Skip to main content

பிணை கூட இல்லாமல் சிறையில் இருக்கின்றேன். நான் உண்மையிலேயே குற்றவாளியா? - கபீல் கான்

ஆங்கில வழி மொழியாக்கம் - எல்.ஜே.வைலட், இளவேனில்

ட்டு மாதங்கள், சிறையில் பிணை இல்லாமல்

நான் உண்மையிலே குற்றவாளியா?

ஒவ்வொரு நொடியும் இன்னும் நினைவில் அப்படியே இருக்கின்றன. அன்று நடந்த ஒவ்வொரு காட்சியும் இன்றும் உயிர்ப்புடன் என் முன் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. சிறை கம்பிகளுக்கு பின்னே மூன்று மாதங்கள்
தாங்கவே முடியாத சித்தரவதைகளையும், அவமானங்களையும் கடந்தும் சில வேளை நான் என்னையே கேட்டுக் கொள்கிறேன் - நான் உண்மையிலேயே குற்றவாளியா? என் இதயத்தின் ஆழத்திலிருந்து வரும் ஒரே பதில் இல்லை இல்லவே இல்லை என்பதே.

சபிக்கப்பட்ட ஆகஸ்ட் 10 2017 அன்று அந்த வாட்சப் செய்தி என்னை வந்து சேர்ந்ததும் ஒரு மருத்துவனாக, ஒரு தந்தையாக, இந்திய தேசத்தின் பொறுப்பான ஒரு குடிமகனாக என்னால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்தேன். திடீரென்று திரவ ஆக்ஸிஜன் தீர்ந்து போனதால் உயிராபத்தில் இருந்த ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற முயற்சித்தேன். ஆக்ஸிஜன் இல்லாத காரணத்தால் மரணித்துக்கொண்டிருந்த அப்பாவி குழந்தைகளின் உயிர்களை காப்பாற்ற என்னால் முடிந்த மட்டும் முயற்சித்தேன்.

நான் பதட்டத்துடன் அனைவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன், நான் மன்றாடினேன், நான் கட்டளையிட்டேன், நான் ஓடினேன், நான் திட்டினேன், நான் கதறினேன்,  நான் ஆறுதல் சொன்னேன், நான் கலந்தாலோசித்தேன், நான் கையிலிருந்த பணத்தை சிலவு செய்தேன், நான் கடன் வாங்கினேன். ஒரு மனிதனாக என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன்.

என் துறை தலைவரை தொடர்பு கொண்டு பேசினேன், என் சக ஊழியர்களை, கல்லூரி முதல்வரை, துணை முதல்வரை, கோரக்பூர் மாவட்ட சுகாதார அதிகாரியை தொடர்பு கொண்டேன். அவர்களிடம் திடீரென்று நீர்ம ஆக்ஸிஜன் நிறுத்தப்பட்டதால் குழந்தைகளின் உயிருக்கு ஆக்ஸிஜன் குறைபாட்டால் ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளதை தெரிவித்தேன். (என்னிடம் அனைத்து தொலைபேசி பதிவுகளும் உள்ளன.)

மோடி கேஸ், பாலா ஜீ, இம்பீரியல் கேஸ், மயூர் கேஸ் ஏஜென்ஸி உள்ளிட்ட வாயு வினியோக நிறுவனங்களிடம் கெஞ்சினேன். பிஆர்டி மெடிகல் கல்லூரி சுற்றியுள்ள அனைத்து மருத்துவமனைகளிடம் கெஞ்சி ஜம்போ சிலிண்டர்களின் தொடர்பு எண்ணைப் பெற்று நூற்றுக்கணக்கான அப்பாவிக் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற ஏற்பாடு செய்தேன்.

