொண்டாடப்படுகின்றனர். ஆனால் போர் இல்லாத அமைதி சூழலில் ஒரு கொலை கொலையாக, குற்றமாக கருத்தப்படுகின்றது – அதுவும் பல நேரங்களில் கொலை செய்தவரின் அதிகாரங்களை பொருத்து அது கொலையா அல்லது இல்லையா என்று முடிவு செய்யப்படுகின்றது. அநேக நேரங்களில் அரசு செய்யும் கொலைகளை தண்டனை எனும் வரையறைக்குள் அணுகும் தன்மையுமே சமுகம் கொண்டுள்ளது. கொலைச் செயலின் இம்மாறுபட்ட பார்வைகளையே காம்யூ அபத்தம் என்கிறார்.
வாழ்வினை அபத்தமென்று கருத்தும் மெர்சோ தன் தாயின் மரனத்தை அதாவது கதறி துடிக்கவேண்டிய ஒரு செய்தியை “இன்று அம்மா இறந்துவிட்டாள்” எனும் மிக அசட்டையான ஒரு வரியில் கடக்கின்றான். அவனது அம்மாவை வெறுக்கவில்லை அல்லது அவள் மீது எந்த கோபமும் இல்லை ஆனால் அவனுக்கு தெரிகின்றது, மரணம் இன்றியமையாத ஒன்று என்று. அதனால்தான் அவன் மரணத்தை எந்தவித அலங்காரங்களுமின்றி சந்திக்கின்றான். காதலும், வாழ்தலும், சாவும் எல்லாமும் அவனுக்கு ஏதுமற்றதாகதான் இருக்கின்றது.
வாழ்வின் அபத்தங்களை நிராகரிக்கும் மெர்சோ கொலைக் குற்றதுக்காய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்படும் வேளையில் சுதந்திரத்தை தேடி அழைகின்றான், அவனுக்கு சிறையை விட்டு விடுதலை ஆவதென்பது சுவாசத்தைப் போல், இதயத் துடிப்பைப் போல் அடிப்படைத் தேவையாக மாறுகின்றது. அதே நேரம் அவன் அபத்தத்தால் சிக்குண்டு மரணத்தின் வாசலில் நிற்கிறான். மெர்சோ எனும் ஒரு பிரஞ்சு அல்ஜேரியன் ஒரு அரேபியனை கொல்லுதல் – கொலையாக மாறுகின்றது. அதே நேரம் காலனிய அரசு மெர்சோவின் மீது தினிக்கும் கொலை, சட்டரீதியான தண்டனையாக உருக்கொள்கின்றது. வேறு சமயத்தில் அதே காலனிய அரசு அல்ஜீரிய அரபிகளை கொல்லுதல் கொலையாக மாறாமல் தீவிரவாதத்துக்கு எதிரான அரசு செயல்பாடாக கருதப்படுகின்றது. காம்யு தன் வாழ்நாள் முழுவதும் அரசுக் கொலைகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்துக்கொண்டே இருக்கின்றார். அவரின் எழுத்துகள் எதை கொண்டும் மனிதர்கள் கொல்லப்படுவதை குறிப்பாக அரசின் பெயரில், சட்டத்தின் பெயரில் மனிதர்கள் கொல்லப்படுவதை முற்றிலும் நிராகரிக்கின்றன. இரண்டாம் உலக போருக்கு பின்னான பிராஞ்சு சமுகத்தில் காம்யுவின் இருப்பு என்பதே கிளர்ச்சியாகத்தான் இருந்தது.
தத்துவவாதி – எழுத்தாளன் எனும் இரட்டை அடையாளங்களையும் ஒன்று சேர்த்து காப்காவை போல், தஸ்தாயெவ்ஸ்கியை போல் தத்துவ எழுத்தாளனாகதான் காம்யு இருந்தார். இதை காம்யு தன்னுடைய எழுத்துகளிலே குறிபிட்டும் இருக்கின்றார். எழுத்தாளர்களிலே மிகவும் உயரிய எழுத்தாளர்கள் தத்துவ எழுத்தாளர்கள் என்று குறிப்பிடும் காம்யு அவர்களே தங்கள் கருத்துக்களை வாதங்களாய் முன்வைக்காமல் காட்சிகளாய் முன்வைக்கின்றனர் என்கின்றார். காம்யுவின் தத்துவம் என்பது மேலே சொன்னதை போல் திரும்ப திரும்ப அபத்தம் குறித்தே பேசுபவை, வாழ்வின் அபத்தம் குறித்து பேசுபவை. அவர் வார்த்தைகளேலே சொல்வது என்றால் “வாழ்க்கை என்பதற்கு எந்த ஒரு அர்த்தமும் இல்லை என்பதை நான் அழுத்தமாக நம்புகிறேன். ஆனால் அதில் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கின்றது, அது மனிதன். ஏன் என்றால் மனிதன் மட்டுமே வாழ்வின் அர்த்தம் குறித்து வலியுறுத்தும் ஒரே உயிரினம்.”