முன்பணத்தை காசாகக் கொடுத்ததோடு மீதத்தை சிலிண்டர்கள் வரும் போது கொடுப்பதாக உறுதியளித்தேன். (நீர்ம ஆக்ஸிஜன் உருளை  வரும்வரை நாளொன்றுக்கு 250 சிலிண்டர்கள் ஏற்பாடு செய்தோம், ஒரு ஜம்போ சிலிண்டரின் விலை 216)

ஒரு அறையிலிருந்து மற்றொன்றிற்கு 100ஆம் வார்டிலிருந்து 12ஆம் வார்டுக்கும் அவசர சிகிச்சை அறைக்கும் ஓடினேன், ஏதாவதொரு ஆக்ஸிஜன் வழங்குனரிடம் இருந்து வந்துசேரும் இடத்திற்கென ஆக்ஸிஜன் தடைப் படாது கிடைக்க ஓடினோம். அருகாமை மருத்துவமனைகளிலிருந்து என் வாகனத்தில் ஆக்ஸிஜன் எடுத்து வந்தேன், ஆனால் அது போதாதென உணர்ந்தேன். எஸ்.எஸ்.பிக்கு சென்று அதன் டி.ஐ.ஜியை சந்தித்து இந்த எதிர்பாராத சூழலை விளக்கினேன், அவர்களது பதில் நடவடிக்கைகள் உடனடியானதாகவும் ஆதரவாகவும் இருந்தன. ஒரு பெரிய வண்டியையும் ராணுவ வீரர் குழுவையும் அனுப்பி பிஆர்டியிலிருந்து வாய்வு முகவரிடம் காலி சிலிண்டர்களைக் கொண்டு சென்று கேஸ் நிரப்பி பிஆர்டிக்கு எடுத்துவரவும் மீண்டும் கொண்டு சென்று நிரப்பி வரவும் உதவினர். தொடர்ந்து 48 மணினேரங்கள் வேலை செய்தனர். அவர்களது உறுதி எங்களுக்கும் ஊக்கமளித்தது. எஸ் எஸ் பியின் உதவிக்கு நன்றி கூறி வணங்க்குகிறேன். ஜெய் ஹிந்த்.

என்னுடைய இளைய/மூத்த மருத்துவர்களிடம் பேசினேன், எனது பணியாளர்களுக்கு உத்தரவிட்டேன். யாரும் பதட்டமடையவோ தைரியமிழக்கவோ வேண்டாம், பதட்டமாகியிருக்கும் பெற்றோர்களிடம் கோபப்பட வேண்டாம், இடைவேளைகள் எடுத்துக்கொள்ள வேண்டாம், ஒரு குழுவாக செயல்பட்டு ஒவ்வொரு உயிரையும் சிறந்த முறையில் காப்பாற்ற பணியாற்ற வேண்டுமென்றேன்.

குழந்தைகளை இழந்த பெறறோர்களை ஆறுதல் படுத்தினேன். குழந்தைகளை இழந்ததால் ஆத்திரமடைந்த பெற்றோர்களுக்கு அறிவுரைகளை கூறினேன். அங்கு மிக பெரிய குழப்பம் நிலவியது. அங்கிருப்பவர்களிடம், திரவ ஆக்ஸிஜன் தீர்ந்து போனது குறித்தும் அதை பெரிய ஆக்ஸிஜன் உருளைகளை கொண்டு உற்பத்தி செய்வது குறித்தும் விளக்க முற்பட்டேன்.

உயிர்களை காப்பற்ற கவனம் கொள்ளவேண்டி அனைவரையும் திட்டினேன், கதறினேன். நான் அழுதேன், உண்மையில் திரவ ஆக்ஸிஜன் விற்கும் நிறுவனத்துக்கு பண பாக்கி வைத்திருந்த நிர்வாக தோல்வியினை நினைத்து எங்கள் குழுவில் இருந்த அனைவருமே அழுதனர், அதுவே இந்த கொடூர நிலைக்கு காரணமாய் அமைந்தது.

13.8.17 அன்று அதிகாலை 1.30 மணிக்கு திரவ ஆக்ஸிஜன் வரும் வரை எங்கள் முயற்சிகளை நாங்கள் தொடரவே செய்தொம்.

ஆனால் 13.8.17 அன்று காலை முதலமைச்சர் யோகி மகாராஜ் வந்ததும் என் வாழ்க்கை தலை கீழாய் மாறியது. நீ தான் கபீலா, நீ தான் ஆக்ஸிஜன் உருளைகளை ஏற்பாடு செய்ததா என்று கேட்டார். ஆம் ஐயா என்று பதில் கூறினேன். அவருக்கு கோபம் வந்தது - ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்வதன் மூலம் நாயகனாக முடியும் என்று நினைத்தாயா, நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார்.

இந்த செய்தி எப்படி ஊடகங்களில் வந்தது என்பது குறித்து யோகிஜி ஆத்திரத்தில் இருந்தார். நான் எனது அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறேன் நான் எந்த ஊடகத்துக்கும் எதையும் தெரிவிக்கவில்லை. அவர்கள் ஏற்கனவே, அந்த இரவே அங்கு இருந்தனர். காவலர்கள் எனது வீட்டுக்கு வர தொடங்கினர் அவர்கள் என் குடும்பத்தை மிரட்டினார், சித்திரவதை செய்தனர். அவர்கள் என்னை என்கவுண்டர் செய்யக்கூடும் என்று மக்கள் என்னை எச்சரித்தனர். என் குடும்பம், என் அம்மா, என் மனைவி, என் குழந்தைகள் என்று அனைவரும் நான் வார்தையற்று நிற்பதை பார்த்து பயந்தனர்.

நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை எனவே எனக்கு நீதி கிடைக்கும் எனும் நம்பிக்கையில், அவமானத்திலிருந்தும், துயரத்திலிருந்தும் தப்பிக்கவேண்டி நானே சரணடைந்தேன்.

ஆனால் ஆகஸ்ட் 2017லிருந்து ஏப்ரல் 2018 வரை நாட்களும், வாரங்களும், மாதங்களும் மட்டுமே கடந்தன. ஹோலி வந்தது, தசரா வந்தது, கிருஸ்துமஸ் வந்தது, தீபாவளி வந்தது, புத்தாண்டு வந்தது ஒவ்வொரு நாளும் பிணை கிடைத்துவிடும் எனும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன். பிறகு தான் நீதி துறையும் எங்கிருந்தோ கொடுக்கப்படும் அழுத்தத்தின் கீழ் இயங்குவதை உணர்ந்தோம் [அவர்களே அதை ஒத்துக் கொண்டார்கள்].

இரவில் பல லட்சம் கொசுக்களும், பகலில் பல்லாயிரம் ஈக்களும் மொய்க்கும் ஒடுங்கிய கிடங்கில் 150 கைதிகளுடன் உறங்குகிறேன். உயிர்வாழ வேண்டி உணவை விழுங்குகிறேன். அரை நிர்வாணமாய் குளிக்கிறேன், பாதி உடைந்த கதவுகளை கொண்ட கழிவறையில் மலம் கழிக்கிறேன். என் குடும்பத்தை சந்திக்க வேண்டி ஞாயிற்றுக்கிழமைக்காகவும், செவ்வாய் கிழமைக்காகவும், வியாழனுக்காகவும் காத்திருக்கின்றேன்.

வாழ்க்கை எனக்கு மட்டுமல்லாது என் குடும்பத்துக்கும் நரக வேதனையாக தான் நகர்கின்றது. நீதி வேண்டி அவர்கள் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு காவல் நிலையத்திலிருந்து நீதிமன்றத்துக்கு, கோரக்பூரிலிருந்து அலகாபாத்துக்கு, ஓடிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கின்றது ஆனால் எல்லாம் வீண் வேலையாக தான் இருக்கின்றது. என் மகளின் முதல் பிறந்தநாளை என்னால் கொண்டாட முடியவில்லை அவளுக்கு இப்பொழுது ஒரு வயது ஏழு மாதங்கள் ஆகிறது. ஒரு குழந்தை மருத்துவனாக தன் குழந்தை வளர்வதையே காண முடியாமல் இருப்பது வேதனையையும், துயரையும் தருகின்றது. குழந்தைகள் மருத்துவராக குழந்தைகளின் ஒவ்வொரு மைல் கல்லின் முக்கியத்துவத்தையும் பெற்றோர்களுக்கு வலியுறுத்துக்கொண்டே இருப்பேன் ஆனால் என் குழந்தை எப்போது நடந்தாள், உறங்குகின்றாள் என்று எனக்கு தெரியவில்லை.