என்னை போலான பலப் பல வாசகர்கள் காம்யுவின் எழுத்துக்கள் குறித்து இப்படியான பல ஆயிரம் பிரதிகளை எழுதி கொண்டாடியிருக்ககூடும். ஆனால் காம்யுவின் நூற்றாண்டில் யாருமே எதிர்பார்க்காத பொழுது ஒன்றில் “இன்னும் அம்மா உயிரோடு தான் இருக்கின்றாள்” எனும் வரியினை தன் கதையின் முதல் வரியாக கொண்டு ஒரு கதை புத்தகம் வெளி வந்திருக்கிறது. ஆம்! சார்த்தர் கூட செய்ய முடியாத அற்புதமான விமர்சனம் ஒன்றை காமெல் தாவுத் மெர்சோவினை விசாரிப்பதன் மூலம் காம்யுவினை கேள்வி கேட்கின்றார். தாவுத் காம்யுவின் பிரதியை கேள்வி கேட்கும் அதே நேரத்தில், மெர்சோவால் கொலைசெய்யப்பட்ட பெயரற்ற அந்த அரேபியனின் குரலாக அதன் வாசகர்களிடமும் தன் கேள்வியினை முன் வைக்கின்றார்.
ஒருவன் கொலை செய்யப்படுகின்றான், இறந்து போனவன் குறித்து எவ்வித அக்கறையுமற்று, அவனை ஒரு மனிதன் என்று கூட கருதாமல் அந்த பிரதியின் செழிப்பான எழுத்துக்களின் பால் மையலுற்று இறந்தவன் ஒரு மனிதனா என்று கூட அறித்துக்கொள்ளும் ஆர்வம் இல்லாதவர்களாக தான் அந்நியனின் பெரும்பானை வாசகர்கள் இருந்தோம் அவர்களை நோக்கி தான் தாவுத் தன் விமர்சனத்தை முன்வைக்கின்றார். இறந்தவனுக்கு ஒரு பெயரை சூட்டி, அவனுக்கு தாய், தம்பி, வீடு, காதலி என்று அனைத்தையும் உருவாக்குகின்றார். பெயரற்ற அந்த அரேபியனான மூசாவின் தம்பியான ஹருனின் குரலாக ஒலிக்கின்றார் தாவுத். இந்த புத்தகம் பற்றிய மிக சரியான அறிமுகமாக இந்த ஒற்றை வாக்கியமே போதும் “அவன் துப்பாக்கி வெடி சப்பதத்தை பற்றி பேசுகின்றான், ஆனால் அதை கவிதையை போல் ஒலிக்க செய்கின்றான்.” இந்த ஒற்றை வரியை காட்டிலும் மேல் அதிகமான விமர்சனம் எதுவாக இருக்க முடியும்.
அந்நியனும், மெர்சோ மறுவிசாரனையும் ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரே தளத்தில், ஒரே வடிவத்தில் பயனிக்கின்றன. ஆனால் இரண்டுக்குமான வேற்றுமை என்பது இரு வேறு வாழ்க்கை முறையின், கலாச்சாரத்தின், அதன் பார்வையின் வேற்றுமையாக தான் இருக்கின்றது. காம்யு எனும் பிரஞ்சு எழுத்தாளனுக்கு அல்ஜீரியா எனும் நாடு இருத்தியல் குறித்தான தன் விசாரனைக்கான ஒரு காட்சி களமாக/அமைப்பாக மட்டுமே இருக்கின்றது அதுவே தாவுத் எனும் அரேபியனுக்கு அல்ஜீரியாவே இருத்தியலின் கேள்வியாக இருக்கின்றது. இந்த வேற்றுமை தான் மெர்சோ மறுவிசாரனைக்கான கதைக்களம் இந்த இடைவெளியினை தான் தாவுத் தன் பிரதி முழுவதிலும் விசாரிக்கின்றார். இந்த இடைவெளி என்பது வெள்ளை நிறத்துக்கும் மற்ற அனைத்து நிறங்களுக்குமான இடைவெளியாக, மேற்கு நிலத்துக்கும் மற்ற நிலங்களுக்குமான இடைவெளியாக, மையத்துக்கும் விளிம்புக்குமான இடைவெளியாகவே இருக்கின்றது.