எனவே, என்னை தொடர்ந்து வருத்தும் அதே கேள்வி - நான் உண்மையில் குற்றவாளியா? இல்லை இல்லை இல்லை.

நான் ஆகஸ்ட் 10 2017 அன்று விடுமுறையில் இருந்தேன் [என் துறை தலைவர் அதற்கு ஒப்புதல் அளித்திருந்தார்] இருந்தும் என் வேலையை செய்ய விரைந்தோடினேன் - அது குற்றமா? மிகவும் இளம் மருத்துவனான நான் 8.8.16 அன்று தான் நிரந்திர பணியில் சேர்ந்தேன். தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் நோடல் அதிகாரியாக இருதேன், ஒரு குழந்தைகள் நல மருத்துவனாக மாணவர்களுக்கு வகுப்பெடுத்தேன், குழந்தைகளுக்கு வைத்தியம் செய்தேன்.

நான் திரவ ஆக்சிஜன்/ பெரிய உருளைகளை வாக்குவதிலோ, ஏலத்திலோ, பராமரிப்பிலோ சம்பந்தப்படவில்லை. புஷ்பா நிறுவனத்தார் திரவ ஆக்சிஜன் வழங்கலை நிறுத்தியதற்கு நான் எப்படி காரணமாக முடியும்?. மருத்துவ துறையில் இல்லாதவர்களுக்கு கூட தெரியும் மருத்துவரின் வேலை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தானே அன்றி ஆக்சிஜன் வாங்குவது இல்லை என்று. புஷ்பா நிறுவனத்தார் தங்களுக்கு வரவேண்டிய 68 லட்சம் ரூபாயை பெறவேண்டி அனுப்பிய 14 நினைவூட்டல்களுக்கு எந்த வேலையும் செய்யாத கோரக்பூர் மாவட்ட சுகாதார அதிகாரியும், மருத்துவ கல்விதுறை தலைவரும், முதல்வரும், செயலாளரும் தான் குற்றவாளிகள். இது உயர் மட்டத்தில் நடந்த மொத்த நிர்வாக தோல்வி. அவர்கள் இந்த விடயத்தின் வீரியத்தை உணரவில்லை. அவர்கள் தப்பிக்க எங்களை பலியாடுகளாக்கி கம்பிகளுக்கு பின்னால் அடைத்து விட்டுட்டனர், மனிஷுக்கு பிணை கிடைத்த போது நமக்கும் நீதி கிடைத்துவிடும் நாமும் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வோம், மீண்டும் பணிக்கு திரும்புவோம் எனும் நம்பிக்கை ஒளி தென்பட்டது. ஆனால் நாங்கள் இன்னும் காத்திருக்கின்றோம்.

பிணை உரிமை, சிறைவாசம் விதிவிலக்கு என்று உச்ச நீதிமன்றம் கூறுகின்றது. ஆனால் இதுவே (எங்கள் வழக்கே) நீதியின் சிதைவுக்கான சரியான உதாரணம்.

என் குடும்பத்துடனும், என் மகளுடனும் சுதந்திரமாக வாழும் ஒரு காலம் வரும் என்று நம்புகிறேன்.உண்மை வெளிவரும், நீதி நிலைநாட்டப்படும்.

உதவியற்ற, இதயம் உடைந்துபோன ஒரு தந்தை/கனவன்/சகோதரன்/மகன்/நண்பன்

மருத்துவர்.கபீல் கான்

18.4.18

ஆங்கில மூலம்



Comments

  1. Great article with excellent idea! I appreciate your post. Thanks so much and let keep on sharing your stuffs.
    Tamil News | Latest Tamil News | Tamil Newspaper

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள்: வெறுப்பை ஜனநாயகப்படுத்தும் அழகியல்!