அந்நியனும் மெர்சோ மறுவிசாரனையும் மிக முக்கியமான ஒரு விவாதத்தை முன்வைப்பதை வாசகரால் உணரமுடியும். கீழைத்திய அல்லது மூன்றாம் உலக மனம் X மேற்கு உலக மனம் எனும் இருவேறு முனைகளின் உரையாடல்களாக இரண்டு கதையாடல்களும் இருக்கின்றன. மேற்கின் மனம் தான் இதுநாள் வரை அனுபவித்த முதலாம் உலக அடையாளங்களை உதறிவிட்டு அல்லது அபத்தமாய் உணர்ந்து அடையாளமற்ற நிலைக்கு செல்ல முயற்சித்தல். கிரேக்க, ரோமாபுரி தத்துவ மரபின் நீட்சியாய் அது நிகழ்வதை காம்யு எனும் கதை சொல்லியின் ஊடாகவும், உலக சமூகத்தால் சுய அடையாளம் அங்கிகரிக்கப்படாத அல்லது என்னவென்று தெரியாத அல்லது கடந்த 300-400 ஆண்டுகளாய் ஐரோப்பியா நிராகரித்த ஒன்றை நிறுவ முயற்சிக்கும் கீழைத்திய மனம் தாவுத்தின் குரலாகவும் ஒலிக்கின்றது. நம் காலத்தின் தேவைகளாய் மேற்கின் சிந்தனை மரபை காட்டிலும் கீழைத்திய சிந்தனை மரபு தேவைப்படுவதை இதனுடே வாசகர் உணரலாம்.. அம்பெத்கர், பனான், எட்வார்டு சையத் என்று நமக்கு தேவையானவர்களின் பட்டியல் இருக்கின்றது.
காலனியர்களின் பழைய வீடுகளில் இருக்கும் கற்களை எடுத்து தங்களில் புதிய வீடுகளை அல்ஜீரியர்கள் கட்டுவதை போல் கொலைகாரனான மெர்சோவின் வார்த்தைகளை கொண்டு கொலை செய்யபட்ட தன் சகோதரனின் கதையை சொல்லும் ஹாருனால், எப்படி தன் சகோதரனுக்கு ஒரு பெயரை கூட சூட்ட முடியாமல், அவன் வெறும் நிகழ்வாக மாறிப்போனான் எனும் எதார்த்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பெயரற்றதால் மூசாவின் சடலம் கூட அவனுக்கும் அவன் அம்மாவுக்கு இறுதிவரை கிடைப்பதில்லை. அவன் சகோதரன் குறித்தான அழுத்தம் அவன் வாழ்க்கையுடன் எப்போதும் உடன் வருக்கின்றது ஒரு நிழலை போல். அந்த நிழலை அவன் தாய் அழியாமல் பாதுகாக்கின்றாள். அந்த நிழல் இறுதியில் ஹாருனினூடே கொலைக்கு பழியாக இன்னொறு கொலை செய்கின்றது, அல்ஜீரிய விடுதலையின் ஆரம்ப நாட்களில், ஒரு பிரஞ்சுகாரனை. இந்த கதைகளத்தில் மெர்சோவின் மீதான விசாரனையாக தொடங்கும் பிரதி, தன்னியல்யில் விடுதலை அடைந்த அல்ஜீரிய சமுகம், ஆட்சியாளர்கள் மீதான விமர்சனமாய் உருக்கொண்டு, இருத்தியல் மற்றும் அபத்தம் குறித்தான விசாரனையாக காம்யுவின் தத்துவத்துடன் ஒன்றினைத்து முடிவுகொள்கின்றது.