0. பெருந்தொற்று குறித்த செய்தி என்னை வந்து சேர்ந்த போது, நான் எனது சீனப் பயணத்திற்கு தீவிரமாக தயாராகி கொண்டிருந்தேன். ஒரு வேளை பெருந்தொற்று என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால், நான் இந்த பிரதியை பெய்ஜிங்கிலிருந்து எழுதியிருக்கக்கூடும். அந்த நேரத்தில் அது பெருந்தொற்றாக உருவாகியிருக்கவில்லை. மாறாக, சில நூறு மனிதர்களை நிமோனியா போன்ற விளைவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் யாரும் அறியாத கிருமியாக, தொலைதூர செய்தியாக இருந்தது. கோவிட்-19 பெருந்தொற்று நான் வாழ்ந்த நகரத்தை வந்தடைய மூன்று மாதங்களானது. உலக சுகாதார நிறுவனம் அதை ஒரு தொற்றுநோயாக அறிவித்த அந்த இரவில் நண்பர் ஒருவர் பின்வரும் வாட்சப் செய்தியை அனுப்பியிருந்தார்: “நாம் அனைவரும் வீடு திரும்பும் நேரம் வந்துவிட்டது. பிரிந்து கிடக்கும் மனித இனம், ‘மனிதர்’ எனும் ஒற்றை அடையாளத்தின் கீழ் ஒன்றினையும் அற்புதமான சூழலை கண்களுக்கு புலப்படாத சிறிய கிருமி உருவாக்கி இருக்கின்றது” 1. மார்ச் 2019க்கு பிறகு மனித இருப்பு அதிக சிக்கலானதாகவும், இதுவரை இல்லாத அளவில் மெய்நிகரானதாகவும் மாறியது. கோவிட் -19 பற்றிய செய்திகள் இணையம் மற்றும் தொலைக்காட்சி திரைகளை நிரப்பின. போ...

In the most health-obsessed society ever, all is not well*: On Trauma

1 Philosopher Byung-Chul Han's essay Neuronal Power begins with the following lines: " Every age has its signature afflictions. Thus, a bacterial age existed; at the latest, it ended with the discovery of antibiotics. Despite widespread fear of an influenza epidemic, we are not living in a viral age. Thanks to immunological technology, we have already left it behind. From a pathological standpoint, the incipient twenty-first century is determined neither by bacteria nor by viruses, but by neurons ". Modern integrative body mind science defies Byung-Chul Han’s statement, that it is reductive to define human suffering solely in terms of ailments. However, we are living in an era, where production relations dictate nearly everything about human existence, in this specific context Byung-Chul Han’s statement—that the majority of human society is afflicted by mental or neuronal issues—serves as a foundational lens to understand contemporary humans and their struggles. In today’...

படுகொலைக்கு முன்னான சில மணி நேரங்கள்

    ஏதும் செய்வதறியாது நான் அப்படியே அமர்ந்து கிடக்கிறேன் , எத்தனை மணி நேரங்கள் என்று நிச்சயம் தெரியவில்லை . அந்த தகவல் எனக்கு சொல்லப்பட்ட   நொடியிலிருந்து நான் இப்படியே தான் அமர்ந்திருக்கின்றேன் , ஒரு துளிக்கூட அசைவில்லாமல் ஊரின் எல்லையில் அசையாது கிடக்கும் வேடியப்பனை போல் . கண்களில் லேசாக கண்ணீர் வருவதுபோல் இருக்கிறது ஆனால் வரவில்லை வந்தும் ஒரு பயனும் இல்லை . உடல் நடுங்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை , இறுகிப்போன உடலை விட்டு வெளியேறும் மூச்சு காற்றை கூட என்னால் உணரமுடியவில்லை . அதே நேரம் ஒளியற்று , ஆண்டுகளாய் இருண்டு கிடக்கும் அந்த அறையின் காற்றில் பிசுபிசுப்புடன் கலந்திருந்த உயிரின் வெப்பம் என்னை தீண்டி செல்கிறது , சூடான மழைத் துளியை போல் . மூளை சீரற்று யோசித்து கொண்டிருக்கிறது ... அம்மாவின் முலை காம்புகள் , விபத்தொன்றில் மரணித்த நன்பன் , தேர் திருவிழா , அப்பா கைபிடித்து கழனிக்கு கூட்டி சென்ற முதல் நாள் , அவளின் முதல் முத்தம் , இதுவரை முகம் பார்க்காத மகனின் கணவு முகம் , கல்லூரியின் விடுதி அறை , முதல் காமத்தின் வெள்ளை இரவு ... இப்படி சொல்லி ம...