தாவுத் அந்நியனையும், மெர்சோவையும் மட்டும் எடுதாளமல் காம்யுவின் அனேக பிரதிகளையும் எடுத்துக்கொண்டே இந்த கதை புத்தகத்தை உருவாக்குகின்றார். வீழ்ச்சியில் வரும் ஓரான் நகரத்தில் இருந்தபடி அக்கதையின் நாயகனை போல் ஒரு மதுவிடுதியில் அமரந்தபடி தான் ஹாருன் இந்த கதை சொல்கின்றான். இப்படி கதை முழுவதிலும் காம்யுவும், அவரின் எழுத்துக்களும் நிறம்பியே இருக்கின்றன. தன் எழுத்துக்கள் முழுவதிலும் கொலை குறித்தும், மரணம் குறித்தும், அரசு கொலைகள் குறித்தும் காம்யு பேசியதை போன்றே தாவுத்தும் கொலை குறித்தும் அதன் அபத்தம் குறித்தும் பேசுகின்றார். ஹாருன் ஜான் எனும் பிரஞ்சுக்காரனை அல்ஜீரியா விடுதலை அடைந்த அடுத்த நாட்களில் கொலை செய்கின்றான், அதை தன் சகோதரனின் கொலைக்கு பழிவாங்கள் நடவடிக்கை அல்லது அவன் தாயின் வற்புறுத்தலின் பெயரில் அவன் கொன்று விட்டான் என்றாலும் அவன் ஒரு கொலையினை செய்துவிட்டான். அதற்காக விசாரனை அதிகாரியால் விசாரிக்கப்படுகின்றான். அவனை விசாரிக்கும் அதிகாரி அவன் மீது சுமத்தும் குற்றம் அவன் கொலை செய்துவிட்டான் என்று அல்ல, அவன் ஏன் அல்ஜீரிய விடுதலை போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதாக இருக்கின்றது. இதே கொலை காலனிய அரசின் கீழ் நடந்திருந்தால் அவன் ஒரு பிரஞ்சுகாரனை கொன்ற காரனத்துக்காய் உடனடியாக தூக்கிலிட்டு கொல்லப்பட்டிருக்கலாம் ஆனால் அவன் விடுதலை அடைந்த அல்ஜீரியாவில் ஒரு பிரஞ்சுகாரனை கொலை செய்கின்றான் விசாரனை அதிகாரியின் கவலை எல்லாம் அவன் ஏன் விடுதலை போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதும் அவன் இதே கொலையை விடுதலைக்கு முன் செய்திருத்தால் அது தியாகத்தின், வீரத்தின் குறியீடாக மாறியிருக்கும் என்பது மட்டுமே. அபத்தத்தின் வடிவங்களை பேசும் தாவுத் அதே இடத்தில் அல்ஜீரிய ஆட்சியாளர்கள், விடுதலை போராட்டம் மீதான விமர்சனைத்தையும் முன்வைக்கின்றார். கதை முழுவதும் ஹாருன் நாத்திகனாகவும், அனைத்து மதங்களையும் நிராகரிப்பவகாகவும், அல்ஜீரிய ஆட்சியாளர்களை, சமுக அமைப்பை கேள்வி கேட்பவனாகவுமே வருகின்றான். ஒரு இடத்தில் அந்த காலத்தில் எங்கள் பெண்கள் இன்று இருப்பதை போல் தலையினை கூட மூடியவர்களாய் இருக்கவில்லை என்கின்றான். கதை முழுவதிலும் குடித்தபடி, மதத்துக்கு எதிரானவனாக இருக்கின்றான்.
”சுதந்திரமற்ற இந்த உலகை அனுகுவதற்கான ஒரே வழி உன் ’இருப்பு’ என்பதே கிளர்ச்சியானதாக இருக்க வேண்டும்” என்ற காம்யுவின் வார்த்தைகளை கொண்டே தன் பிரதியின் இருப்பு என்பதே கிளர்ச்சியானதாக, ஒட்டு மொத்த இலக்கிய உலகமும் கொடாடிய ஒரு பிரதியினை கேள்வி கேட்பதாக, அதனூடே தன் சமுகத்தின் அடக்குமுறைகளுக்கும், பழமைகளுக்கும் எதிரான குரலாக ஒலித்துக்கொண்டே இருக்கின்றார் தாவுத். அதனாலே ”பேசினாலும், இறக்க போகின்றாய். பேசவில்லை என்றாலும் இறக்கபோகின்றாய். எனவே பேசிவிட்டு சாவு” என்ற அல்ஜீரிய எழுத்தாளர் Tahar Dajaoutன் வார்த்தைகளின் வடிவாமாய் நிற்கின்றார் காமெல் தாவுத்.
மெர்சோ மறுவிசாரனை
காமெல் தாவுத்
பிரஞ்சிலிருந்து தமிழில்: வே.ஸ்ரீராம்
வெளியிடு:க்ரியா

காலச்சுவடு

Comments
Post a Comment